சந்தியாவந்தனம் -- #நங்கநல்லூர்_J_K_SIVAN
தினமும் संध्यावन्दनम्, sandhyāvandanam, சந்தியாவந்த
னம், பண்ணவேண்டும் என்று எல்லோரும் சொல்கி றார்கள். சந்தியா என்பது யார் பெயரோ அல்ல. அவளுக்கு குட் ஈவினிங் என்று வந்தனம் செலுத்து வதாக நினைக்க வேண்டாம்.
ஸந்த்யாதேவி ப்ராஹ்மி, ரௌத்திரி, வைஷ்ணவி என்ற மூன்று உருவும் பெயரும் கொண்டவள். பிரணவ ரிஷி ஸந்த்யாவனந்த ரிஷி.
உபநயனம் எனும் பூணல் போட்டுவிட்டபின் ஆரம்பிக் கும் இது அவன் கடைசி மூச்சு வரை தொடர்கிறது. மோக்ஷ மார்க்க வழிபாடு. ராமாயணம் மஹா பாரதம் ரெண்டுமே ராமனும் கிருஷ்ணனும் சந்தியாவந்தனம் செய்ததை சொல்கிறது. ராமாயணத்தில் பால காண் டம் (23.2, 23.2) ஸ்லோகம் விஸ்வாமித்ரர் ராம லக்ஷ்ம ணர்களை துயிலெழுப்பி ''பொழுது விடிந்தது. எழுந்திருங்கள் சந்தியாவந்தனம் பண்ணுங்கள்'' என்று சொன்னதை கூறுகிறது.
மஹா பாரதத்தில் உத்தியோகபர்வத்தில் (82.21) கிருஷ்ணன் சந்தியாவந்தனம் செய்ததை சொல்கிறது. அந்திவேளை என்று சொல்கிறோமே இரவும் பகலும் சந்திக்கும் வேவேளை சந்தியா காலம்.
காலையில் காயத்ரி, வெண்ணிறம் கொண்டவள். நண்பகல் சாவித்ரி, சிவப்பு நிறத்தவள், சாயந்திரம் சரஸ்வதி, கருநீலக்காரி .
காயத்ரி மந்திரத்தை சொல்லி அர்க்கியம் விடுவது தான் சந்தியாவந்தனம்.
காயத்ரி மந்திரம் 24 அக்ஷரங்களை கொண்டது.1.tat (तत्), 2.sa (स), 3.vi (वि), 4.tur (तुर्), 5.va (व), 6.re (रे), 7.ṇi (णि), 8.yaṃ (यं), 9.bhar (भर्), 10.go (गो), 11.de (दे), 12.va (व), 13.sya (स्य), 14.dhī (धी), 15.ma (म), 16.hi (हि), 17.dhi (धि), 18.yo (यो), 19.yo (यो), 20.naḥ (नः), 21.pra (प्र), 22.co (चो) 23.da (द) and 24.yāt (यात्).
ஒரு நாளை,24 மணி நேரத்தை, ஐந்தாக பிரிக்கிறோம். ஒவ்வொரு பிரிவும் 2மணி 24 நிமிஷ காலம்.அவற்றுக்கு பெயர்கள் உண்டு.
ப்ராதக் காலம். prātaḥ-kālaḥ விடிகாலை.
பூர்வாஹ்ன காலம் pūrvahna முற்பகல்.
மத்யானம் madhyāhna உச்சி வேளை .
அபராஹ்ன காலம். aparāhna சாயந்திரத்துக்கு முற் பகல்.
சாயஹ்ன sāyāhna சாயந்திரம்.
ஸந்த்யாகாலம் மொத்தத்தில் 72 நிமிஷ நேரம். ப்ராதஸ் சந்தியா நேரம் சூர்ய உதயத்துக்கு முன்பு. அதாவது காலை 6 மணிக்கு சூர்யாஉதயம் என்று வைத்துக் கொண்டால் 5.12 am ஆரம்பம். மத்தியானம் அதே போல் 11.24 am முதல் 12.36pm வரை. சாயங்காலம் சந்தியா வந்தன நேரம் 5.36 pm -6.48pm வரை. குறித்த நேரத்தில் பண்ண முடியாவிட்டால் 2 மணி நேரம் அவகாசத்தில் பண்ணிவிடலாம். இது concession
கிழக்கே பார்த்து அமர்ந்து சந்தியா வந்தனம் பண்ணவேண்டும்.
மத்தியானம் வடக்கு பார்த்து.
சாயந்திரம் மேற்கே பார்த்து.
ஒரு ஸ்லோகம் என்ன சொல்கிறது""yatsandhyāmupāsate brahmaiva tadupāsate" யத் சந்தியா முபாஸதே ப்ரஹ்மைவ ததுபாஸதே- அதாவது எவன் இப்படி ஸந்த்யாவந்தன உபாஸனையை பண்ணுகிறானோ, காயத்ரியை வழிபடுகிறானோ, அவன் பரப்ரம்மத்தை அல்லவோ வழிபடுகிறான். மோக்ஷம் அவனுக்காக காத்திருக்கிறதே.
காசு பணம் செலவில்லாமல் இப்படி மோக்ஷம் கிடைக்கும் வழி இருக்கும்போது யாராவது இதை தவிர்க்கலாமா?
No comments:
Post a Comment