Monday, August 15, 2022

BADRAGIRIYAR PULAMBAL

 பத்ரகிரியார் புலம்பல்   -   நங்கநல்லூர்  J K  SIVAN   --


கண்ணுக்கு தெரியவில்லை என்பதால்  காற்று  என்பதே கிடையாது என்று சொல்லலாமா?, உணர்கிறோம்,  சுவாசிக்கிறோம்.....அதனால் உயிர் வாழ்கிறோம். அது மாதிரி தானே, எள்ளுக்குள்  எண்ணையும் ,மலருக்குள்  மணமும்,  கரும்புக்குள் இனிமைச் சுவையும் நிரம்பியுள்ளது.  அப்படித்தான்  உள்ளும் வெளியே அண்ட பகிரண்டத்திலும்  பகவான் இருக்கிறான்.   அகப்பொருள்  புறப்பொருள் ரெண்டும் அவனே.

கரும்பை தின்றவன் அது தித்திப்பு, எள்ளைபிழிந்தவன் அதில் என்னை இருக்கிறது,  மலரை முகந்தவன் அது நறுமண ரோஜா, என்று சொன்னதை நாம் அதை அனுபவிக்காமலேயே  ஏற்கிறோம். அப்படித்தான் உள்ளும் புறமும் ஆன்மாவை, பரமாத்மாவை கண்ட  மஹான்கள் சொல்வதை அப்படியே ஏற்க வேண்டும்.  இதை தான் பத்ரகிரியார்

''எள்ளும் கரும்பும்  எழு மலரும் காயமும் போல்உள்ளும் புறமும் நின்றது உற்றறிவதெக்காலம்?''  என்கிறார்  மனித உடலில் ஆன்மாவாய்  பகவான்  இருக்கிறான்   என்றால் நம்ப யாருமில்லை.   இந்த உண்மையை உணர்ந்து நான்  பரமேசா, உன்னை அறிவது எப்போது?'' என்கிறார்.

உயிர்களைக் கொன்று  அவற்றின் மாமிசங்களைப் புசிப்பது தவறு, பாபம். அதை செய்யவேண்டாம் என்கிறார்.  எவ்வுயிரையும் தன்னுயிராக  பாவிக்கவேண்டும் என்கிறார். அதுவே  நற்றவம் என்கிறார்:

'' மன்னுயிரைக் கொன்று வதைத்துண்டு உழலாமல் தன்னுயிர்போல் எண்ணித் தவம் முடிப்பது எக்காலம்? என்கிறார்

 "மூன்று வளையம் இட்டு முளைத்தெழுந்த கோணத்தில்  தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்?"

மூன்று வளையம் என்று   மூலாதாரம், வெளி அல்லது பள்ளியறை எனப்படும் சுழுமுனை மற்றும் சக்தியை சுழுமுனைக்கு கொண்டு சேர்க்கும் பாதை அதாவது காலம்  ஆகியவற்றை சொல்கிறார்.

காலம் இல்லாவிட்டால் எதுவுமே  நகராதே .இந்த மூன்று வளையங்களும்   அண்டம் வெளி,  சக்தி  TIME, SPACE,  ENERGY  என ஒன்றோடொன்று பிணைந்த வலையங்களால் ஏற்படும் முக்கோணம் தான் ருத்ரன்.
எப்போது என் மனம் குண்டலினி சக்தியை பிரயோகித்து  யோகமார்க்கமாக ஸஹஸ்ராரம் வரை சுழுமுனையில் பிரவேசித்து ருத்ரா, உன்னை அதில் கண்டு ஆனந்திப்பது??  என்கிறார். 

நாம்கவலையே படவேண்டாம்.  இன்னும்  பல ஜென்மங்களுக்கு நாம் இதெல்லாம் படித்துக் கொண்டே
யாவது இருப்போம். ஒருநாள் நாமும் கடைத்தேறலாம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...