பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
112 காசியில் ஞான கங்கை
மஹா பெரியவா காசி ஹிந்து ஸர்வ கலாசாலை மாணவர்களுக்கு அளித்த அறிவுரை அற்புதமானது. நிறைவு செய்யும் முன்பு அவர் அளித்த சில பொன் மொழிகள்:
'' என் மாணவச் செல்வங்களே, ஒரு சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். மனுஷ ஜென்மம் கிடைப்பது துர்லபம். ஆகவே நாம் எல்லோரும் பாக்கியசாலிகள். அதிலும் இங்கே கல்வி கற்கும் நீங்கள் அதி பாக்கியசாலிகள். வாழ்வில் அறிவும் ஒழுக்கமும் இரு கண்கள். இது ரெண்டையுமே இங்கே அமோகமாக கற்று, பெற்று, வாழ்க்கையில் நீங்கள் சமூக முன்னேற்றத்துக்கு சிறந்த பணியாற்ற வேண்டும். நாடு சுபிக்ஷமடைய அது அத்தியாவசியம். ஆதிகாலத்தில் குருமார்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் எந்த குறையுமில்லாமல் பிரபுக்கள், ராஜாக்கள், பொது நல தர்மாதிகாரிகள் பார்த்துக் கொண்டு பாதுகாத்தார்கள். இப்போது மக்கள் மனதில் தோன்றும் எண்ணங்கள் முன்பு போல் இல்லை.
நமது சனாதன தர்மத்துக்கு நிறைய சோதனைகள் வளர்ந்து வருகிறது. அரசியல் தலை தூக்கி எல்லாவற்றையும் புறம் தள்ளுகிறது. காட்டு வெள்ளமாக எல்லாவற்றையும் அழித்துக்கொண்டு செல்கிறது. சமூகம் மாறுபட்டுக் கொண்டே வருகிறது. நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் அதைச் சரியான பாதையில் செலுத்த வேண்டும். சனாதன தர்மத்தைக் நிலை குலைய அனுமதிக்க கூடாது. நாட்டின் நலனுக்காக நீங்கள் தைரியமான முடிவுகளை எடுக்கவேண்டும். நமது தர்மம் செழிக்க, எது ஆசாரம் என்று நீங்கள் இங்கே கற்றீர்கள், இப்படி நீங்கள் சரியான பாதையில் கற்று முன்னேற\வேண்டும் என்பதற்காகத் தான் உங்கள் பெற்றோர்கள் பாரத தேசத்தின் பல் வேறு பாகங்களி லிருந்து உங்களை இங்கே அனுப்பியுள்ளார்கள். அவர்கள் நம்பிக்கை வீண் போக கூடாது. அவர்கள் கனவு மெய்ப்பட வேண்டும். கங்கையை நோக்கி இருக்கும் இதோ இந்த மண்டபத்தில் அமர்ந்து நீங்கள் பகவானை தியானம் செய்து எல்லோரும் சுபிக்ஷமாக வாழ வழிபடவேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும், எக் காரணத்தை கொண்டு, தர்மம் நியாய ஒழுக்கத்திலிருந்து பிறழக்கூடாது. இதன் மூலம் நீங்கள் சகல சம்பத்தும் பேரும் புகழும் அடைவீர்கள்''.
முடிவுரையாக மதன் மோஹன் மாளவியா பேசும்போது '' ஸ்வாமி , தங்களுடைய அருளாசி, அறிவுரை பெற நாங்களும் எங்கள் கல்வி நிலைய மாணவர்களும் நிரம்ப புண்யம் செய்தவர்கள். எனக்கு எப்படி நன்றி கூறுவதென்றே தெரியவில்லை, இந்த காசி மாநகர வாழ் மக்கள் அருள் பெற ஆதி சங்கர ஸ்வரூபமாக வந்து இங்கே வந்து எங்களுக் கெல்லாம் தரிசனம் தர நாங்கள் பூர்வ ஜென்ம புண்யம் பண்ணவர்கள். பெரியவா கூறிய அறிவுரைகளை நாங்கள் நிச்சயம் பின்பற்றி வழி நடப்போம் என்று உறுதி கூறுகிறேன். இந்த ஊர் மக்கள் அனைவர் சார்பாகவும் நான் தங்கள் திருவடிகளை நமஸ்கரிக்கிறேன் என்று சொல்லி, மேடையில் சாஷ்டாங்கமாக மஹா பெரியவாளை நமஸ்கரித்தார்.
1935ம் வருஷம் பெப்ரவரி 11ம் தேதி ஹரித்துவாரிலிருந்து சில பண்டிதர்கள், ஸ்வர்காஷ்ரமம் என்ற இடத்திலிருந்து சில பண்டிதர்கள் குரூப்பாக காசிக்கு வந்து மஹா பெரியவா தர்சனம் பெறறார்கள் . அப்போது மஹா பெரியவா காசியில் ஹனுமான் காட் டி லிருந்த மடத்தில் இருந்தார். ''ஆஹா, எவ்வளவு ஆழமாக சிந்திக்கிறார், கரை கண்ட சாஸ்த்ர வேத ஞானி. இவர் போல் ஒருவரை இதுவரை பார்த்ததே இல்லை'' என்று மஹா பெரியவாளுடன் பேசிவிட்டு ஆச்சர் யப்பட்டார்கள். ஹரித்வாருக்கு அவரை அழைத்தார்கள். அவர்களுக்கு காஷ்மீர் சால்வை அளித்து மஹா பெரியவா கௌரவித்தார்.
ராம் காட் டிலிருந்த சங்க வேத வித்யாலாவுக்கு 1935 பெப்ரவரி 16ம் தேதி மஹா பெரியவா விஜயம் செய்தார். ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தார்கள். காசி மஹா ராஜா, இளவரசரோடு வருகை தந்திருந்தார். வித்யாலத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்று சேர்ந்து பல வாழ்த்து பாடல்களை ஸமஸ்க்ரிதத்தில் மஹா பெரியவா மீது ஸ்லோகங்களாக இயற்றி பாடினார்கள். மாணவர்கள் ஆசிரியர்களை எல்லாம் சில வினாடி வினாக்கள் கேட்டு மஹா பெரியவா ஜகத் குருவாக அவற்றிற்கு விளக்கம் கொடுத்து அவர்களை மகிழ்வித்தார். சனாதன தர்மம் தழைக்க பாடு படுங்கள் என்று உற்சாகப்படுத்தினார். பிராமணர் கள் அவசியம் வேதம் கற்க வேண்டும் என்று அங்கே வேண்டிக்கொண்டார்.
காசி மஹாராஜாவே சம்பாஷணை போல் ஒரு ஸமஸ்க்ரித ஸ்லோகம் எழுதி தானே அதை மேடையில் படித்தார். மஹா பெரியவா வேத வியாசர் ஆதி சங்கரர் பற்றி அவர்களுக்கு அங்கே உபன்யாசம் செய்தார். தான் தங்கி இருந்த ஹனுமான் காட் மடத்திலிருந்து ஆதி சங்கரர் படம் கொண்டு வந்து பரிசளித்தார். காசி ராஜாவும் அரண்மனையிலிருந்து பாதராயண ரிஷி யின் படம் தருவித்து அந்த வித்யாலயத்தில் காட்சி பெற அளித்தார். இரண்டு படங்களுமே மஹா பெரியவா திருக் கரங்களால் வித்யாலயத்தில் அலங்கரிக்கப்பட்டு பூஜையில் வைக்கப்பட்டன. மஹா ராஜா இன்னொரு அற்புதமான காரியமும் செய்தார்.
No comments:
Post a Comment