Monday, August 15, 2022

ADHI SANKARA

 ஆதி சங்கரரின் வினா விடை - #நங்கநல்லூர்_J_K_SIVAN

ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா.

२७. कः कुलकमलदिनेशः? सति गुणविभवेऽपि यो नम्रः। कस्य वशे जगदेतत्? प्रियहितवचनस्य धर्मनिरतस्य॥
27. kah kulakamala dineshah? Sati gunavibhave’pi yo namrah kasya vashe jagadetat? Priyahitavachanasya dharmaniratasya

65. ஒருவனுடைய குலத்தாமரைக்கு, வம்ச கமலத்துக்கு எது சூரியன் எனலாம்?

சகல நற்குணங்கள் கொண்டவனாக இருந்தும், எவன் ரொம்ப பதவிசாக,எளிமையாக, மரியாதையுடன், பணிவுடன் நடந்துகொள்கிறானோ அவன் .

66. எவன் உலகத்தை ஆள்பவன்.?

எவன் மருதுபாஷியாக, இனிமையாக, இன்சொல் லோடு பிறருக்கு உதவும் எண்ணத்தோடு நல்வழியில் நடக்கிறானோ அவன்.

२८. विद्वन्मनोहरा का? सत्कविता बोधवनिता च। कं न स्पृशति विपत्तिः? प्रवृद्धवचनानुवर्तिनं दान्तं॥

28. vidwanmanoharaa kaa? Satkavitaa bodhavanitaa chakam na sprishati vipattih? Pravruddhavachanaanuvartinam daantam


67. கற்றோர், அறிஞர்கள் மனதை எது கொள்ளை கொள்கிறது?

இனிய, எளிய பொருள் செறிந்த கவிதைகள், ஞானம் நிறைந்த பெண்.

68. எவரை துரதிர்ஷ்டம் நெருங்குவதில்லை?.
மூத்தோர், பெரியோர் சொற்படி நடப்பவன், எளிமையானவனை.

29. कस्मै स्पृहयति कमला? त्वनलसचित्ताय नीतिवृत्ताय। त्यजति च कं सहसा? द्विजगुरुसुरनिन्दाकरं च सालस्यं

29. kasmai sprihayati kamalaa? Twanalasachittaaya neetivrittaaya tyajati cha kam sahasaa? Dwijagurusuranindaakaram cha saalasyam

69. மஹா லக்ஷ்மிக்கு யாரை ரொம்ப பிடிக்கும்?

எவன் மனதில் சோம்பேறித்தனம் இல்லையோ, எவன் ஒழுக்கமானவனோ, நற்குணம் உடையவனோ அவனை.

70. எவனை மஹாலக்ஷ்மி நீ வேண்டாம் போ என சட்டென்று உதறிவிடுவாள்?

சோம்பேறியாக இருந்து கொண்டு, பிராமணர்கள், குரு, தேவர்கள் எல்லோரையும் இழிவாக பேசுபவனை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...