Tuesday, August 9, 2022

adhi sankara

 


ஆதி சங்கரரின் வினா விடை  -  நங்கநல்லூர்  J K  SIVAN 
ப்ரஸ்னோத்ர  ரத்ன  மாலிகா.

१४. किं मरणं? मूर्खत्वं, किं चानर्घं? यदवसरे दत्तं । आमरणात्किं शल्यं? प्रच्छन्नं यत्कृतं पापं॥
14. Kim maranam?  Moorkhatwam, kim chaanargham? Yadavasare dattam  Aamaranaath kim shalyam? Prachchhannam yatkritam paapam

37. எதை மரணம் என்கிறோம்?
அஞ்ஞானத்தை.  அறியாமையை. 

38. எது  விலைமதிப்பற்றது.?
சரியான, உரிய நேரத்தில், ஒருவனுக்கு  அத்யாவசியமாக தேவையானதை அவன் கேட்காமலேயே அளிக்கும் செயல். அப்படி அளிக்கப்பட்ட  பொருள், வஸ்துவும்  விலை மதிப்பற்றது. 

39. ஒருவனுக்கு மரணம் சம்பவிக்கும் வரை  எது முள்ளாக  அவன் மனத்தை உறுத்திக்கொண்டே இருக்கும்?
வெளியே  யாருக்கும் தெரியாமல்  அவன் மனதில்  ரகசியமாக உறையும் அவன் எப்போதோ யாருக்கோ செய்த  துரோகம், பாபம். 

 १५. कुत्र विधेयो यत्नो? विद्याभ्यासे सदौषधे दाने ।  अवधीरणा का कार्या? खलपरयोषित्परधनेषु ॥
15. kutra vidheyo yatno? Vidyaabhyaase sadaushadhe daane vadheeranaa kaa kaaryaa? Khalaparayoshitparadhaneshu

40. எங்கே  எதன் மீது ஒருவனின்  நோக்கம்  இருக்கவேண்டும்.?
நல்ல விஷயங்களைத் தேடுவதில், அறிவதில்.  மற்றும்  ஆரோக்யமான நோய் குணப்படுத்தும்  மூலிகை மருந்துகளை தேடிப் பெற்று,  தேவைப்பட்டவர்களுக்கு  அவற்றை வழங்குவதில் அவன் முயற்சி ஈடுபடவேண்டும்.

41. எதைப்பற்றி கவலையே சிறிதும் படக்கூடாது?
தீய  குணம் கொண்ட கெட்டவர்களை பற்றி எண்ணவே கூடாது. பிறர் உடைமை, பொருள்களைப்பற்றி ஒருபோதும்  விருப்பப்படுவதோ நினைப்பதோ கூடாது.

१६. काऽहर्निशमनुचिन्त्या? संसारासारता न तु प्रमदा।     का प्रेयसी विधेया? करुणा दीनेषु सज्जने मैत्री॥
16. kaa’harnishamanuchintyaa? Samsaaraasaarataa na tu pramadaa  Kaa preyasee vidheya? Karunaa deeneshu sajjane maitree

42. இரவும் பகலும் எதைப்பற்றி ஒருவன் சிந்திக்கவேண்டும்?
காணாமல் போகும் இந்த மானுட வாழ்வைப்பற்றி,  விலக்கவேண்டிய  சம்சார சுக துக்கங்களைப்பற்றி.

43. ஒருவனின் அன்பு இதன் மேல்  நிலைத்து இருக்க வேண்டும்?
எளியோர், ஏழைகளிடம்  தயை, கருணை,  அவர்கள் துன்பம் தவிர்ப்பதிலும்  நல்லோர்  நட்பு வளர்ந்திடவும் அவன் மனம் அன்பு நிலைத்திருக்கவேண்டும்.

१७. कण्ठगतैरप्यसुभिः कस्य ह्यात्मा न शक्यते जेतुम्?   मूर्खस्य शंकितस्य विषादिनो वा कृतघ्नस्य॥
17.  kanthagatairapyasubhih  kasya hyaatmaa na sakyate jetum? Moorkhasya shankitasya vishaadino vaa kritaghnasya

44.  எவனுடைய ஆத்மா அவன் மரணப்படுகையிலிருந்த போதும்  ஜெயிக்கமுடியாததாக  சாந்திபெறாததாக இருக்கிறது?  
அறிவைப்புகட்டினாலும் திருந்தாத, திருத்தமுடியாத  முட்டாளின் ஆத்மா.   அவன் தொடர்ந்து மூச்சு நிற்கும் வரை தூயரத்திலேயே  உழலும் நன்றியற்றவன்.

१८ कः साधुः? सद्वृत्तः कमधममाचक्षते? त्वसद्वृत्तं। केन जितं जगदेतत्? सत्यतितिक्षावता पुंसा॥
 18.  kah saadhuh? Sadvrittah kamadhamamaachakshate? Twasadvrittam  kena jitam jagadetat? Satyatitikshaavataa pumsaa

45. யார்  சாது என்பவர்?
எவருடைய  குணமும் நடத்தையும்   சொல்லும் செயலும் நல்லதாகவே எப்போதும்  மிளிர்கிறதோ, அவர் தான் சாது.A:  One whose conduct and character are good

46.  யாரை மோசமான குணம் படைத்தவன் என்று சொல்கிறோம்?
யாருடைய  குணமும் நடத்தையும், சொல்லும் செயலும் தீமை பயக்குபவையாகி இருக்கிறதோ அவனை.

47. யாரால்  இந்த உலகம்  வெற்றி கொள்ளப்படுகிறது?
யார்  சத்தியத்தில், உண்மையில்  நாட்டம் கொண்டு அதன்படி நடக்கிறாரோ, பொறுமை சாந்தத்தை  கடைப்பிடிக்கிறாரோ, அவர் தான் உலகை வென்றவர்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...