Wednesday, February 16, 2022

MAASI MAHAM

 மாசி மஹம் -   நங்கநல்லூர்   J K   SIVAN 


மகம்  ஜகத்தை ஆளும்  என்பார்கள்.  அவ்வளவு ''மகத் ''வம்  வாய்ந்தது மகம்.  மஹா என்கிற வார்த்தையே  ரொம்ப பெரிய  என்று தானே  அர்த்தம்.  ஒவ்வொரு வருஷமும்  மாசி மாதம் மகம் நட்சத்திர நாளன்று வரும் பவுர்ணமி விசேஷமானது.  தெற்கே கும்பகோணத்திலும், வடக்கே அலஹா பாத்திலும்  சிறப்பாக கொடாடுகிறார்கள்.  சிவனை  வழிபடும் நாட்களில் இது முக்கியமானது.   பாபங்கள் விலகும்.  பௌர்ணமி எப்போதும்  நிறைந்த நாள் எனப்படுவது. அதுவும்  12 வருஷங்களுக்கு  ஒரு முறை இது அமைந்தால்  அன்று அடேயப்பா கும்பகோணம் ஜன வெள்ளத்தில் ஆழ்ந்து விடும்..  மஹாமஹம் என்று பெயர்/ அது  பேச்சு வழக்கில் மாமாங்கம் ஆகிவிட்டது. ஒரு துளி  மாமாங்க குளத்தின்  ஜலம்  சிரத்தில் பட  புண்யம்.  வடக்கே கும்ப மேளா மாதிரி. கும்பேஸ்வரன் தரிசனம் பெற நாடெங்கிலிருமிருந்து பக்தர்கள்  பொங்கி வருவார்கள். அன்று  மாமாங்க குளத்து நீரில்  மூன்று  புண்ய நதிகளான  கங்கா, யமுனா, சரஸ்வதி ஒன்றுகூடி ஐக்கியம் என்று நம்பிக்கை.  அம்பாள்  மாசி மஹத்தில் உதித்தவள் .வருண பகவானை, சிவன்  பாபத்திலிருந்து  விடுவித்த தினம் மாசி மஹம்  என்று புராணம் சொல்கிறது.  சூரியன் 

மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்கிறார். மக நட்சத்திரம் சிம்மராசிக்கு உரியது. அன்று சந்திரன் கூட  மக நட்சத்திரத்தில் சிம்மராசியில்   சூரியனோடு  உலாவருகிறார் என்பதால்   மாசிமக  ஸ்னானம்  தீர்த்தோத்ஸவம் என புண்யம் வாய்ந்தது. கும்பகோணத்தில் நடக்க கூட இடம் இருக்காது.   கும்பமேளா அலஹாபாதில்  பல உயிர்களை தின்றுவிடும்.  நிறைய  பேர்  காணாமல் போய்விடுகிறார்கள்.  சென்னை போன்ற  கடற்கரைகளில்  சமுத்ர  ஸ்னானம் செய்வது வழக்கம். 
மாசி மாதம் பெளர்ணமியும், மகம் திதியும் சேர்ந்து வரக்கூடிய அற்புத நாள் மாசி மகம் என கொண்டாடப்படுகிறது.

பெளர்ணமி கூடிய மாசி மகம் திதி   நேற்று  16.02.2022 (புதன்கிழமை) மாலை 4.13 மணிக்கு    ஆரம்பம்.  இன்று 17.02.2022 (வியாழக்கிழமை) மாலை 5.12 மணி வரை மஹா  நக்ஷத்ரம்.
மாசி மக  ஒரு  குட்டி விஷயம்   சொல்கிறேன்: 

ஒரு மாசிமகத்தன்று   தக்ஷ   ப்ரஜாபதி  தன் மனைவி வேதவல்லியுடன் யமுனையில் ஸ்னானம் பண்ணும்போது  தாமரை மலரிலிருந்து ஒரு வலம்புரிச் சங்கு கண்ணில் ல்பட்டது.  அட,  இது எப்படி இங்கே வந்தது என்று  தொட்ட  கணமே  சங்கு பெண் குழந்தையாகியது.  பரமேஸ்வரா என்னே உன் கருணை என்று அந்த குழந்தைக்கு  தாக்ஷாயிணி  என்று பேர்  வைத்து  வளர்த்தார். அவள் பரமேஸ்வரன் மனைவி பார்வதியாகிவிட்டாள் .

பௌர்ணமி அன்று  அம்பிகையை வழிபட்டால்  சகல  ஐஸ்வர்யங்களும்  சேரும் என்பார்கள்.  சிலர்  விரதம்  இருப்பார்கள்.  நினைத்தது நடக்கும்.  மகம் நட்சத்திரத்திற்கு அதிபதி கேது. ஞான மோக்ஷ காரகன்.   இந்த வருஷம்  அது  குருவாரமாக  வியாழனில் வேறு  அமைந்துள்ளது இன்னும் ஒரு  சுப சமாச்சாரம்.  வழக்கமாக  மாசி மாத பௌர்ணமி அன்று சத்யநாராயண பூஜை சிறப்பாக செய்வார்கள்.  

ஒரு தடவை   மாசி பௌர்ணமி அன்று   திருவண்ணாமலை கிரிவலம்போகும்போது எங்கிருந்தோ ஒரு பெரிய கூட்டமாக வண்டுகள்  ராணுவ வீரர்கள் போல்  வரிசையாக   மொத்தமாக பறக்கும் காட்சியைப்  பார்த்த்து அதிசயித்தோம். என்ன காரணம் அதன் பலன் என்ன என்று யோசிக்க  தோன்றவுமில்லை நேரமுமில்லை. ஆச்சர்யத்திலேயே  நேரம் ஓடிவிட்டது.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...