ஆதி சங்கரரின் வினா விடை - #நங்கநல்லூர்_J_K_SIVAN
பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா.
११. नलिनीदलगतजलवत्तरलं किं? यौवनं धनं चायुः। कथय पुनः के शशिनः किरणसमानाः? सज्जना एव॥
nalineedalagatajalavattaralam kim? Yauvanam dhanam chaayuh Kathaya punah ke shashinah kiranasamaah? Sajjanaa eva
28. ''எது தாமரை இலை மேல் நீர்த்துளி போல் அநித்யமானது.?
''இளமை, செல்வம், ஒருவனது ஆயுசு, எதுவுமே நிரந்தரமானது அல்ல. ஒரு காரண்டீயும் கிடையாது.
29. சந்திரனின் கிரணங்கள் போல் மக்களை மகிழ்விப்பவர்கள் யார் என்று சொல்ல முடியுமா?"
சத் சங்கமான நல்லவர்கள் தான்.
१२. को नरकः? परवशता, किं सौख्यं?सर्वसङ्गविरतिर्या। किं साध्यं भूतहितं, प्रियं च किं प्राणिनां? असवः॥
12. Ko narakah? Paravashataa, kim saukhyam? Sarvasangaviratiryaa Kim saadhyam? Bhootahitam, priyam cha kim praaninaam? Asavah
30. '' நரகம் என்கிறார்களே அது எது ?''
இன்னொருவன் பிடியில், அதிகாரத்தில், எப்போதும் சிக்கி இருப்பது தான் நரகம்.
31. ''எது சந்தோஷம்?''
பற்றுகள் எல்லாவற்றையும் விட்டொழித்தால் மட்டுமே நிம்மதியும் சந்தோஷமும் பெற முடியும்.
32. ''எதை அடைய முயற்சிக்கவேண்டும்?''
எல்லா உயிர்களுக்கும் நல்லதே செய்வதை.
33.''எல்லா ஜீவன்களுக்கும் எது அரிதானது?''
அதனதன் பிராணன், அதாவது உயிர் சக்தி.
१३. कॊऽनर्थफलो? मानः, का सुखदा? साधुजनमैत्री । सर्वव्यसनविनाशे को दक्षः? सर्वथा त्यागी॥
13. ko’narthaphalo? Maanah, kaa sukhadaa? Saadhujanamaitree Sarvavyasana vinaashe ko dakshah? Sarvathaa tyaagi.
34. எது துர்பாக்யமானது?
அகம்பாவம், தன்னைப்பற்றிய உயர்வான தப்பபிப்ராயம் ஏமாற்றத்தில் தான் முடியும்.
35. 'எது மகிழ்ச்சியை தரக்கூடியது?''
நல்லவர்களின் நட்பு.
36.''துயரத்திலிருந்து, துன்பத்திலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள யாரால் முடியும்?''
எல்லாவிதத்திலும் எல்லாவற்றையும் துறப்பவனை ஒருபோதும் துயரம், கஷ்டம், துன்பம் எதுவும் நெருங்காது.
No comments:
Post a Comment