நீங்கள் என்ன கோத்ரம்? #நங்கநல்லூர்_J_K_SIVAN
இப்படி கேட்பது ஒரு வழக்கமான கேள்வி. முக்கியமாக இது பிராமணர்கள் சந்திக்கும்போது உருவானது.
கோத்ரம் என்றால் வம்சம் என அர்த்தம். இந்த கோத்திரங்கள் ரிஷிகளை முன்னோடிகளாக கொண்டது. அவர்களை கோத்ர ப்ரவர்த்தகர்கள் என்கிறோம்.அந்த முனிவர் ரிஷி வழிவந்தவர்கள் என்று பொருள்படும் வார்த்தை. முக்கியமான 7 ரிஷிகள் பெயர்கள் ப்ருகு, ஆங்கீரஸர், அத்ரி, விச்வாமித்ரர், வஸிஷ்டர், கச்யபர், அகஸ்த்யர். இதில் என்ன விசித்திரம் என்றால் சில கோத்திரங்களுக்கு ஒரு ரிஷி, ரெண்டு ரிஷி, மூன்று ரிஷி ஐந்து ரிஷி, ஏழு ரிஷிகள் பெயர்களை ப்ரவரமாக கொண்டது.
கோத்திரங்கள் எல்லா இனத்தவருக்கும் உண்டு என்றாலும் பிராம்மணர்களிடையே இது பரவலாக பழக்கத்தில் உள்ள விஷயம். கோத்ரம் தெரியாதவர் கள் சிவ கோத்திரம், விஷ்ணு கோத்திரம் என்று பின்பற்றுகிறார்கள்.
பெண்களும் தங்களின் கோத்திரத்தைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் கல்யாணமானவுடன் கணவன் வம்சத்தை சேர்ந்துவிடுவதால் அப்பா கோத்ரம் மாமனார் கோத்ரமாக மாறிவிடும்.ஆண்கள் கோத்திரம் மாறாது .
சுவீகாரம் போய்விட்டால் அந்த பையன் கோத்ரம் மாறிவிடும்.
கல்யாணங்கள் முக்கியமாக கோத்திரத்தின் அடிப் படையில் தான் நிச்சயமாகிறது. ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் சகோதர சகோதரிகள். ''சக உதரம்''
என்றால் ஒரே வயிற்றில் பிறந்தவர்கள் என்று அர்த்தம் ஆகவே ஒரே கோத்ரத்தை சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் நிச்சயமாவதில்லை. உடன் பிறந்தவர்கள் என்று கருதப்படுவதால் அந்நிய கோத்திரத்தில் நிச்சயமாகும். அதேபோல் ப்ரவரத்தில் ஒரே ரிஷியின் பெயர் இருந்தால் கல்யாணம் பண்ணுவதில்லை.
ஆணின் கோத்திரம் ஓமதக்னி. பெண்ணின் கோத்திரம் கர்கிய. ஓமதகனியும், கர்கியரும் வேறு வேறு ரிஷிகள் என்றிருந்தாலும் இவர்கள் பிருகு வம்சத்தில் வந்தவர்கள் என்பதால் பிரவரத்தில் ப்ருகு ரிஷியின் பெயர் கட்டாயம் இருக்கும். ஆக, இந்த இரண்டு கோத்திரங் களைச் சார்ந்த ஆண் பெண்களுக்கும் திருமணம் செய்ய கோத்திரப் பொருத்தம் இல்லை.
ஆண் பெண் திருமணத்திற்குப் பத்து வித பொருத் தங்கள் பார்ப்பதுண்டு. இதில் முதலாவது கோத்ர பொருத்தம்விஸ்வகர்மா வகுப்பினருக்கு ஐந்து கோத்திரங்கள் உண்டு. பஞ்ச கம்ஸலர்கள், கம்மாளர்கள். விஸ்வகர்ம பெருமக்கள் என அறியப்படுகிறார்கள். செய்யும் தொழிலைப்பொறுத்து கோத்ரம் தெரிந்துகொள்ளலாம்.
இரும்பு , மரம், கல், உலோகம், தங்கம் முதலிய பொருட்களை வைத்து பொருள்கள் படைக்கும் தொழிலைச் செய்யும் கைவினைஞர்கள் “விஸ்வகர்மா”க்கள் இரும்பு தொடர்பான தொழில் செய்பவர்கள் - சானக ரிஷி கோத்திரம்
தச்சு வேலை, மர வேலைக் கலைஞர்கள் – ஸநாதன ரிஷி கோத்திரம்
செம்பு பித்தளை, தாமிர உலோகத்தில் தேர்ந்த கலைஞர்களுக்கு – அபுவனஸ ரிஷி கோத்திரம்
சிற்பிகள், கல்லில் கலைவண்ணம் காண்போருக்கு – ப்ரத்னஸ ரிஷி கோத்திரம்
தங்கத்தில் தொழில் செய்யும் ஆசாரிகள் – ஸூபர்ணஸ ரிஷி கோத்திரம்
நமக்கு தெரிந்து தமிழகத்தில் விஸ்வகர்மாக்கள் தச்சர், பொற்கொல்லர், ஆச்சாரி, விஸ்வபிராமணர், சில்பி, கன்னார், தட்டார், கம்மாளர் என பல வகுப்பில் உள்ளார்கள். அநேகர் தமிழ், சிலர் தெலுங்கு பேசுபவர்கள் .
விஞ்ஞான முறையில் யோசிப்போம். ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் CHROMOSOMES உள்ளன. தாய் மூலம் 23 தந்தை மூலம் 23. பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயின் க்ரோமோசோம்கள் XX தந்தைக்கு XY . ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தை உருவாகிறது..இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தை பிறக்கிறது .
பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே. இதனால் தான் அந்த காலத்திலேயே ஒரே கோத்ரத் தில் கல்யாணம் பண்ணுவதில்லை. இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை. காரணம் அவள் மூலம் தான் வம்சம் பெருகும். புரியும்படி சொன் னால் பெண் எப்போதும் பெண்; 100% பெண்.XX. ஆனால் ஆண் 50% பெண் XY . சொந்தத்திலேயே பெண் பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணுவதால் கிரோமோசோம்கள் பலவீனமடைகிறது என்பதால் வேற்று கோத்திரத்தில் பெண், பிள்ளை, பார்க்கி றோம்.
சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப் படுகிறது.
No comments:
Post a Comment