Thursday, February 3, 2022

SRI LALITHA SAHASRANAMAM

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN

ஸ்லோகங்கள்  171-172   நாமங்கள்  923-933

दक्षिणा-दक्षिणाराध्या दरस्मेर-मुखाम्बुजा ।
कौलिनी-केवलाऽनर्घ्य-कैवल्य-पददायिनी ॥ १७१॥

Dakshina dakshinaradhya darasmera mukhanbuja
kaolini kevala narghya kaivalyapadadaeini – 171

தக்ஷிணா-தக்ஷிணாராத்யா தரஸ்மேர-முகாம்புஜா
கௌலினீ-கேவலா Sனர்க்ய-கைவல்ய-பத-தாயிநீ 171

स्तोत्रप्रिया स्तुतिमती श्रुति-संस्तुत-वैभवा ।
मनस्विनी मानवती महेशी मङ्गलाकृतिः ॥ १७२॥

Stotrapriya stutimati shruti sanstuta vaibhava
manasvini manavati maheshi mangalakrutih – 172  

ஸ்தோத்ர-ப்ரியா ஸ்துதிமதீ ச்ருதி-ஸம்ஸ்துத-வைபவா
மநஸ்விநீ மானவதீமஹேசீ மங்கலாக்ருதி 172

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்   ஸ்லோகங்கள்  923-933  அர்த்தம்:

*923*   दक्षिणा-दक्षिणाराध्या   தக்ஷிணா-தக்ஷிணாராத்யா
அம்பாளை  வலது கர  வழிபாட்டை செய்பவர்கள் பூஜித்து  போற்றுகிறார்கள். அவர்களைத்தான்  தக்ஷிணாசரா என்பது.  இடது கை  வழிபாட்டை புரிபவர்களை வாமாசாரா என்பது வழக்கம். இருவித வழிபாட்டை புரிபவர்களுக்கு  வேண்டுவது அம்பாளை தான்.
தக்ஷிணா  என்றால்  ஞானமுடையவர்கள் என்று ஒரு அர்த்தம். தக்ஷிணா  என்பது குருவுக்கு சிஷ்யன் அளிக்கும் சம்பாவனை.    

*924*  दरस्मेर-मुखाम्बुजा   தரஸ்மேர-முகாம்புஜா
அம்பாள் புன்னகை கொண்ட முகத்தாள் .  மந்தஹாஸ  வதனி.  முழுதாக மலர்ந்த தாமரை போன்ற முகம்.  நளினி என்று சொல்வது அற்புதமான ஒரு பெயர்.   தரஸ்மேர எனறாள்  பளபளக்கும்  வெண்  சங்கு.    அவளது  அழகிய  வெண்ணிற  பற்களை சங்குக்கு ஒப்பிடுகிறார்  ஹயக்ரீவர். கழுத்தில் மூன்று  கோடுகள்,   அ , உ, ம   எனும்  ஓம்கார  அக்ஷரத்தை குறிக்கும்  கோடுகள்.   ப்ரளய கால  தாண்டவத்தை காலாக்னி ருத்ர  தாண்டவம் என்கிறோம்.  அதை  சிவன் ஆடும்போது எந்த வித பயம் அச்சம் இன்றி அம்பாள் புன்னகை மலர்ந்து, அதை ரசித்து பார்க்கிறாள். அது ஊழிக்கூத்து  எனப்படுகிறது.  

*925*  कौलिनी-केवला   கௌலினீ-கேவலா
கேவலம் என்றால் பரிசுத்த என்று பொருள்.   பரமேஸ்வரனை அறிவது தான் கேவலா.  ஸதா  சிவமாகவும், ப்ரம்மமாகவும்  மிளிர்பவர்.  எல்லாம்  ஒன்றாக தெரிபவள் அம்பாள்.  கௌலா என்றால்  இடதுகை வழிபாட்டுக்கு ஒரு பெயர். அம்பாள்  தாந்த்ரீக வழிமுறைகளில் அப்படி தொழப்படுபவள்.

*926*  अनर्घ्य-कैवल्य-पद-दायिनी   Sனர்க்ய-கைவல்ய-பத-தாயிநீ
விலைமதிப்பற்ற  என்பதை  அநர்க்யா என்று சொல்வார்கள். கைவல்யம்  உயர்ந்த ஆத்ம நிலை, மோக்ஷம். ப்ரம்மத்தோடு ஒன்றிய, என்று பொருள். அம்பாள் இப்படி சிறந்த நிலையை பக்தனுக்கு அருள்பவள்.   ஸாங்க்ய  தத்வம்  கைவல்யத்தை  எதனுடனும் சேராத தனித்துவம்  என  குறிக்கும்.

*927*  स्तोत्र-प्रिया  ஸ்தோத்ர-ப்ரியா  
ஒருவரை பார்த்து  என்னை முகஸ்தோத்ரம் பண்ணாதீர்கள் என்கிறோம்.  போற்றுவது. பகவானை போற்றுவது தான் ஸ்தோத்ரம்.  அம்பாள் பக்தனின் உண்மையான  ஸ்தோத்ரத்தை கேட்டு மகிழ்ந்து அருள்பவள்.  வனதுர்கா  சப்தசதி என்று ஒரு ஸ்தோத்ரம்.  700  ஸ்லோகங்களை கொண்டது. அம்பாள் மேல் பாடப்பட்டது.  அதிகம் வெளியே  தெரியாதது, அறியப்படாதது.

*928*  स्तुति मती   ஸ்துதிமதீ  
ஸ்தோத்ரம்  மாதிரியே  தான்  ஸ்துதி என்பது.  ஸ்தோத்ரம் பண்ணுவதால்    ஞானம்  செல்வம் ரெண்டுமே  பெருகும். 

*929*  श्रुति-संस्तुत-वैभवा   ச்ருதி-ஸம்ஸ்துத-வைபவா
ஸ்ருதி என்பது வேதங்களை அடையாளம் காட்டுகிறது.  சம்ஸ்துத எனும்போது  ஸ்ருதியை உச்சரிப்பதால் பெரும்  அனுபவம்.  

śruti smriti purāṇām ālayam karunālayam namāmi bhagavadpādam śaṅkaraṁ lokaśankaraṃ
श्रुति स्म्रिति पुराणाम् आलयम् करुनालयम् नमामि भगवद्पादम् शङ्करं लोकशन्करं
''பரமேஸ்வரனை சாஷ்டாங்கமாக  நமஸ்கரிக்கிறேன். பிரபஞ்சத்தை ரக்ஷிப்பவன் அவன். வேத வேதாந்த ஞானம் புராணம் சகலமும் தன்னுள்  கொண்டு கருணை புரிபவன். 

*930*   मनस्विनी  மநஸ்விநீ
சுதந்திரமான மனதை,  ஸ்வபாவத்தை, கொண்டவள் அம்பாள்  ஸ்ரீ லலிதை.  ப்ரம்மஸ்வரூபி. 

*931*  मानवती   மானவதீ
அதி புத்திசாலி.  உயர்ந்த கோட்பாடுகள் கொண்ட  மனத்தினள் அம்பாள்.  ஸ்ரீ மாதா  என்று வணங்கப்படுபவள்.  மன்னித்தருள்பவள். 

*932*  महेशी  மஹேசீ
மகேஸ்வரன் பத்னி .  மஹேஸ்வரி என்றும்  அழைக்கப்படுபவள்.  

*933*   मङ्गलाकृतिः   மங்கலாக்ருதி
மங்களம் என்றால் சுபம்,   புனிதம்.  சநதோஷம். நலம்., ஆனந்தம்  என்று எல்லாம் அர்த்தம்.  அத்தகைய எல்லா  குணங்களும் கொண்டவள் லலிதாம்பிகை.

சக்தி பீடம்:      சொளசத் யோகினி  ஆலயம். மொரேனா, மத்ய பிரதேசம்  

பதினோராம்  நூற்றாண்டு ஆலயம்  இது.  யோகினி ஆலயம் என்றால் தெரியும்.  சிலர்  மிதாவளி  என்கிற  கிராமத்தில்  உள்ளது.   குவாலியரிலிருந்து  45கி.மீ.     ஆலயத்தில் ஒரு கல்வெட்டு  இந்த ஆலயம்  1323ல்   கச்சாப கட்ட  ராஜா  தேவபாலனால்  கட்டப்பட்டது என்கிறது.  அவன் காலத்தில் இங்கே  சூரியனின் அயனத்தை   அசைவை,  கணக்கில் கொண்டு,  கணிதம், வான சாஸ்திரம் எல்லாம் கற்பிக்கப்பட்டது.
100 படிகள் கொண்ட  மலைமேல் உள்ள   மஹாமாயா ஆலயம்  என்றால் தெரியும்.   மத்திய பிரதேசத்தில்  மொரேனா ஜில்லாவில் உள்ளது.   பாரத  தேசத்தில்  யோகினி கோவில்கள் ரொம்ப குறைவு.  இருந்தாலும் இந்த  யோகினி  ஆலயம்  பெருமையும் புகழும் வாய்ந்து சிறப்பாக  பராமரிக்கப்பட்டு வருகிறது.  சுற்றுச் சுவர் இருக்கிறது.   170 அடி  வட்டமாக  வளைந்து   தூண்களுக்கு இடையே   65 சந்நிதிகள்  போல  அறைகள்  அழகானவை.  பார்த்தால்  நமது பார்லிமென்ட்  கட்டிடம் நினைவுக்கு வரும். அதில் 64 யோகினிகள் அம்பாள் லலிதை  இருந்திருக்கிறது.   திறந்த  மண்டபம்.  அதில் இப்போது  நிறைய  சிவலிங்கங்கள்.  இங்கே  பூகம்பம் அடிக்கடி நேர்ந்திருக்கிறது. 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...