கண்ணன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்.--
நங்கநல்லூர் J K SIVAN
கிருஷ்ணன் அபூர்வன். பூர்ணாவதாரன். பிறந்ததும் மரணம் ரெடி என்று தெரிந்த தாய்க்கு ''பிறப்பு இறப்புக்கு அல்ல, சிறப்புக்கு '' என்று நிரூபித்தவன்.. பிறந்ததும் மரணம் என்று முத்திரை குத்தினாலும் 125 வருஷம் வாழ்ந்தவன்.
ஒரு யுகம் முந்தி, துவாபர யுகத்தில் 5250 வருஷத்துக்கு முன்பு ரோஹிணி நக்ஷத்திரத்தில், ஆவணி மாதம் நள்ளிரவில், தேய்பிறை அஷ்டமி திதியில் இருட்டில் பிறந்தாலும் அஞ்ஞான இருள் போக்க கீதை போதித்தவன். யது குலத்தை சேர்ந்தவன் என்றாலும் ஆநிரை மேய்த்து ஆயர்பாடியில் அனைவரையும் எளிமையோடு அரவணைத்து ஆனந்தத்தில்
ஆழ்த்தியவன்.
கிருஷ்ணாவதாரத்தை இந்த வருஷம் 19.8.2022 அன்று உலகமுழுதும் வாழும் ஹிந்துக்கள் கோகுலாஷ்டமி. ஜன்மாஷ் டமியாக கொண்டாட வைஷ்ணவர்கள் அடுத்தநாள் ரோகினி நக்ஷத்ரத்தன்று கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடு கிறார்கள். ஸ்ரீ ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, தஹி அண்டி, தயிர் ச ட்டி, என்று பல பெயர்களில் இது கொண்டாடப்படுகிறது. குஜராத்தில் ரொம்ப விசேஷம். அன்று நிறைய பசுக்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு மாலைகள் அணிந்து ஊர்வலம் ஜம்மென்று வரும். நம் ஊர்களில் வெண்ணைத்தாழி உற்சவம்.
மஹாராஷ்டிராவில் ஒட்டு மொத்தமாக ஜென்மாஷ்டமி விழாவன்று உறியடி கோலாகலமாக நடக்கிறது. எண்ணற்ற பெண்களும் ஆண்களும் இதில் குழந்தைகளோடு பங்கேற்பார்கள். மக்கள் ஈடுபாடு கிருஷ்ணன் பிறந்த ஜென்மாஷ்டமி விழாவில் அதிகமானது என்பது .உலகறிந்த உண்மை.
இஸ்கான் கோவில்களில் வெகு வெகு விமரிசையாக இந்த ஜென்மாஷ்டமி விழாக்கள் நடைபெறும். வ்ரஜ பூமி என்று
கிருஷ்ணன் பிறந்த இடத்தையும், அவன் வளர்ந்த பிரிந்தாவனத்தையும் அவன் கம்சனை தேடிச்சென்று அவனைக் கொன்ற மதுராவையும் தரிசிக்க இந்தியாவின் பல பாகங்களிலிருந்து பக்தர்கள் வருவார்கள்.
நான் அடுத்தநாள் 20/8/2022 அன்று கிருஷ்ணனை பிருந்தாவனத்தில் காண புறப்படுகிறேன். ஒரு வார குதூகலம்.
No comments:
Post a Comment