ஆடி பதினெட்டு - #நங்கநல்லூர்_J_K_SIVAN
இன்று விடியற்காலை கதவை திறந்தேன். லேசாக மழை வரவேற்றது. மகிழ்ச்சி மனத்தையும் குளிர்வித்தது.
ஆஷாட மாசம் எனப்படும் ஆடி தெய்வீக மாசம். லௌகீகம் ரொம்ப கலக்காதது. கடை வியாபாரிகள் மட்டும் கவனத்தை ஈர்க்க ''ஆடி விசேஷ தள்ளுபடி'' கொடுப்பதாக தங்கள் பக்கம் இழுப்பார்கள். இந்த ஆடியில் மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு நாள் ,
எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் நாள் ஆடிப்பெருக்கு எனும் 18ம் பெருக்கு. அது இன்று. இந்த ஒரு பண்டிகை தான் நக்ஷத்ரம் திதி எல்லாம் பார்க்காமல் வெறும் தமிழ் தேதியை மட்டும் நினைவு வைத்துக்கொண்டு கொண்டாடுவது. பஞ்சாங்கம் இதற்கு தேவையில்லை. எல்லா வீடுகளிலும் பலவித சித்ரான்னம், வாசலில் வண்ண கோலங்கள் காணப்படும் நாள்.
ஆங்கில மாதம் ஜூன்-ஜூலை முதல் தென்னகத்தின் மேற்கே மலைகளில் தென்மேற்கு பருவக் காற்றால் உந்தப்பட்டு பொழியும் மழைநீர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பெருகி ஆறுகளாக ஓடும். இருக்கும் அத்தனை ஆற்றிலும் நீரின் வரத்து அதிகமாகும்.
பதினெட்டு தேதிகளில் அணைக்கட்டு நிரம்பி காவிரிக்கு நீர் திறந்து விடுவார்கள். தஞ்சை ஜில்லா டெல்டா பிரதேசங்களில் கொண்டாட்டம்.
இந்த ஆடி 18ம் நாள் தான் ஒரு மஹா வீரன் குதிரை மேல் ஏறிக்கொண்டு வீராணம் ஏரிக்கரையில் வந்து கொண்டிருந்தான் என்று வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனை தனது அமர காவியமான ''பொன்னியின் செல்வனில்'' கல்கி அறிமுகப்படுத்தியது நினைவுக்கு வருகிறது.
அந்த ஏரி கடல் போல் விரிந்து பரந்து காணப்படுவது. தமிழகத்துக்கு முக்கியமாக சென்னை மாநகரத்துக்கு இப்போது நீர் தரும் வள்ளல்.
ஆடிப்பெருக்கின் போது சோழ நாட்டு நதிகளில் எல்லாம் தண்ணீர் வெள்ளமாக நிரம்பி, கொள்ளிடம் வழியாக வீராணம் ஏரிக்குள் நீர் குபுகுபு என்று புகும். அழகே தனி. விவசாயிகளுக்கு குதூகலம், ஆடிப்பட்டம் தேடி விதைப்பவர்கள் அல்லவா? ஆறுமாதத்தில் தைமாதத்தில் அறுவடை, பொங்கல் விழா நடக்கும்.
ஆடிப்பெருக்கு அன்று கிராமத்தில் குழந்தைகள் தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு விலாயுடுவதை மக்கள் கும்பலாக ரசிப்பார்கள். பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங் எல்லோரும் புத்தாடை அணிந்து மகிழ்வார்கள். தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அவர்கள் சிரங்களை அலங்க ரிக்கும். வட்டமாக முட்டு முட்டாக குடும்பத் தினர், நண்பர்களோடு, கரையோரங்களில் பாக்கு மட்டை களில், வாழை இலைகளில், வித வித சித்திரான் னம் உண்பார்கள். காவேரியில் வெள்ளம் பெருக்கெடுத்தால் சோழ நாட்டு வயல்கள் செழிக்கும், தமிழக மக்கள் வயிறு நிரம்பும். நடந்தாய் நீ, இப்போது ஓடம்மா, வாழி காவேரி என்று பாட தோன்றும்.
ஆடிப்பெருக்கு தான் ஆரம்பம். இனிமே மழை கொட்டோ கொட்டோ என்று கொட்டி தீர்க்க போகிறது என்று எல்லோரும் மகிழும் நாள் ஆடி பதினெட்டு.
No comments:
Post a Comment