Thursday, February 3, 2022

PESUM DEIVAM



 பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN


111. காசியில் ஒரு பொன்னான அறிவுரை.

1934ம் வருஷம் அக்டோபர் மாதம் முழுதும் மஹா பெரியவா கோகாட் எனும் இடத்தில் ஸ்ரீ ராவ் சாஹேப் மாதவராம் சாந்த் இல்லத்தில் இருந்தவாறு பக்தர்களுக்கு தர்சனம் தந்தாரல்லவா?அப்புறம் அங்கிருந்து ஹனுமான் காட் டில் இருந்த சங்கரமட த்துக்கு சென்றார். அங்கு சிலநாள் இருந்தார்.

அந்த வருஷம் தனுர் மாதம் 17ம் தேதி டிசம்பரில் ஆரம்பித்தது. மஹா பெரியவா வேத வ்யாஸர் தரிசனத்துக்காக வ்யாஸ காசிக்கு சென்றார். 27ம் தேதி டிசம்பர் அங்கே சென்று கௌரி கும்பத்தில் ஸ்னானம். கிட்டத்தட்ட ஐந்தரை மாத காலம் காசியில் வாசம். ஒவ்வொரு நாளும் விசேஷ நாளாக கழிந்தது. ஏதோ ஒரு முக்கிய சம்பவம் விடாமல் தொடர்ந்து நடக்கும். விவரங் களை எழுதி வைக்க தான் எவரும் இல்லாமல் போய்விட்டார்கள்.

''பெரியவா அவசியம் காசி ஹிந்து பல்கலைக்கழகத்துக்கு வருகை தரவேண்டும்'' என்று பண்டிட் மதன் மோகன் மாளவியா அழைத்தார். அழைப்பை ஏற்று மஹா பெரியவா அங்கே சென்றார். மஹா பெரியவா வருகை பற்றிய சேதி கிடைத்து காசி ஹிந்து ஸர்வ கலாசாலையில் எல்லா கட்டிடங்களும் விமரிசையாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. மாளவியா, ஸர்வகலா சாலை உயர் அதிகாரிகள், பண்டிதர்கள், ப்ரொபஸர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவருமே பெரும் கூட்டமாக கூடியிருந்தார்கள். மஹா பெரியவாளை வரவேற்க ஏராளமானோர் காத்திருந்தார்கள்.

மாளவியா முக்கியமானவர்களை, பிரமுகர்களை, மஹாபெரியவாளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சர்வ கலாசாலை கட்டிடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்று அங்கு நடத்தும் கல்வி வழி முறைகளை விவரித்தார். பிறகு விசேஷமாக அமைக்கப்பட்ட மேடைக்கு அழைத்து வந்தார்.
அதில் மஹா பெரியவா, ஜகத்குரு அமர்வதற்கு ஒரு ஸிம்மாஸனம் போடப்பட்டிருந்தது.

தனது ஸம்ஸ்க்ரித வரவேற்புரையை அந்த விழாவில் பண்டிட் மதன் மோஹன் மாளவியா ஐந்து ஸ்லோகங்களுடன் வாசித்தார். அவை அவர் ஸம்ஸ்க்ரிதத்தில் மஹா பெரியவா மேல் இயற்றியவை. ஸமஸ்க்ரிதத்தில் எழுதியது கிடைக்கவில்லை, ஆங்கிலத்தில் அது இது தான்:

“yadvaachaam lasithaihi triloka janathaa mohaandhakaarakshayaha
padaabja smaranena yasya kalushadh vamsaath praasadaha sthiraha|
tasyaadvaita giram guroho bhagavathaha Sri Sankarasyonnathham
Kanchi peetapatham yateeswaramahan sthane twayaadhishtitham|| (1)

Tathva gnaana tapaha samaadhi karunodhaarya prasaadaadhibhihi
Punyam bhaaratha varshamethadhanagam praapnothi laabham param|
Keerthyate amalayaa yateendra! Mahataamaadarshathaam praapthayaa
Santaha santatamullasanthi cha dishaha sarvaahaa samudhbhaasithaha|| (2)

Swaamin! Swaagathamasthuthe shivapuri shree vishwavidyalaye
Shikshaakendra varetra bhaarata bhuvam vidyaarteenaam sarvataha|
Sreemadvaktra saroruhoditha shubhasheergeehi sudhaadhaarayaa Saapalyam
shrutijanmano bhavatu nah shaantyai shravantayaa bhuvaha|| (3)

Ghore kalau prathidhisham bhuvi satya dharmo
hantaapakarsha madhunaa nitaraamupaithi|
Tasyonnathihi punarihaakilamangalaarthaa
bhooyaadhyathaa, karunayopadishethi yaache|| (4)

Praanchya prateechyashubhamaavasamanyavena
bhogaapavargadha sukshina dhaanasheelaha|
Eshokhilabhyu dhayakrudhyathivarya!
Vishwa vidyaalayastava shubhaagamanena dhanyaha|| (5)
Maaga shukla sapthami sam -iti nivedayathi – malaviyo madanamohanaha|”

இந்த ஸ்லோகங்கள் என்ன சொல்கிறது?
ஸ்ரீ ஆதி சங்கரரின் காஞ்சி பீடத்தில் அலங்கரிக்கும் இந்த மஹா புருஷரின் தாமரைப் பாதைகளை தியானித்தால், அறியாமை விலகும், அவரது பொன்னான மொழிகள் உலகெங்கும் எதிரொலிக் கிறது. சகல சாஸ்திரங்களையும் அவற்றின் உள்ளடங்கிய தத்துவங்களையும் கண்ணாடிபோல் பிரதிபலிக்கும் மஹா புருஷர் மஹா பெரியவா.

இந்த புண்ய தேசம் பாரதம் செய்த அதிர்ஷ்டத்தால், மஹா பெரியவாளின் ஞானம், ஆன்மீக எளிமை, தவம், தயாளம், இரக்கம், கனிவு ஆசீர்வாதங்கள் நாடு முழுக்க வியாபித்து எல்லோரை யும் புனிதப்படுத்துகிறது.

எங்கள் ஸர்வகலாசாலை சார்பாகவும், மாணவர்கள் சார்பாகவும், மஹா பெரியவாளை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. நாடு முழுக்க பலவேறு இடங்களிலுருந்து சகல கலைகளும், , ஸாஸ்த்ரங்களும், பண்பாடு, விஞ்ஞானம், காவியம் அனைத்தும் திரட்டி இங்கே பாடம் புகட்டுகிறோம். கலியுகத்தில் தர்மம் தாழ்வுற்று வரும் வேளையில் பகவான் தங்கள் மூலம், பொன்னான அறிவுரைகளைப் பெற்று பயனுற கொடுத்து வைத்திருக்கிறோம். என்றும் அழியாத ஞானம் இது. இந்த ஸர்வ கலாசாலை நிறுவனம் எவ்வளவு சிறப்பாக முடியுமோ அவ்வளவு ஆன்மீகம் செழிக்க பாடுபடும். கிழக்கு மேற்கு என்று பல பாகங்களில் உலகில் வாழும் மக்களின் வாழ்வு சிறக்க பாடுபடும். நல்ல கல்வியை பரப்பும்.

இந்த தேசம், மக்கள், இந்த கல்வி நிலையம், எல்லாமே தங்கள் விஜயத்தால், மிகவும் பயனுறும் என்று பெருமைப்படுகிறோம்.

மஹா பெரியவா தன்னுடைய ஏற்புறையில் குறிப்பிட்டது:

“நமது ஹ்ருதயத்தில் அமைதி சாந்தம் நிரம்பியிருந்தால், வாழ்வில் சந்தோஷம் பொங்கி வழியும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அப்படிப்பட்ட பக்தி நிறைந்த சாந்தம், எல்லோரின் மனதிலும் நிரம்ப ரொம்ப முயற்சிக்க வேண்டும். அனுபவமாக அதைப் பெறவேண்டும். மனதில் அமைதி சாந்தம் குறைந்தால் தான் கஷ்டங்கள், ஏக்கம், துக்கம், துயரம் என்று பல சங்கதிகள் நம்மை வாட்டும். அமைதியின்மை, சந்தோஷமின்மையை விரட்டுகிறேன் என்று முனைபவர்கள், மற்றவர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்துகிறார்கள். அவர்களுக்கும் அமைதியில்லாத நிலையை தந்துவிடுகிறார்கள். இது தொடர்ந்தால் சமூகத்தில் நிம்மதியின்மை தான் விளையும். அரசாங்கம் இதை கட்டுப்படுத்த ஆயுதம், அதிகாரம், சட்டம், நீதி, தண்டனை ஆகியவற்றை பயன்படுத்த நேரிடும். அமைதி, நிம்மதி, குறையக் குறைய கெடுபிடிகள், சட்ட திட்டங்கள், அதிகாரம், தடுப்பு, கட்டுப்பாடு அதிகரிக்கும்.
வெளியே ஈர்க்கும் லோகாயத சமாசாரங்களிலிருந்து விடுபட்டு, உள்நோக்கி பிரவேசித்தால் அங்குள்ள ஏராள, தாராள அமைதி கிடைக்கும், மனதிலிருந்து துயரங்கள் கோபம், தாபம் சகலமும் நீங்கும், அந்த இடத்தை அமைதி, சாந்தம் பிடித்துக் கொள்ளும். நல்ல குரு வழிகாட்டுவார். இது போன்ற அருமையான கல்வி கேந்திரங்கள் அதற்கு சரியான வழி கோலும் .அதெல்லாம் கற்று வாழ்வில் முன்னேற இந்த நிறுவனத்தோடு இணைந்த மாணவர்களாகிய நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். காசியில் அற்புதமான மன அமைதி கிட்ட இது உதவும். இங்குள்ள பெரியோர்கள் குழந்தைகளுக்கு இதை எல்லாம் எடுத்துச் சொல்லவேண்டும். அது அவர்கள் கடமை. எல்லோரும் சாந்தமாக அன்போடு பரஸ்பர நேசத்தோடு வாழ்ந்தால், அரசாங்கத்துக்கு பளு குறையும். செலவு குறையும். போலீசுக்கு வேலை மிச்சம் நீதி நேர்மை நிலவினால் கோர்ட் கேஸ் இருக்கவே இருக்காது. அமைதியான தேசம் நமக்கு மிஞ்சும்.

பண்டைய கல்வி முறை, எதிர்பார்ப்பு எல்லாமே, மன அமைதி. அதற்காகவே குருமார்கள் ஆசிரமங்களை சப்தமில்லாத காடுகளில், சந்தடி இல்லாத இடங்களில், மலைகளில் நிறுவியிருந்தார்கள். நமது கல்வி முறை இதை அறிந்து, விஞ்ஞான வளர்ச்சியோடு ஆன்ம வளர்ச்சியும் பெறுக உதவினால் அதைவிட சிறந்த எதிர்கால வாழ்வு குழந்தைகளுக்கு, மாணவர்களுக்கு கொடுக்க முடியாது. உணர்ச்சிகளை தூண்டும், ஐம்புலன்கள் இழுக்கும் பக்கம் சாய அனுமதித்தால் தேவையில்லாமல் மன அமைதி இழப்போம், நிம்மதியைத் தேடி அலைய வேண்டியது தான். நல்ல கல்வியினால் தான், நல்லொழுக்கங்களை கற்பித்தால் தான், சமூகம் முன்னேறும், அதன் மூலம், நாடு சிறக்கும். நல்ல பாதையில் வளரும் சுபிக்ஷம் அடையும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...