Wednesday, August 3, 2022

PRASNOTHRA RATHNA MALIKA

 ஆதி சங்கரர்  வினா  விடை -  நங்கநல்லூர்  J K  SIVAN 

ப்ரஸ்னோத்ர ரத்ன  மாலிகா 

நானோ  நீங்களோ இதற்கு விதி விலக்கு  அல்ல?
 ''சே, என்னடா வாழ்க்கை இது, அலுத்து போய் விட்டது. மிஷின் மாதிரி செஞ்சதையே  திருப்பி திருப்பி செஞ்சுண்டு,  சொன்னதையே  திருப்பி சொல்லிண்டு, என்னிக்கு இதிலிருந்து விடிவு காலம்?''   என்று என்றோ ஒருநாளாவது  நமக்கு  தோன்றாமல் இருக்கவே இருக்காது.

அது சரி தான்.  இப்படிப்பட்ட  ஸம்ஸார வாழ்வில் என்ன சாரம் இருக்கிறது?' என்று  தன்னையே கேட்டுக்கொண்டவர் 32 வயது நிரம்பாத  ஒரு   பிரம்மச்சாரி கேரள பிராமண மஹான்.  தன்னுடைய கேள்விக்கு தானே பதிலும் சொல்லி இருக்கிறார்.   அது தான்  ''பிரஸ்னோத்ர ரத்ன  மாலிகா ''   ஆதிசங்கரர் எழுதிய  அற்புதமான   ''கேள்வி பதில்  மணிமாலை''.  

'கிம் ஸம்ஸாரே ஸாரம்?'-  என்னய்யா  ஸாரம்  இருக்கிறது இந்த ஸம்ஸாரத்தில் ?   
(ஸம்ஸாரம்  என்றால் மனைவி இல்லை.  வாழ்க்கை.)
''என்ன ஸாரம்  என்றா கேட்டாய்?    நீ  இப்போ கேட்டாய் பார்த்தியா, அந்த கேள்வியையே அடிக்கடி உனக்குள்ளேயே  கேட்டுக் கொண்டிரு. அது தான் சம்சாரத்தின் ஸாரம், என்று அவரே பதில் சொல்லிவிட்டார்.

ஆதி சங்கரர்  கேள்வி பதில் 67 ஸ்லோகங்களாக இருக்கிறது. 
   
कः खलु नालंक्रियते दृष्टादृष्टार्थसाधनपटीयान् । अमुया कण्ठस्थितया प्रश्नोत्तररत्नमालिकया ॥
kah khalu naalamkriyate drishtaadrishtaarthasaadhanapateeyaan 
   Amuya kanthasthitayaa prashnottararatnamaalikaya

இந்த  உலகத்திலும்  இதை விட்டு போனதும் வரப்போகும் ஏதோ ஒரு உலகத்திலும் நமக்கு தேவையான விஷயங்களை அற்புதகமாக  கொண்ட  கேள்வி பதில்களை அறியாமல் விடலாமா?
 ஒரு அருமையான  ஆபரணம். மணி மாலை கண்ணில் பட்டால்  எவனா(ளா)வது கழுத்தில் சூடிக்கொள்ளாமல்  விடுவானா(ளா)? இனி அந்த மணிமாலையின் அழகை  ரசிப்போம்.

भगवन् किमुपादेयं? गुवचनं हेयमपिचकिम्?अकार्यं।  कॊ गुरुरधिगततत्त्वः शिष्यहितायोद्यतस्सततम् ॥
2. Bhagavan kimupaadeyam?  guruvachanam heyamapicha kim? akaaryam    Ko gururadhigata tathwah?  shishyahitaayodyatah satatam

''தம்பி,  நான் நீளமாக  கேள்வி கேட்டால்  அதைக் கேட்காமல்  நீ சிட்டாய் பறந்துவிடுவாய்.  குட்டி குட்டி கேள்வியாக கேட்கிறேன்.  நீ பதில் சொல்லமாட்டாய் என்று தெரியும். உனக்காக நானே யோசித்து  பதிலும் அதற்கு தருகிறேன். இப்போவாவது படிப்பாயா?  புரிந்து கொள்வாயா ? ''

1''எதை  அப்படியே  கொஞ்சம் கூட  தயக்கமில்லாமல், தடையில்லாமல் ஏற்றுக் கொள்ளலாம்?''
''குரு வின்  வாக்கை, உபதேசத்தை, அறிவுரையை''
2 ''எதை விட்டுத் தள்ளவேண்டும்?''
''தர்மம் நியாயத்துக்கு சத்தியத்துக்கு எதிரான  எந்த செயலையுயம் எண்ணத்தையும்  கை விடவேண்டும்''
3. ''குரு குரு என்கிறாயே  யாரப்பா குரு?''
''யார்  சத்தியத்தை நன்றாக  அனுபவத்தில் உணர்ந்தவரோ, எவர்  தனது சீடனின் நன்மையையே மனதில் ஆழமாக எண்ணுபவரோ அவர் தான் அவன் குரு''

 त्वरितं किं कर्तव्यं विदुषां? संसारसंततिच्छेदः।  किं मॊक्षतरॊर्बीजं? सम्यग्ज्ञानं क्रियासिद्धम् ॥
Twaritam kim kartavyam vidushaam?  samsaara santatichchhedah     Kim mokshatarorbeejam?  samyagjnaanam kriyaasiddham

4.  'புத்திசாலியான ஒருவன்  நேரத்தை வீணாக்காமல் செய்யவேண்டியது என்ன என்று சொல்?''
''எப்படி  இந்த  பிறப்பு இறப்பு வட்டத்திலிருந்து வெளியேறுவது என்ற சிந்தனை  ஒன்றைத்தான் விடாமல் தேடவேண்டும்''
'5.  'மோக்ஷம் என்பது ஒரு விருக்ஷம்,  மரம் என்று வைத்துக் கொண்டால் அதன் விதை எது?''
''நடைமுறையில்  உபயோகிக்கும், அதாவது கடைபிடிக்கும்  சத்தியமான ஞானம்'

कः पथ्यतरो? धर्मः कश्शुचिरिह? यस्य मानसं शुद्धं ।   कः पण्डितो? विवेकी किं विषं? अवधीरणा गुरुषु॥
 Kah pathyataro? dharmah, kah shuchiriha? Yasya maanasam shuddham     Kah pandito? Vivekee kim visham? avadheeranaa gurushu.
6. ''எது நிச்சயம் நன்மை பயக்கக் கூடியது?
''என்ன கேள்வி இது? சந்தேகமே இல்லாமல்  தர்மம் ஒன்று தான் நன்மை தரும்''
7. ''சரி  இந்த உலகில் சுத்தமானவன்  யார் தெரியுமா?  சொல்''
''எவன் மனது பளிங்கு போல் பரிசுத்தமாக  இருக்கிறதோ அவன்.  பேதம்  விருப்பு வெறுப்பு இல்லாத , அன்பு, பண்பு நிறைந்த மனம் கொண்டவன்.
8. ''ஓஹோ  அப்படியென்றால்  எவன்  புத்திசாலி?''  
''எது சரி, தப்பு, எது தர்மம், அதர்மம், எது ஸாஸ்வதம் , எதுநிரந்தரமில்லாதது என்று  பகுத்து உணர்ந்தவன்''
9.  'எதை விஷம் எனலாம்?''
''பெரியோர்  வாக்கை, குருவின் வாக்கை  அவமதிப்பது, அலட்சியப்படுத்துவது கொடிய விஷம் போன்றது''

இன்னும் சொல்வேன்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...