Friday, February 4, 2022

THE BHAGAVAD GITA BOOK.

 'சதமானம் பவதி  ஸதாயுஷ்.... ''    நங்கநல்லூர்    J K  SIVAN 


நூறு வருஷங்களுக்கு முன்  3.1.1922ல்   லால்குடி தாலுக்காவில், திருச்சி ஜில்லாவில்,  எடையாத்த
 மங்கலம்  அக்ரஹாரத்தில் பிறந்த,  E  S.  சிவராமகிருஷ்ணன் ஐந்து மாத  காலமே  பாரத தேசத்தில் வாசம் செய்து,  பெற்றோரால் அப்போது வெள்ளைக்கார காலனியாக இருந்த  மலேசியாவுக்கு  தூக்கிச் செல்லப்பட்டார்.  அங்கேயே வளர்ந்து படித்து ஒரு டாக்டராகி  விட்டார். 1977ல் மலேசியாவில்  பெரிய மருத்துவ அதிகாரியாக  ஒய்வு பெற்றார்.   71வயதில் மருத்துவ  துறைக்கு  ''பை  பை'' சொல்லி விட்டு ஆன்மீக பக்கம் திரும்பினார்.   அம்மா  இளம் வயதில் சொல்லிக்கொடுத்த  புராண கதைகளைத் தவிர  வேறொன்றும்  தெரியாதவருக்கு  ஆன்மீக துறையில் உள்ளூர  ஒரு ஈர்ப்பு. 

பகவத் கீதைக்கும் அவருக்கும் உண்டான ஒரே தொடர்பு  பகவத் கீதையை முதன் முதலில் உபதேசித்தவனும் அவரும் ஒரே பெயர் கொண்டவர்கள். ''கிருஷ்ணன்''. அவ்வளவு தான்.

வாழ்க்கையில் எப்போது திருப்பம்  ஏற்படும் என்று யாருக்கும் தெரியாது.  ஒருமுறை  எதேச்சையாக  சுவாமி சின்மயானந்தா வின்  பகவத் கீதை  உபன்யாசம் கேட்க நேர்ந்தது.  அடேயப்பா எவ்வளவு வெள்ளமாக  ஆங்கிலத்தில்  சரளமாக  பேசுபவர்  ஸ்வாமிகள்!. 

 நான் இளம் வயதில் நிறைய  அவரைக்  கேட்டிருக்கிறேன். என் தந்தைக்கு அவரை மிக நெருக்கமாக தெரியும்.  இருவரும் அடிக்கடி சந்திப்பவர்கள்.  என் அப்பாவும் ஒரு  கிருஷ்ணன் தான்.  J  கிருஷ் ணய்யர். கோடம்பாக்கத்தில்  சின்மயா மிஷன் குரூப்பில்  பங்கேற்று நிகழ்ச்சிகள் நடத்தியவர்.   தான் கேட்ட  சின்மயானந்த  ஸ்வாமிகள்  உபன்யாசத்தை  ஆங்கிலத்தில் கவிதையாக எழுதி  ஸ்வாமிகளிடம் காட்டியபோது  ஸ்வாமிகள் ஆஹா அப்படியே  கவிதையாக்கி இருக்கிறாயே தொடர்ந்து முழு பகவத் கீதையும்  ஆங்கில கவியாக்கு என்று ஆசிர்வதித்தார்.   குருவின் அனுக்ரஹம் இருந்தால்  வேறென்ன வேண்டும்.  கீதை 223 பக்கங்கள் கொண்ட  ஆங்கில கவிதைநடை புத்தகமாக உருவெடுத்து   2013, 2014, 2016ம் ஆண்டுகளில்  பல ஒன்றாம், ரெண்டாம் மூன்றாம் பதிப்புகளாகி, இன்று எனக்கு  ஒரு பிரதி கிடைத்தது.   எனக்குக்  கொண்டுவந்து கொடுத்தவர்  அற்புதமான  ஒரு  மனிதர்,   தான தர்மங்கள் செய்யும்  ரொட்டேரியன் ஸ்ரீ மண்டகொளத்தூர்  துரைசாமி  ஷங்கர்  ஐயர்,   MDS,   என்று எல்லோருக்கும் தெரிந்த  பிரபல  பிரமுகர்.    

டாக்டர்  ESSR  கிருஷ்ணன்  ஆரம்பத்தில் குட்டி குட்டி  வேடிக்கை கவிதைகள்  ஆங்கிலத்தில் பொழுது போக்காக புனைபவர். அவர் தந்தை ஒருநாள்  அவரிடம்  
''டேய்  கிருஷ்ணா, இதென்ன வேண்டாத வேலை, நேரத்தை ஏன் வீணடிக்கிறாய்? உனக்கோ ஆங்கில கவிதை இயற்றும் திறமை இருக்கிறது. நல்ல விஷயத்தில் அதை திசை திருப்பு. மஹாபாரதம்  எழுது, குழந்தைகள் படிக்கும்படியாக எழுதினால் பிரயோஜனம் இருக்குமே?'' இந்த  வார்த்தை  திருப்பு முனையாகி  பின்னர் மேலே சொன்ன கீதையை எழுதுவதற்கு அஸ்திவாரமானது.  

ஆரம்பத்தில்  அன்னிபெசன்ட் எழுதிய  கீதை,  முதல் அத்யாயத்துக்கு மேல்  புத்தகத்தை மூட வைத்தது. அதே போல் தான் கேனோபநிஷத்  புத்தகமும். சுத்தமாக  புரிபடவில்லை.   ஆனால்  இதெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் நெஞ்சில் வளர்ந்துகொண்டே வந்த நேரத்தில் தான்  1967 மார்ச் மாதம்  மலேசியாவில்   ஈப்போ எனும் ஊருக்கு சுவாமி சின்மயானந்தா 
விஜயம் செய்தார்.   அப்போது  ஈப்போவில்  கிருஷ்ணன் மருத்துவ பணியாற்றி  வந்தார்.   உள்ளூர்   நண்பர் சுப்பையர் வழியில் பார்த்து,  ''கிருஷ்ணன், இன்று  சாயந்திரம் சுவாமி சின்மயானந்தா  கீதை உபன்யாசம் . மலை  6.30-8.00 வரை.   செயின்ட் ஜான்  சர்ச்சில் நடக்கிறது.  நீயும் வாயேன். கேட்கலாம்.  ரொம்ப அருமையாக சொல்வார்.''

மாலை ஆறு  மணிக்கே சென்று முதல் வரிசையில் கிருஷ்ணன் மனைவி சகிதம் அமர்ந்துவிட்டார்.  6.28க்கு  ஸ்வாமிகள்  மேடையேறினார்.  ஒரு சிட்டிகை  மூக்குப் பொடி  உறிஞ்சினார். அது அவருக்கு வழக்கம்.  கணீரென்று  '' ஓம்  ஓம் ஓம் ' என்று ஓங்காரத்துடன் உச்சரித்தார்.  நேரம் போனதே தெரியவில்லை.  கிருஷ்ணன் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்தார். இவ்வளவு தெளிவாக  கேட்டதே  இல்லை. சகல சந்தேகங்களும் தீர்ந்துவிட்டதே.  பகவான் ஸ்ரீ   கிருஷ்ணன் இந்த   டாக்டர்   ESSR கிருஷ்ணன் மேல் கண் திறந்தபின்  கேட்கவேண்டுமா?  அன்றிரவு  கிருஷ்ணன் தான்  உபன்யாசத்தில் கேட்டதை எழுத்தில் கவிதையாக வடித்தார். அடுத்த  நாள் பேனா  பேப்பருடன்  உபன்யாசத்துக்கு ஆஜரானார்.  ஸ்வாமிகள் அன்று  3ம் அத்யாயம்  கர்மயோகத்தை விளக்கினார்.

பத்து நாள்  உபன்யாசம் முடிந்து கிருஷ்ணன் தம்பதியர்  ஸ்வாமிகளை சந்தித்து  தான் ஸ்வாமிகள் உபன்யாசத்தைக் கேட்டு  எழுதிய   ''அறிமுக  விளக்க  உபன்யாசத்தை, கர்ம யோக உபன்யாச  கவிதை '' யைக்  கொடுத்தார்.  அதை பார்த்துவிட்டு  ஸ்வாமிகள்  ''கிருஷ்ணன் நீங்க  ஒரு டாக்டரா,  ஆராய்ச்சி செய்யும் பேராசிரியரா ?  என்று சிரித்துக் கொண்டே  கேட்டார். 

''டாக்டர் தான்,  ஆனால்  நீங்கள்  ''ஸ்வதர்மத்தை'' பற்றி  விளக்கும்போது சொன்ன  மாதிரி   டாக்டர் இல்லை''..   சிரிப்பு.
ஸ்வாமிகள் உதாரண கதைகள் நடுநடுவே சொல்வார்.  அவர் சொன்ன கதை:
 ஒரு டாக்டர், வக்கீல் தங்கள் பிள்ளைகள் தம்மைப் போலவே தொழிலில்  ஈடுபட்டு முன்னேற விரும்பி அவர்களை அப்படியே  படிக்கவைத்தும், அந்த பிள்ளைகள் தொழிலில் ஆர்வம் காட்டவில்லை.   வக்கீல் பிள்ளை பாடகனாக விரும்பினான்,  டாக்டர்  பிள்ளை  ஆங்கில ப்ரொபசராக  ஆசைப் பட்டான்.  ஆகவே  தான்  கிருஷ்ணன்  நான்  ''நீங்கள் சொன்ன டாக்டர் பிள்ளை'' என்கிறார்.  

பம்பாய்  திரும்பி சென்ற ஸ்வாமிகள்  கிருஷ்ணன் எழுதியதை படித்துவிட்டு ஒரே வார்த்தை தான் எழுதினார் 

''கிருஷ்ணன்,  நீங்கள் ஒரு BLOTTING  பேப்பர் ஞாபக சக்தி மனிதர்''  
 ப்ளாட்டிங் பேப்பர்  அந்த காலத்தில்   ஸ்டீல் NIB  பேனாவை மசியில் தோய்த்து எழுதும்போது  அந்த  ஈர  மசியை  காகிதத்தில் இருந்து உறிஞ்சி விடும்.  எழுத்து கறை  படியாது.  அதுபோல் நான் சொன்னதை யெல்லாம் கிரஹித்தவர்''  என்ற கருத்து பட  ஒரே வார்த்தையில் சொன்னது.  கீதை 18 அத்தியாயங்களையும்  இப்படியே குழந்தைகளுக்கு  கவிதையாக்குங்கள் ''   

கிருஷ்ணன் எழுதியதை  ஸ்வாமிகள் அவருடைய  பத்திரிகை  ''தபோவன பிரசாத்'' தில் வெளியிட்டார்.   கிருஷ்ணன்  தான் எழுதியதை  எல்லாம்  வீட்டிலேயே புத்தக அலமாரியில் வைத்திருந் ததை  2011ல் இந்தியாவில் இருந்து வந்த நண்பர்,  என்னை சந்தித்த  ஸ்ரீ MDS ) கோலாலம்பூரில்   கிருஷ்ணனை சந்தித்து அவரது கீதை கவிதைகளை படித்து  அதிசயத்திலும் ஆனந்தத்திலும்  சொன்ன வார்த்தை: 
 '' கிருஷ்ணன் ஸார் , நீங்கள் தான் பகவத் கீதையில் ஆங்கில கவிதைகளில் எழுதிய முதல் எழுததாளராக இருப்பீர்'' என்று புகழ்ந்து வணங்கினார். அதை புத்தகமாக்கினார்.   மேலே  ரெண்டாம் பாராவில் எழுதியது மீண்டும்: 

''கீதை 223 பக்கங்கள் கொண்ட  ஆங்கில கவிதைநடை புத்தகமாக உருவெடுத்து   2013, 2014, 2016ம் ஆண்டுகளில்  பல ஒன்றாம், ரெண்டாம் மூன்றாம் பதிப்புகளாகி, இன்று எனக்கு  ஒரு பிரதி கிடைத்தது'',   இந்த புத்தகத்திலிருந்து பெரும்  நிதி  தர்ம காரியங்களுக்கு  ஸ்ரீ MDS மூலம் சென்றடைகிறது.  copies of the book  ''THE  BHAGAVAD GITA'' by Dr  E.S. SIVARAMAKRISHNAN  can be had  by contacting  Sri M.D. SHANKAR:   +91- 99400 51986

டாக்டர்  கிருஷ்ணன்   மலேசியாவில்  கோலாலம்பூரில்   100 வயது கடந்து வாழ்கிறார்.. நாம்  அனைவரும் அவரை  இங்கிருந்தே  மானசீகமாக  நமஸ்கரித்து அவர் ஆசியை பெறுவோம். கடவுள் நேரே  காட்சியளிப்பதில்லை.  இப்படி  சிறந்த மனிதர்கள் மூலம் அவரை தரிசிக்கலாம். 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...