Tuesday, August 16, 2022

AADHI SANKARA

 


ஆதி சங்கரரின் வினா விடை  -  நங்கநல்லூர்  J K  SIVAN 
ப்ரஸ்னோத்ர  ரத்ன  மாலிகா.

3०. कुत्र विधेयॊ वासः? सज्जननिकटेऽथवा काश्यां। कः परिहार्यॊ देशः? पिशुनयुतो लुब्धभूपश्च॥
30.  kutra vidheyo vaasah? Sajjananikate’thavaa kaashyaam  kah parihaaryo deshah? Pishunayuto lubdhabhoopashcha: 

71.ஒருவன் எங்கே வசிக்கவேண்டும்?
நல்லவர்களோடு  கூடி , சேர்ந்து, அவர்கள் அருகே அவனும்  வாழவேண்டும்.  இல்லையென்றால் காசிக்கு போய் அங்கே  வசிக்க லாம். 

72. எந்த இடத்தை தவிர்க்கவேண்டும்? 
மட்டமான வர்கள்,  தீய எண்ணங்கள்  செயல்கள் கொண்ட   கெட்டவர்கள் வர்கள் வாழும் இடத்தில்  வசிக்கவே கூடாது.  அதைவிட ஒரு படி மேலே போய் சொல்வதென்றால் சுயநலம், பேராசை, கருமித்தனமான ராஜா ஆளும் ராஜ்யத்திலேயே  இருக்கக்கூடாது.  (  அடே கிருஷ்ணா,  நாம் எங்கே போவது?)

३१  केनाशोच्यः पुरुषः?  प्रणतकलत्रेण धीरविभवेन।  इह भुवने कः शोच्यः? सत्यपिविभवे यो न दाता॥
31.  kenaashochyah purushah? Pranatakalatrena dheeravibhavena Iha bhuvane kah shochyah? Satyapivibhave yo na daataa
       
73.  ஒருவனை துயரத்திலிருந்து, துன்பத்திலிருந்து  எது விடுபட செய்கிறது?
இருப்பதை வைத்து திருப்தியாக  வாழத் தெரிந்த, அடக்கமான   சொற்படி கேட்கும்  மனைவியை  அடைந்தவன் பாக்கியசாலி. 

74.. இந்த உலகில் யாரைப் பற்றி ஒருவன் வருந்தவேண்டும்?
பகவான்  எல்லா வசதிகளையும், செல்வங்களையும் அளித்திருந்தாலும்  ஏழை எளியவர்களுக்கு, உதவாத மனம் கொண்டவர்களை பற்றி.

३२. किं लघुतायाः मूलं? प्राकृतपुरुषेषुयाच्ञा।  रामादपि कः शूरः स्मरशरनिहतो न यश्चलति॥
32.  kim laghutaayaa moolam? Praakrita purusheshu yaachjnaa  Raamaadapi kah shoorah? Smarasharanihato na yashchalati

75.  எந்தச்செயல்  ஒருவனைப் பற்றிய  வெறுப்பு,அவநம்பிக்கை , அருவருப்பு  உண்டாக்குகிறது?
மட்டமான, ரொம்ப கெட்டகுணங்கள் செயல்கள்  உடைய இழிவானவர்களிடம் யாசகம் பெறுவது.

76. ஸ்ரீ ராமனைக்காட்டிலும் வீரமான, கம்பீரமானவன் யார்?
மன்மதனின் காம அம்புகள்  மனதை துளைத்தாலும், துளியும்  தனது நிதானத்தை இழக்காதவன், நேர்மை தவறாதவன். சஞ்சலம் அடையாதவன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...