Thursday, February 24, 2022

MAHAMAHOPADHYAYA

 

மஹாமஹோபாத்யாய   ஸ்ரீ  கிருஷ்ண  தாதாச்சாரியார் 
-- நங்கநல்லூர்  J K  SIVAN 

வெள்ளைக்காரன்  காலத்தில்   வேத  சாஸ்திரத்தில் கரை கண்ட பண்டிதர்களை  கௌரவிக்க வெள்ளைக்கார அரசாங்கம்  ''மஹா மஹோபாத்யாய''  என்ற  சர்வகலாசாலை பட்டத்தை அளித்தது.  இதை சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர்  இதை பெற்றும்  நமக்குத் தெரியாமலேயே மறந்து விட்டார்கள். அப்படி ஒருவரை இன்று அறிந்து கொண்டேன்.  ஏதோ ஒரு புத்தகத்தை  படித்தேன்.  அது 1977ல்  குரு  கைங்கர்யமணி  A. குப்புசாமி சாஸ்திரிகள் என்பவர்  தென்னிந்தியாவில் மகா மஹோபாத்யாய விருது பெற்றவர்களை பற்றிய குறிப்பு.  ஐந்து ரூபாய்க்கு இந்த புத்தகம் விற்கப்பட்டிருக்கிறது.  அதில் ஒருவர்  பெயர்  கண்ணில் பட்டது.  மஹா மஹோபாத் 

யாய  ஸ்ரீ கிருஷ்ண  தாதாச்சாரியார்?  யார் இவர்?

காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள  ஒரு  சின்ன  ஊர்   திருப்புட்குழி. 7 மைல்  காஞ்சி யிலிருந்து.  மொத்தம் 14   வைஷ்ணவ க்ஷேத்திரங்கள் காஞ்சியை சுற்றி உள்ளன.  அதில் ஒன்று திருப்புட்குழி எனும்  திவ்ய தேசம்.  காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே  சென்னை - வேலூர் சாலையில் உள்ள ஊர். 

இராமாயணத்தில் ஜடாயுவுக்கு  ராமர்   மோக்ஷம் அளித்து  இறுதிச் சடங்குகளை இங்கு செய்ததால் திருப்புட்குழி (புள் (பறவை)+குழி) என்று பெயர்.   இந்த  சரித்திரம் புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயிலுக்கும்  சொல்கிறார்கள்.  திருப்புட்குழி கோவில் அருமையாக இருக்கிறது.  பெருமாள்  பெயர்  விஜயராகவப் பெருமாள். தாயார்   மரகதவல்லி. இங்கே  ஜடாயு தீர்த்தம் ரொம்ப  விசேஷம்.  பயின்றார். இராமானுஜர் படித்த மண்டபம் இன்றும் உள்ளது. இராமானுஜர் கல்வி கற்றதை விளக்கும் சிற்பமும் இக்கோவிலில் உள்ளது. இக்கோவிலில் நிறைய  கல்வெட்டுகள்  விஷயங்களை நமக்கு புரியாமல் சொல்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள 
கல் குதிரை  நிஜ குதிரை போலவே  அசையும் உறுப்புக்களைக் கொண்டது. 

இந்த சின்ன ஊரில் 1823ல் பிறந்தவர்  ஸ்ரீ கிருஷ்ண  தாதாச்சாரியார். அப்பா   வேங்கடகுரு  எனும்  கோபால தாத்தாச்சாரியார் தான்  முதல் குரு.   அவரிடம் கற்றுக்கொண்டது சாஹித்ய சாஸ்திரம்.   திவப்ரதீப  வேங்கடாச்சாரியார்  சாஸ்திரம் பயின்றார்.  ஜடப்ரோலு  ரங்காச்சார்யாரிடம்  வியாகர்ணம்  கற்றார். மௌசாலா கட்டா  ஸ்ரீனிவாச   ராகவாசார்யாரிடம்  மீமாம்சம் கற்றார். 

பிறகு ஸ்ரீரங்கத்தில்  ஸ்ரீமத் பெரியாண்டவன்   ஸ்ரீனிவாச யோகீந்த்ர சுவாமியிடம் விசிஷ்டாத்வைத வேதாந்தம்  பயின்றார்.   நெல்லூருக்கு அருகே  வேங்கடகிரி சமஸ்தானத்தில்  ஆஸ்தான வித்வான்.

அப்புறம்  காஞ்சிபுரத்தில்  திருப்புட்குழியிலும் வாசம்.   காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாக பொறுப்பேற்று சில வருஷங்கள் கழித்தார். 

1887ல்  இங்கிலாந்து ராணி  விக்டோரியா வின்  ஆட்சி  பொன்  விழாவில் இவர் கௌரவிக்கப்பட்டு  மஹாமஹோபாத்யாய விருது அளிக்கப்பட்டார்.  

மைசூர்  ராம சாஸ்திரிகள்  எழுதிய  ஸத் பிரதிபக்ஷ  என்ற நூலை கண்டித்து  ''சதகோடி கண்டனம்'' (பாராமுக சபேடிகா) என  ஒரு புஸ்தகம் எழுதினவர்.   

ஸ்ரீ கிருஷ்ண தாதாச்சாரியார்   இயற்றிய இன்னொரு அதி முக்கிய நூல் குமாரிலபட்டர் எழுதிய ''பட்டபாத  வார்த்திகம்''எனும்  நூலின்  அதிகரணங்களின் சாரத்தை வடித்து எழுதிய  ''பாட்ட  ஸாரம்' .  ஆனால்  அது  இவர்  1889ல் மறைந்த பிறகு  22  வருஷங்கள் கழித்து  1912ல் ஸ்ரீரங்கத்திலிருந்து வெளி வந்த ஒரு பத்திரிகையான   ''ஸஹ்ருதய''த்தில்  சீரியலாக சில காலம்  அச்சில் வெளி வந்தது.
இவருடைய புகைப்படமோ, மற்ற விஷயங்களோ தெரியவில்லை.  இவரை வணங்கி ஆசி பெறுவோம்.  இவருடைய வம்சாவளியில் வந்தவர்கள் இவரைப்  பற்றிய  அதிக விபரங்கள்
கொடுக்கலாம். 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...