ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - நங்கநல்லூர் J K SIVAN
ஸ்லோகங்கள் 181-182 நாமங்கள்: 990-997
अभ्यासातिशय-ज्ञाता षडध्वातीत-रूपिणी ।
अव्याज-करुणा-मूर्तिर् अज्ञान-ध्वान्त-दीपिका ॥ १८१॥
अव्याज-करुणा-मूर्तिर् अज्ञान-ध्वान्त-दीपिका ॥ १८१॥
அப்யாஸாதிசய-ஜ்ஞாதா ஷடத்வாதீத-ரூபிணீ
அவ்யாஜ-கருணா-மூர்த்தி-ரஜ்ஞான- த்வாந்த-தீபிகா 181
आबाल-गोप-विदिता सर्वानुल्लङ्घ्य-शासना ।
श्रीचक्रराज-निलया श्रीमत्-त्रिपुरसुन्दरी ॥ १८२॥
அவ்யாஜ-கருணா-மூர்த்தி-ரஜ்ஞான-
आबाल-गोप-विदिता सर्वानुल्लङ्घ्य-शासना ।
श्रीचक्रराज-निलया श्रीमत्-त्रिपुरसुन्दरी ॥ १८२॥
ஆபாலகோப-விதிதா ஸர்வானுல்லங்க்ய-சாஸனா
ஸ்ரீசக்ரராஜ-நிலயா ஸ்ரீமத்-த்ரிபுரஸுந்தரீ 182
ஸ்ரீசக்ரராஜ-நிலயா ஸ்ரீமத்-த்ரிபுரஸுந்தரீ 182
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம் நாமங்கள் 990- 997 அர்த்தம்.
எதைச் சரியாக செய்வதற்கும், பேசுவதற்கும், பயிற்சி அனுவபம் வேண்டும். அதை தான் அப்யாசம் என்பது. அதிசய அப்பியாசம் என்பது சிறந்த, உன்னத முறையில் அந்த அப்யாஸத்தை பெறுவது.
வாக்தேவிகள் அப்படி அம்பாளிடம் அப்பியாசம் பெற்றவர்கள். விடாமல் மந்திரங்களை சரியானமுறையில் உச்சரிக்கும் அப்பியாசம் வேத குருமார்கள் கற்றுக் கொடுத்தது. ப்ரம்ம சூத்ரம் அது பற்றி தான் (IV.i.1) ஸ்லோகத்தில் சொல்கிறது. கிருஷ்ணனும் இதையே தான் கீதையில் (IX.22 சொல்கிறான்: என்னை விடாமல் தியானம் செய்பவர்கள் என்னை இணைவார்கள். அவர்களை பாதுகாப்பது என் வேலை. அவர்கள் தேவையை பூர்த்திசெய்வதும் கூட என் வேலை தான்.
அம்பாள் அப்படிப் பட்டவள் என்கிறது இந்த நாமம்.
*991* षडध्वातीत-रूपिणी
ஷடத்வாதீத-ரூபிணீ
ஆறுவித பாதைகள் அம்பாளை வழிபட உதவுகிறது. அவற்றை, பதம், புவனம், வர்ணம், தத்வம், கலா, மந்த்ரா. எதன் வழி சென்றாலும் அம்பாள் வரவேற்று அருள் புரிபவள்.
ஆறுவித பாதைகள் அம்பாளை வழிபட உதவுகிறது. அவற்றை, பதம், புவனம், வர்ணம், தத்வம், கலா, மந்த்ரா. எதன் வழி சென்றாலும் அம்பாள் வரவேற்று அருள் புரிபவள்.
*992* अव्याज-करुणा-मुर्तिः
அவ்யாஜ-கருணா-மூர்த்தி-
அம்பாள் தயா மூர்த்தி, கருணை நிரம்பியவள். தயை, தாராளம், இரக்கம் எல்லாம் ஒரு தாய்க்கு சாதாரணமாக இருப்பவை அல்லவா. அவள் சர்வலோக மாதா அல்லவா?
*993* अज्ञान-ध्वान्त-दीपिका ரஜ்ஞான-த்வாந்த-தீபிகா.
இருளை போக்கும் அருள் ஒளி தீபம் அம்பாள் என்று சொல்கிறது இந்த நாமம். ரொம்ப பொருத்தமானது. பரமேஸ்வரனின் ஞான ஒளியை பிரகாசமாக பிரதிபலிப்பவள். கிருஷ்ணன் கீதையில் (X.11), பக்தர்களின் இதயத்திலேயே குடியிருந்து, அஞ்ஞான இருளைப்போக்கி ஞான தீப ஒளியை ப்ரகாசிக்கச் செய்து அவர்களுக்கு அருள்கிறேன்.'' என்கிறான்.
*994* आबाल-गोप-विदिता
ஆபாலகோப-விதிதா
எல்லா குழந்தைகளையும் சேர்த்து ஒரு வார்த்தை தான் ஆபாலம் . ஆன்மீக ஞானம் இல்லாதவர்களுக்கு கூட அம்பாள் குழந்தைகளுக்கு தாயாக அருள்பவள்.
எல்லா குழந்தைகளையும் சேர்த்து ஒரு வார்த்தை தான் ஆபாலம் . ஆன்மீக ஞானம் இல்லாதவர்களுக்கு கூட அம்பாள் குழந்தைகளுக்கு தாயாக அருள்பவள்.
*995* सर्वानुल्लङ्घ्य-शासना ஸர்வானுல்லங்க்ய-சாஸனா
அம்பாள் சொல்லை எவரும் மீறுவதில்லை. ப்ரம்மா விஷ்ணு சிவன் போன்ற மும்மூர்த்திகளும் கூட அம்பாளின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் தான். ஒரு சிறிய புருவ அசைவாலேயே கட்டளையிடுபவள். இச்சா சக்தி. மஹா ப்ரளயத்தில் சதாசிவன் சக்தியால் இயங்கும் சமயம் புனருத்தாரணம் நிகழ்கிறது. சதாசிவனிலிருந்து ஈஸ்வரன் அவதரிக்க, ஈஸ்வரனின் அம்சமாக ருத்ரன் தோன்ற, ருத்ரனிலிருந்து விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து ப்ரம்மா என்று தோற்றம் துவங்குகிறது.
*996* श्री चक्र-राज-निलया
ஸ்ரீசக்ரராஜ-நிலயா
ஸ்ரீ சக்ரத்தில் உறைபவள் அம்பாள். அவளை ஸ்ரீ யந்த்ரா, சக்ர ராஜ என்றும் உபாசிக்கிறோம். சிவன் சக்தியின் தேகம் தான் ஸ்ரீ சக்ரம். ப்ரபஞ்சத்தின் உயிர்ச்சக்தி.நாலு சிவ முக்கோணங்கள் அதில் உண்டு. ஸ்ரீ சக்ரம் 43 முக்கோணங்களும் , மத்தியில் பிந்துவும் கூடியது.. ஒவ்வொன்றும் ஒருவித உயர்ந்த சக்தியை குறிப்பது. முக்கோணங்களைத் தவிர அஷ்ட தளங்கள் எனும் எட்டு இதழ் தாமரை மற்றும் பதினாறு இதழ் தாமரையும் உண்டு. எல்லா முக்கோணங்களை இந்த ரெண்டு வித தாமரை இதழ்களுக்குள் தான். அதை சுற்றி மூன்று வட்ட கோடுகள், அதை உள்ளடக்கி மூன்று சதுரங்கள், அதற்கு ஒவ்வொரு புறமும் நான்கு வாசல்கள். மூன்று சதுரங்களுக்கும் த்ரைலோகாய மோஹனம் என்று பெயர். இது தான் ஸ்ரீ சக்ரத்தின் முதல் அரண். இதற்கு அதிகாரி திரிபுரா தேவி. ஒவ்வொரு அரணாக ஒன்பது ஆவரணங்கள் . ஒவ்வொன்றுக்கும் ஒரு தளபதி யோகினி. முதல் ஆவரண யோகினி ப்ரகட யோகினி. வெளிச்சுவர்களுக்கு பொறுப்பாக பத்து தேவதைகள். பத்து வித மனித செயலுக்கு அப்பாற்பட்ட சித்திகளை அருள்பவர்கள். நடுச்சுவரில் அஷ்ட மாதாக்கள். ப்ராம்மி, வாராஹி போன்றவர்கள் தெய்வங்கள். உள் சுவர்தெய்வங்கள் 10 தேவதைகள், அவர்கள் தான் 10 முத்ரைகள். கணக்கு பார்த்தால், முதல் சுற்றில் மொத்தம் 28 தெய்வங்கள். அவர்களின் உத்தரவை பெற்று தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.

ரெண்டாவது சுற்றுக்கு ஸர்வாஸ பரி பூரகம் என்று பெயர். இதற்கு அதிகாரி த்ரிபுரேசி. யோகினியின் பெயர் குப்த யோகினி. இங்கும் பதினாறு தளங்கள் கொண்ட தாமரை. மூன்று வட்டங்களுக்குள்.
மூன்றாவது சுற்றுக்கு பெயர் ஸர்வ ஸம்க்ஷோபனம். ஆன்மீக வளர்ச்சி டிபார்ட்மென்ட் இது.
எட்டு இதழ் தாமரை. இதன் அதிகாரி திரிபுரசுந்தரி. தளபதி யோகினி குப்த தர யோகினி. எட்டு இதழ்களுக்கும் எட்டு தெய்வங்கள். அவர்களை வணங்கி உத்தரவு பெற்ற பிறகு தான் ஸ்ரீ சக்ரத்தின் முதல் கட்ட முக்கோணங்களுக்கு செல்ல முடியும்.
நாலாவது சுற்றுக்குப் பெயர்ஸர்வ சௌபாக்ய தாயகா. உலகவாழ்வு தேவைகள், ஆன்மீக நாடல் எல்லாம் அருள்வது. இதில் 14 முக்கோணங்கள். அதிகாரி த்ரிபுரவாஸினி. தளபதி யோகினி யார் தெரியுமா? ஸம்ப்ரதாய யோகினி. ஒவ்வொரு இதழுக்கும் ஒரு தேவதை. அவர்களை வணங்கி உத்தரவு பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழையவேண்டும்.
ஐந்தாவது சுற்றுக்கு பெயர் ஸர்வார்த்த ஸாதகம். கேட்டதெல்லாம் கொடுக்கும் டிபார்ட்மென்ட்.
இதில் 10 முக்கோணங்கள். இதன் அதிகாரி த்ரிபுரஸ்ரீ . இங்கே யோகினியின் பெயர் குலோத்தீர்ண யோகினி. ஒவ்வொரு முக்கோணத்துக்கும் ஒரு தேவதை பொறுப்பு. அவர்களை வணங்கி அனுமதி பெற்று அடுத்த சுற்றுக்குச் செல்லலாம்.
ஆறாவது சுற்றுக்கு பெயர் ஸர்வ ரக்ஷாகரசக்ரம் சம்சார சோதனைகளிலிருந்து மீட்கும் டிபார்ட்மென்ட் . உட்புற பத்து முக்கோணங்கள் என்று இது அறியப்படுகிறது. இதற்கு முன்னர் சொல்லப்பட்டவை வெளிப்புற முக்கோணங்கள். இந்த ஆவாரணத்துக்கு அதிகாரி த்ரிபுர மாலினி. இதற்கான யோகினி நிகர்ப யோகினி. ஒவ்வொரு முக்கோணத்துக்கும் ஒரு தேவதை. இவர்களை வணங்கி ஆசி பெற்று உள்ளே செல்லலாம்.
இப்போது ஏழாவது ஆவரணம், சுற்றுக்கு வந்துவிட்டோம். இதன் பெயர் ஸர்வ ரோகஹர சக்ரம். எல்லா மனோ வியாதிகளையும் சிக்கல்களையும் தீர்க்கும் டாக்டர் இருக்கும் இடம். இங்கே எட்டு முக்கோணங்கள். வஸு கோணங்கள். அஷ்ட வசுக்களை அம்சமாக கொண்டது. ப்ரஹதாரண்யக உபநிஷத் இந்த அஷ்டவசுக்களை எப்படி விளக்குகிறது தெரியுமா? (III.ix.) ஆப, தண்ணீர், த்ருவ , துருவ நக்ஷத்ரம், ஸோம : சந்திரன். தாவ/தார /அநில: காற்று, அனல ,பாவக, : அக்னி.
ப்ரத்யுஷா : விடியல். ப்ரபாஸ: வெளிச்சம், ஒளி. (இது தான் பீஷ்மராக பிறந்த வசு)
இதற்கு அதிபதி: த்ரிபுரசித்தா . தளபதி யோகினி யார் தெரியுமா: ரஹஸ்ய யோகினி.
ஒவ்வொரு முக்கோணத்துக்கும் ஒரு வாக் தேவி பொறுப்பு. அவர்களே லலிதா ஸஹஸ்ரநாம இயக்குனர்கள். ஸமஸ்க்ரித அக்ஷரங்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள். எல்லா முக்கோணங்களும் , தாமரை இதழ்களும் ஸம்ஸ்க்ரித அக்ஷரங்களை தாங்கியவை.
எட்டு ஆவரணங்களையும் கடந்து தான் உள் பக்க முக்கோணங்களுக்கு செல்லவேண்டும். லலிதாம்பிகையின் சேனாதிபதிகளை இனி எதிர்கொள்ளவேண்டும்.
எட்டாவது ஆவரணத்தில் நுழைந்தால் தான் மத்திய பிந்து எனும் ரொம்பவும் உள்ளே இருக்கும் உள்புற முக்கோணத்தை அடைய முடியும். ஞான சித்தி பெற முக்கிய காரணம். இதற்கு பாதுகாவலாக லலிதாம்பிகையின் ஆயுதங்கள் இருக்கிறது. அந்த ஆயுதங்களை வணங்கிய பிறகு தான் எட்டாவது ஆவரணமாகிய ஸர்வ சித்தி ப்ரதாவை தரிசிக்க முடியும். இதற்கு அதிபதி த்ரிபுராம்பாள் . அவளது தளபதி யோகினி பெயர் அதிரஹஸ்ய யோகினி. முக்கோணத்தின் மூன்று கோண முனைகளிலும் மூன்று தேவதைகள். நடுவே பிந்துவில் லலிதாம்பாள். இந்த கடைசி உட்புறமுக்கோணத்திற்கு வெளியே 15 திதி நித்ய தேவிகள். அவர்களை வணங்கவேண்டும். ஒவ்வொரு தேவியும் ஒரு சந்திர தின திதி. ஒவ்வொரு பக்தனின் குரு பரம்பரை உட்புற முக்கோணத்தின் மேல் பக்கத்தில் மூன்று கோடுகளாக வழிபடப்படுகிறது. குரு, குருவின் குரு, குருவின் குருவுடைய குரு என மூன்று பரம்பரைகள் தான் மூன்று கோடுகள். அவர்களைத் தவிர மாற்ற குருமார்களை வழிபடுவது வழக்கம். குருவந்தனம் ஸ்ரீவித்யா உபாசனையில் முக்கியம்.
இபோது ஒன்பதாவது ஆவாரணத்துக்கு வந்து விட்டோம். இதற்குள் உள்ள பிந்துவையும் சேர்த்து இதற்கு பெயர் ஸர்வானந்த மய சக்ரம். எல்லாவற்றிற்கும் ஆதாரமான ப்ரம்மம் இருக்கும் இடம்.
இதன் அதிபதி தான் ஸ்ரீ மஹா த்ரிபுரசுந்தரி. இவளையே தான் நாம் ஸ்ரீ லலிதாம்பிகை, ராஜராஜேஸ்வரி, மஹா காமேஸ்வரி என்று எல்லாம் போற்றி வழிபடுகிறோம். ப்ரபஞ்ச மாதா. அவளுடைய தளபதி, பராபராதி ரஹஸ்ய யோகினி. இந்த எல்லையைத் தாண்டி ஷோடசி தீக்ஷை பெறாதவர்கள் செல்ல முடியாது. அதைபெற்றவர்கள் மேலே சென்று முடிவான மந்த்ர, த்ரிகண்ட முத்ரா வழிபாட்டை தொடரலாம். இங்கு தான் சக்தி சிவனின் இடது தொடையில் அமர்ந்துள்ளாள். சம்சார பந்தங்களிலிருந்து மீட்டு முக்தி தருபவள்.
ஆகவே, ஸ்ரீசக்ரத்தில் 113 தேவதைகள் உள்ளார்கள். ஸ்ரீ சக்ர சாம்ராஜ்யத்தை சுற்றி ஸ்ரீ நகரம் எனும் 25 கோட்டைகள். இந்த கோட்டைகளின் இடையே மற்ற காவல் தெய்வங்கள். இந்த நவாவரண ஸ்ரீ சக்ரத்தை ஆறு தேஹ சக்ரங்களுடன் ஒப்பிடுகிறோம். (மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரம் வரை). நன்றாக ஆராய்ந்து பார்த்தால் நமது மனித தேஹம் ஒரு ஸ்ரீ சக்ரம் போல் தான் அமைந்திருக்கிறது. அம்பாள் அதில் உறைகிறாள்.
*997* श्रीमत्-त्रिपुर-सुन्दरी
ஸ்ரீமத்-த்ரிபுரஸுந்தரீ
No comments:
Post a Comment