Monday, February 7, 2022

SRI LALITHA SAHASRANAMAM

 ஸ்ரீ லலிதா  ஸஹஸ்ரநாமம்   -  நங்கநல்லூர்   J K   SIVAN

ஸ்லோகங்கள்  175-176  நாமங்கள்  948-963

पञ्चमी पञ्चभूतेशी पञ्च-संख्योपचारिणी ।
शाश्वती शाश्वतैश्वर्या शर्मदा शम्भुमोहिनी ॥ १७५॥

Panchami panchabhuteshi panchasankhyopacharini
shashvati shashvataishvarya sarmada shanbhumohini – 175

பஞ்சமீ பஞ்சபூதேசீ பஞ்ச-ஸங்க்யோபசாரிணீ
சாச்வதீ சாச்வதைச்வர்யா சர்மதா சம்புமோஹினீ 175

धराधरसुता धन्या धर्मिणी धर्मवर्धिनी ।
लोकातीता गुणातीता सर्वातीता शमात्मिका ॥ १७६॥

Dharadharsuta dhanya dharmini dharmavardini
lokatita gunatita sarvatita shamatmika – 176

தராதரஸுதா தன்யா தர்மிணீ தர்மவர்த்தினீ
லோகாதீதா குணாதீதா ஸர்வாதீதா சமாத்மிகா 176

*948*   पञ्चमी  பஞ்சமீ
பஞ்சமி  என்றால் ஐந்தாவது என அர்த்தம்.  ப்ரம்மா, விஷ்ணு, சிவன், ருத்ரன், சதாசிவன் என்று ஐந்து தெய்வங்களுக்கு  தலைமையானவள்  அம்பாள் ஸ்ரீ லலிதை.   இதில் சதாசிவன் பிரதானமானவர். ப்ரளயத்துக்குப் பிறகு  பிரபஞ்சத்தை புதுப்பிப்பவர்.  அவரை பஞ்சமா  என்று அழைக்கிறோம்.  அவரது பத்னி தான் பஞ்சமி.  வாராஹிக்கு ஒரு பெயர்  பஞ்சமி.  சப்த மாதாக்களில் ஐந்தாமவள் என்பதாலும்  பஞ்சமி என்று அவளுக்கு நாமம்.   முக்திக்கு கைவல்யம் என்றும் பெயர். ஐந்தாவது நிலை.  மற்ற நான்கு :  ஸாலோக்யம், ஸாரூபம் ,ஸாமீப்யம் ,ஸாயுஜ்யம். 

*949*  पञ्च-भुतेशी  பஞ்சபூதேசீ
அம்பாள்  பஞ்ச பூதங்களுக்கு அதிபதி.  தைத்ரிய உபநிஷத் இதை விளக்குகிறது:  (II.i.1)  ஸ்லோகத்தில்   ஸத்யம் , ஞானம், அனந்தம் ,ப்ரம்மா  என்று சொல்லும்போது,   உண்மை, அறிவு எல்லையற்ற பிரபஞ்சம்  இதெல்லாம்  ப்ரம்மம்  என்கிறது.   ப்ரம்மத்திலிருந்து  தான் ஆகாசம்  முதலான பஞ்ச பூதங்கள் உருவாகிறது.   நாராயணன் ஆகிய  மஹாவிஷ்ணு  தரித்திருக்கும் மாலை  வைஜயந்தி மாலை.  அது ஐந்து மணிகளால் ஆனது.  முத்து, மாணிக்கம், மரகதம், வைரம் கோமேதகம்  ஆகியவற்றை கோர்த்தது.  இது ஐந்தும் பஞ்ச பூதங்களை குறிப்பது.  பஞ்சபூதங்களின் சக்தியஹே கொண்டது வைஜயந்தி மாலை என்பதால் அம்பாளுக்கும்  அதே பெயர்.

*950*  पञ्च-संख्योपचारिणी  பஞ்ச-ஸங்க்யோபசாரிணீ
அம்பாளுக்கு நைவேத்தியங்கள் அளிப்பதிலும்  ஐந்து வகை   இருக்கிறது.  சங்க்யி  என்றால் இணைந்த, சேர்ந்த, என்று பொருள்.   உபசாரம்  என்பது பக்தியோடு  மரியாதையோடு செய்வது.  ஐந்து வகையாக  அர்ப்பணிப்பவை:   கந்தம் ( சந்தனம்,)புஷ்பம், தூபம், தீபம்,  பிரசாதம் நைவேத்தியம். ,

*951*   शाश्वती  சாச்வதீ
நிரந்தரமானவள்  அம்பாள்.  

*952* शाश्वतैश्वर्या  சாச்வதைச்வர்யா
 நிறைவான, நிரந்தரமான, குறைவற்ற  செல்வம் தான்  ஐஸ்வர்யம்.  சுபிக்ஷம். 

*953* शर्मदा   சர்மதா
ஸர்மன்  என்றால் சந்தோஷம்,  ஆனந்தம்,  சௌகர்யம், சௌலப்யம், 

*955*  धरा  தரா
அம்பாள்  பூமீஸ்வரூபம்.  பூமா தேவி என்று கூட  சொல்லலாம்.  ப்ரக்ரிதி தேவி.   தாரா என்றால்  .தாங்குவது . பொறுப்பது. பாதுகாப்பது,  ரக்ஷிப்பது,   ஏற்பது.  இதெல்லாம்  ஒரு தாயின் கருணையோடு நிறைவேறும்  காரியங்கள்.  தர எனும் வார்த்தையிலிருந்து வந்தது  தரணி.

*956* धर-सुता  தரஸுதா  
சுத என்றால் மகள் .  பெண்.  ஹிமவான்  செல்லப்பெண் அம்பாள். ஹேமா.  ஹைமவதி.  தர என்ற சொல்  மலைகள் காடுகளையும்  கூட  பூமியில் பாகமாக கொண்டது.  

*957*  धन्या தன்யா.   
அள்ளித்தருபவள் அம்பாள். தன்யா என்றால்  அளிப்பது.  தருவது, கொண்டுவருவது. வாரி வழங்குவது. தானத்திலிருந்து வந்த சொல் தன்யா.  நன்றியைக்  கூட  தன்யா  என்று சொல்வது மரபு. தன்யவாத்   என்றால் தேங்க்ஸ்.  மனிதனின் கடைசி  நேரம் சரமகாலம்.   அப்போது நால்வகை  எண்ணங்கள் தோன்றும்.   மோசமான  கீழ்த்தர எண்ணங்கள் அவனை  தாவரம்,  மிருகம்,பறவையாக  அடுத்த பிறவி எடுக்க வைக்கும்.   எதன்மீதிலோ, யார்மீதிலோ கோபத்தோடு  இருந்தால்  அவன் கெடுதல் செய்யும்  ஜந்துக்களாக பிறப்பான்,   கொசு, கொட்டும்  வண்டு , தேள், பூரான், பாம்பு  போல. முக்தி அடைவது சுலபமல்ல.   பிறருக்கு உதவும், நல்லது செய்யும் எண்ணம்  மனதில் இருந்தால்,  வேதநூல்கள், சாஸ்திரங்கள்,  புராணங்கள்  கீதை போல் ஏதாவது ஸ்லோக  எண்ணம் மனதில் இருந்தால்,  சத் சங்கத்தில் பிறப்பான்.  பகவான் மேல்  ஸ்துதி,  பாராயணம் என்று கேட்டுக்கொண்டு மனது அதில் லயித்து இருந்தால் மோக்ஷத்தை அடைவான்.   அடுத்த பிறவி இல்லை.
அந்திம நேரத்தில் அதனால் தான்  நோயாளிக்கு கேட்குமாறு  விஷ்ணு சஹஸ்ரநாமம், கீதை, லலிதா சஹஸ்ரநாமம், நாராயணீயம் எல்லாம்  பாராயணம் செயகிறோம். 

*958*   धर्मिणी தர்மிணீ
எது நிரந்தரமாக ஸ்தாபிக்கப்பட்டதோ எது மாறாததோ,  எது நீதியோ,  எது விதியோ, எது பாரம்பரியமோ,  பழக்க வழக்கமோ,  அந்த  தர்மமே  அம்பாள் ஸ்ரீ லலிதை என்கிறார்  ஹயக்ரீவர்.

*959  धर्म-वर्धिनी - தர்மவர்த்தினீ
பக்தர்களுக்கு  சரியான  பாதையை காட்டுபவள்  அம்பாள்.  தர்ம வழியில் செல்ல வைப்பவள்
பரமேஸ்வரன் தன்னடக்கம் கொண்டவன்.  

*960*  लोकातीता   லோகாதீதா
ஈரேழு லோகங்களையெல்லாம் கடந்தவள்  அம்பாள்.    பரமேஸ்வரனோடு   மஹா கைலாசத்தில்  வாஸம்  செய்பவள். 

*961*  गुणातीता   குணாதீதா
அம்பாள்  குணங்களுக்கு அப்பாற்பட்டவள்.   நிர்குண ப்ரம்மம். 

*963 सर्वातीता ஸர்வாதீதா  
அம்பாள் ஸகல  புவனத்
தையும்  கடந்தவள் .  அம்பாளின்  உதவியோடு தான்  சிவனை அடைந்தாகவேண்டும் 

*963*  शमात्मिका  சமாத்மிகா
சமா   என்றால்  மனதின் பாரபக்ஷமற்ற  வேண்டியது வேண்டாதது அற்ற  சமநிலை. சாந்த நிலை. த்யானம் மூலம் பெறுவது. மாயையிலிருந்து விலகியபின் கிட்டுவது.  அம்பாள் சாந்த  ஸ்வபாவம் கொண்டவள்.  ஸம்  என்றால்  சந்தோஷம்,  புனிதம், நிரந்தரம்.  அம்பாள் இதெல்லாம் ஒன்று சேர்ந்தவள்.

சக்தி பீடம்:    தக்ஷிணேஸ்வர்   பவதாரிணி -  

வங்காளத்தின்  தலைநகரமனா  கொல்கத்தாவில்   தக்ஷிணேஸ்வர்  எனும்  பகுதியில் அமைந்திருப்பது  மிக சக்தி வாய்ந்த  பிரதானமான  காளி  கோயில்.  ஹூக்ளி ஆற்றின் கிழக்குக் கரையில்  உள்ள இந்த  ஆலயத்தில் காளியின் பெயர்  பவதாரிணி.
இக் கோயிலைச் சுற்றி வெளியிடமும், அதனைச் சூழவுள்ள மதிலின் உட்புறத்தில் அறைகளும் அமைந்துள்ளன. ஆற்றங்கரையில் சிவனுக்குப் பன்னிரண்டு சிறு கோவில்கள் அமைந்துள்ளன. கடைசிச் சிவன் கோயிலுக்கு அருகே வட மேற்கு மூலையில் அமைந்துள்ள கூடம் ஒன்றிலேயே இராமகிருஷ்ண பரமஹம்சர் தனது வாழ்வின்  பெரும்பகுதியைக் கழித்தார்.. 

1847 ஆம் ஆண்டில், ஜமீந்தாரிணியான ராணி ராசமணி   காசிக்கு ஒரு நீண்ட யாத்திரை செல்ல  விரும்பினார். இவரும், உறவினர்களும், வேலையாட்களும், தேவையான பொருட்களுடன் 24 படகுகளில் செல்ல  ஏற்பாடு.   கிளம்புவதற்கு முதல் நாள் இரவில் ராணியின் கனவில் தோன்றிய காளி,  ''நீ  காசிக்குப் போக வேண்டாம்.  கங்கை ஆற்றங்கரையில் அழகிய கோயிலொன்றைக் கட்டி அங்கே எனது சிலையை  ஸ்தாபித்து பக்தர்கள் வழிபடச்  செய் ''  என்றாள்.  உடனடியாக  ராணி ராசமணி ,  நிலம்  வாங்கி கோயிலைக் கட்டத் தொடங்க,  1847-1855,  எட்டு வருஷங்களில்  கோயில் பிரம்மாண்டமாக உருவாகியது. 

இதன் தலைமைக் குருக்களாக  ராமகிருஷ்ண பரம ஹம்சர்  30 ஆண்டுகள்  பூஜை செய்து   1886 ஆம் ஆண்டில் அவர் மறையும் வரை  அக்கோயில்   பேரும்  புகழும் பெற்று, உலகப் பிரசித்தமானது. 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...