Sunday, February 20, 2022

SUR DAS


 ஸூர்தாஸ் -   நங்கநல்லூர்  J K  SIVAN


27. உன்னை விட்டு ஓடிப் போக  முடியுமா?

சொல்லுடா கண்ணா.  நான் உன்னைவிட்டு ஓடிப் போக முடியுமா   நீயே  சொல்? போகணும் என்று தோன்றினால் கூட   அடுத்து எழும் கேள்வி,  உன்னை விட்டு  நான் எங்கே போவது?  உன்னை விட்டு  வேறு யாரிடம் போவது? எந்த  வீட்டு  வாசல்  எனக்காக  கோலம் போட்டு வர வேற்கப் போகிறது? என்னை யார் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?  சரி நானே  அப்படி அங்கே  சென்றாலும் என்னால்  அங்கே  மனமொப்பி சந்தோஷமாக இருக்க முடியுமா?  நான் யாரிடம் உரிமை கொண்டாட முடியும்?  உன்னைவிட்டால் எனக்கு வேறு யார் இருக்கிறார்கள், அதை முதலில் சொல்.
உன்னைப் போல எல்லோரும் இருப்பார்களா கிருஷ்ணா? , என்னைப்  போஷித்து சந்தோஷமாக ஏற்று பாதுகாக்க யாரேனும் உண்டா ?

அப்படி எவரேனும்  இருந்தால் யாராவது ஒருவர் பெயர் சொல்லி விரலை மடக்கு பார்க்கலாம் ? இதைச்  சொல்லும் போது என் மனதில் என்ன நினைவு திரை இடுகிறது தெரியுமா?ஒருத்தன் உன் நண்பன் , அது தான்  அந்த  ஏழை குசேலன், சுதாமா,  உன்  உற்ற நண்பன், பரம தரித்ரன். அவன் கேட்காமலேயே நீ அவனுக்கு தேவையானவற்றை வாரி வழங்கினாயே   யாரால் இதை மறுக்கவோ, மறக்கவோ முடியும்?  கிருஷ்ணா, டேய்  குட்டி பையா , என்னையும் உன் நண்பனாக ஏற்றுக் கொள்வாயா கண்ணா?

உன் அருள் இருக்கும் போது எனக்கு எதற்கு காம தேனு, கல்பதரு எல்லாம். அதெல்லாமே  நீ தான் எனக்கு. என் மனதில் இரு,  எப்போதும் இரு, நான் உன்னை நினைக்காவிட்டாலும் இரு, இப்போதே சொல்லிவிட்டேன். நான் உன்னை மறக்கமாட்டேன், அப்படி மறந்தாலும், மறக்கும் நிலை வந்தாலும் அதற்கு முன் இப்போதே சொல்லிவிட்டேன், என் நெஞ்சில் இருந்து அகலாதே .  என்னை வாழ்த்து. அது ஒன்றே போதும் கண்ணா.

நான் மேலே சொன்னது ஸூர்தாஸ் அருமை யாக பாடிய ஒரு கவிதையின் விளக்கம். வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் என்று கொள்ள வேண்டாம். கருத்து புரிந்தால் போதுமே.

तुम तजि और कौन पै जाऊं
 काके द्वार जाइ सिर नाऊं पर हाथ कहां बिकाऊं,
तुम तजि और कौन पै जाऊं,
काके द्वार जाइ सिर नाऊं पर हाथ कहां बिकाऊं,

ऐसो को दाता है समरथ जाके दिये अघाऊं,
अंतकाल तुम्हरो सुमिरन गति अनत कहूं नहिं पाऊं,
तुम तजि और कौन पै जाऊं,
काके द्वार जाइ सिर नाऊं पर हाथ कहां बिकाऊं,

रंक अयाची कियू सुदामा दियो अभय पद ठाऊं,
कामधेनु चिंतामणि दीन्हो कलप वृक्ष तर छाऊं,
तुम तजि और कौन पै जाऊं,
काके द्वार जाइ सिर नाऊं पर हाथ कहां बिकाऊं,

भवसमुद्र अति देख भयानक मन में अधिक डराऊं,
कीजै कृपा सुमिरि अपनो पन सूरदास बलि जाऊं,
तुम तजि और कौन पै जाऊं,
काके द्वार जाइ सिर नाऊं पर हाथ कहां बिकाऊं,

tum taji aur kaun pai jaoon,
kaake dvaar jai sir naoon par haath kahaan bikaoon,
tum taji aur kaun pai jaoon,
kaake dvaar jai sir naoon par haath kahaan bikaoon,
ko daata hai samarath jaake diye aghaoon,
antakaal tumharo sumiran gati anat kahoon nahin paoon,
tum taji aur kaun pai jaoon,
kaake dvaar jai sir naoon par haath kahaan bikaoon,
rank ayaachee kiyoo sudaama diyo abhay pad thaoon,
kaamadhenu chintaamani deenho kalap vrksh tar chhaoon,
tum taji aur kaun pai jaoon,
kaake dvaar jai sir naoon par haath kahaan bikaoon,
bhavasamudr ati dekh bhayaanak man mein adhik daraoon,
keejai krpa sumiri apano pan sooradaas bali jaoon,
tum taji aur kaun pai jaoon,
kaake dvaar jai sir naoon par haath kahaan bikaoon,

Tum taji aur kaun pe jaaun
kaake dware jai sar naaun par hath kahan bikaaun
aiso ko data hai samarathkiske diye aghaaun
rank ayaachi kiyo sudama diye abhaya pada thaau
kamdhenu chintamani dini kalpvriksha taru chhau
bhava samudra ati dekhi bhayanak man mein adhik deraaun
kijiye kripa sumiri apno pan surdas bali jaoon

Tum taji aur kaun pe jaaun
kaake dware jai sar naaun par hath kahan bikaaun

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...