எல்லாம் பொய் - நங்கநல்லூர் J K SIVAN
என் அன்பு நண்பர்களே, உங்களில் எத்தனை பேர் மாணிக்க வாசகரின் திருவாசகம் மனமுருக படித்திருக்கிறீர்கள்.. பகவானிடத்தில் சரணடைவது பற்றி எண்ணியவர்கள். எல்லோரையும் விட ஏன் மாணிக்க வாசகர் எழுத்துக்கு மட்டும் இவ்வளவு சிறப்பு? ''திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்'' என்று எப்படி பேர் வந்தது?
தனது வாழ்நாளின் ஒவ்வொருநாளின் ஒவ்வொரு கணத்தையும் சிவன் பால் வைத்தவர். சித்தத்தை சிவன் பாலே வை என்றவர் மணிவாசகர். அவர் வாசகங்கள் மணி மணியானவை என்பதால் தான் அவர் மணிவாசகர்.
இன்று ஒரு பாடல் படித்தேன். அதை மட்டும் சொல்கிறேன். ருசி பாருங்கள்.
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே''
பரமேசா, நான் எனது இனிஷியல், பெயர், பட்டம், பதவி, பணம், உருவம், உடல் அழகு, என் போட்டோக்கள், என் நகைகள், சகலமும் சுத்த பொய் . நான் ஒரு சும்மா.
எனக்குள் ஒரு மனம் என்று இருக்கிறதே அடேயப்பா, அதைப்போல ஒரு ரௌடி கிடையாது. ரொம்ப ரொம்ப அநியாய மானது. அதுவும் பலே பொய். எப்படியெல்லாம் என்னை ஆட்டிவைக்கிறது!
நான் மற்றவர்களிடம் இருப்பது காட்டிக்கொள்ளும் அன்பு இருக்கிறதே அதுவும் ஒரு வடிகட்டின பொய். சிவாஜி கணேசனை விட உயர்ந்த நடிப்பு.
ஆனால் ஏதோ எப்போதோ செய்த முன் ஜென்ம புண்யத்தால் மேலே சொன்னதை எல்லாம் உணர்ந்து என்னைப்பற்றி நன்றாக தெரிந்துகொண்டு ''பகவானே, நீ ஒருவன் தான் மெய், சத்யம், என்று உன்னை அடைய உருகி உருகி அழுகிறேன் பார், அது பொய் இல்லை. அது உனக்கே தெரியும். அதால் தான் உன்னை அடைய என்னால் முடியும், அதனால் தான் உன்னை மனமுருக கெஞ்சுகிறேன்,
நீயே என் தேன் , அமுது, கரும்பு ரஸம், மற்றதெல்லாம் பொய் . நீ ஒருவன் தான் எனக்கு உன்னை அடையும் வழியை காட்ட முடிந்தவன். அதற்கு அருள் புரிவாயப்பா.
No comments:
Post a Comment