கலியுக கல்யாணம் - #நங்கநல்லூர்_J_K_SIVAN
கல்யாணம் என்பதை நமது தேச மக்கள் பல விதமாக பார்த்திருக்கிறார்கள் .
டிக்காத, இளம் வயது சிறுமிகள் மனைவி, நாட்டுப் பெண்களாகி பலருக்கு சமையல் செய்ய, துணி துவைக்க, எடுபிடி வேலை செய்ய, தோட்டத்தில் கிணற்றில் நீர் இறைத்து பளு தூக்க கூலியில்லாத வேலைக்காரிகளாக உபயோகப்பட்டார்கள். கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட சிறுமிகள் பலர். இறந்த கணவனோடு உயிரோடு எரிக்கப்பட்ட இளம் மனைவிகள் பலர்.
பிறகு வயதானவனுக்கு இளம் மனைவிகளாக. ரெண்டாம் மூன்றாம் மனைவியாக சிலர். காசுக்காக வசதிக்காக பெற்றோரால் விற்கப்பட்டவர்கள். .
இளம் வயதிலேயே விதவையானவர்கள் பல குடும்பங்களில் உள்ளார்கள். வெள்ளைக்காரன் நீதியும், சட்டமும் அவர்களை அப்போது பாதுகாக்க வில்லை எல்லாம் அனுபவித்து அவஸ்தைப் பட்ட பிறகு ராஜா ராம் மோகன்ராய் காலத்தில் தான் சாரதா சட்டம் துணைக்கு வந்தது. பாலிய விவாகம் நின்றது. பலதார மணம் நின்றது.
மஹா லக்ஷ்மி என்று போற்றப்பட்ட பெண் ஏனோ போகப்பொருளாகவே இருக்கிறாள். உரிமை இழந்து அடிமையானாள். வம்சங்கள் சீர் குலைய ஆரம்பித்தன. பின்னர் வந்த மாற்றங்கள் எதிர்பாராத விளைவைத் தந்துவிட்டன .
பாரதி கனவுகண்ட புதுமைப் பெண்கள் தோன்றி னார்கள். புதியன புகப்புக பழமை மறைந்தது. காலம் செல்லச் செல்ல பொருத்தம் பார்த்த ஜாதகங்கள் ஜாதகர்களை பொருந்த வைக்கவில்லை.
தற்போதுள்ள நிலையில் பெண்ணும் ஆணும் சமம், சம உரிமை. இல்லறத்தில் பொறுப்புகள் மாறிவிட்டன. இப்படிப்பட்ட மாற்றத்தால் பாரம்பரிய பழக்கங்கள் மறைந்து ஆணும் பெண்ணும் மனோ ரீதியில் ஒற்று மை அற்றவர்களாக மாறிவிட்டதால் திருமணங் கள் முறிகிறது. பெற்றோர்கள் திகைக்கிறார்கள். அவரகள் தான் சிலவற்றிற்கு ஆதி காரணம் என்பது மறந்து போகிறது. தமிழில் திருமணத்தை ''கடி மணம் '' என்று படிக்கிறபோது ஒருவரை கடித்துக் கொள்ளும் திருமணம் தான் இப்போது என்று ஏனோ புரியவில்லை.
இந்த நிலையில் ஆணும் ஆணும் மணம் புரிந்து கொள்ளும் அவலம் உருவாகிவிட்டது.
கலியுகம் மாறுதல்களை தரும் என்பது உண்மைதான்.
No comments:
Post a Comment