Thursday, February 10, 2022

sri lalitha sahasranamam

 ஸ்ரீ  லலிதா ஸஹஸ்ரநாமம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN

ஸ்லோகங்கள்:  177-178  நாமங்கள்  964-976

बन्धूक-कुसुमप्रख्या बाला लीलाविनोदिनी ।
सुमङ्गली सुखकरी सुवेषाढ्या सुवासिनी ॥ १७७॥

Bandhuka kusuma prakhya balalila vinodini
sumangali sukhakari suveshadya suvasini – 177

பந்தூக-குஸும-ப்ரக்யா பாலாலீலாவிநோதினீ
ஸுமங்கலீ ஸுககரீ ஸுவேஷாட்யா ஸுவாஸினீ 177

सुवासिन्यर्चन-प्रीताऽऽशोभना शुद्धमानसा ।
बिन्दु-तर्पण-सन्तुष्टा पूर्वजा त्रिपुराम्बिका ॥ १७८॥

Suvasinyarchana prita shobhana shudhamanasa
bindutarpana santushta purvaja tripuranbika – 178  

ஸுவாஸின்யர்ச்சன-ப்ரீதா சோபனா சுத்தமானஸா
பிந்துதர்ப்பண-ஸந்துஷ்டா பூர்வஜா த்ரிபுராம்பிகா 178

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்    964-976 அர்த்தம்: 

*964*  बन्धूक-कुसुम-प्रक्ख्या   பந்தூக-குஸும-ப்ரக்யா
செவ்வரளி புஷ்பம்  பளிச்சென்று  கண்ணைப் பறிக்கும்  சிவப்பு வர்ணத்தை உடையது.  அம்பாளுக்கு மிகவும் பிடித்த மலர் இது.  அவள்  நிறமும் அதே தானே.

*965*  बाला   பாலா
பாலா என்று  பாசத்தோடு அழைக்கப்படுபவள்  ஸ்ரீ லலிதை.  சிறு பெண் அழகி அவள். பாலா வித்யா உபாசகர்கள் அவளை  பாலா மந்த்ரார்ச்சனை உச்சாடனம்  செய்து   வழிபடுபவர்கள். ஸ்ரீ வித்யா உபாசனையில் முதல் மந்திரம்  பாலா 
மந்த்ரம். ''ஐம், க்ளிம் , சௌம்''. சிவப்பு ஆடை கொண்டவள், நெற்றியில்  பிறைச் சந்திரன். நான்கு கரங்கள், மூன்று கண்கள், செந்தாமரையில்  வீற்றிருப்பவள். புஸ்தகம், ஜபமாலை இரு கைகளில் ஏந்தி,அபய ஹஸ்தம்  வரத  ஹஸ்தங்களோடு அருள் பாலிப்பவள்.

*966*   लीला-विनोदिनी   லீலாவிநோதினீ    
அம்பாளின்  அற்புத  செயல்களை  லீலைகள்  என்கிறோம்.  ஸ்ரிஷ்டி,   ஸ்திதி,  ஸம்ஹாரம்  ஆகிய முத்தொழில்கள் அவளது பிரதான செயல்கள்.

*967*  सुमङ्गली   ஸுமங்கலி 
மங்கலம் என்றால்  சுபம்.   பத்னி, பதிவ்ரதை  மங்களா  எனப்படுகிறாள்.  பொதுவாக மணமான பெண்களை சுமங்கலிகள் என்கிறோம்.  பரமேஸ்வரன் பத்னி  அம்பாள்  மங்களாம்பிகை.  மூக பஞ்ச சதி எழுதி வருகிறேன்.  ஐந்து சதகங்களில்  ரெண்டாவது சதகம்   பாதாரவிந்த சதகம்.  அதில்  59 வது ஸ்லோகம் தான்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது..  நவகிரஹங்களும்  அம்பாளின் தாமரைத் திருவடிகளை  பணிந்து செயல் படுபவை என்று வருகிறது.  இதை பாராயணம்  பண்ணினால்  நவகிரஹங்களினால்  விளையும், உற்பாதங்கள்,  தீயவை,   விலகும் என்பார்கள்.

दधानो भास्वत्ताममृतनिलयो लोहितवपुः
विन्म्राणां सौम्यो गुरुरपि कवित्वं च कलयन् ।
गतौ मन्दो गङ्गाधरमहिषि कामाक्षि भ्जतां
तमः केतुमार्तस्तव चरण्पद्मो विज्यते ॥

dadhāno bhāsvattāmamṛtanilayo lohitavapuḥ
vinmrāṇāṁ saumyo gururapi kavitvaṁ ca kalayan ।
gatau mando gaṅgādharamahiṣi kāmākṣi bhjatāṁ
tamaḥ ketumārtastava caraṇpadmou vijyate ॥

*968*   सुखकरी    ஸுககரீ
ஆனந்தத்தை  அள்ளித்  தருபவள் என்று இந்த நாமம் அம்பாளைப் பாடுகிறது. 

*969*  सुवेषाढ्या   ஸுவேஷாட்யா
அழகாக  அலங்காரம் செய்து கொண்டு காட்சி தருபவள் அம்பாள்.  அழகுக்கு  அழகு.  

*970*   सुवासिनी  ஸுவாஸினீ  
மணமாகி, புருஷன்  குழந்தைகள், குடும்பத்தில் மற்றவர்களுக்கு  அரணாக  தனது கடமைகளை ஆற்றிவரும்  பக்தி மிக்க  பெண்ணை  சுவாசினி என்று போற்றுகிறோம்.   வால்மீகி ராமாயணத்தில்  (அயோத்யா காண்டம், 117வது சர்கம் , 22-24  ஸ்லோகங்களில் வரும்) அனசூயா  ஒரு சுவாசினி எத்தகையவள்  என்பதை சித்திரிக்கிறாள்.  சீதையிடம் உள்ள  உயர்ந்த குணாதிசயங்கள், தன்மைகள் வெளிப்படுகிறது.  அம்பாள் மிகச்சிறந்த  உன்னத ஸுவாஸினி .

*971* सुवासिन्यर्चन-प्रीता    ஸுவாஸின்யர்ச்சன-ப்ரீதா
 ஸுவாஸினிகள்  ஒன்று சேர்ந்து, கூடி,   பூஜித்து தன்னை வழிபடுவதை அம்பாள் பெரிதும் விரும்புபவள் .   
நவாவரண பூஜையின் முடிவில் அவசியம் ஸுவாஸினி  பூஜை உண்டு.

*972*  आशोभना   ஆசோபனா
சோபனா என்றாலே  இணையற்ற அழகு மிகுந்த என்று அர்த்தம்.  அதற்கு முன்னால்  ஒரு  ஆ  போட்டு  அந்த அழகு இன்னும் அதிகமாக  சோபிக்க வைக்கிறார்  ஹயக்ரீவர்.  

ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகங்களில்  முதல்  40 ஸ்லோகங்கள்  ஆனந்த லஹரி அது ஆனந்தத்தை, விவரிக்க  அடுத்த  59 ஸ்லோகங்கள்  அம்பாளின்  சிறப்பு மிக்க  லாவண்யத்தை  விவரிக்கிறது.

*973* शुद्धमानसा    சுத்தமானஸா
பரிசுத்த மனதைகொண்டவள்  அம்பாள் ஸ்ரீ லலிதை.  மனதில்  புலன்களின் சக்தி கலந்துவிட்டால் அதன் புனிதம் கெடுகிறது.  அம்பாளை  உணர்வுகளின்  ஒருமையாக,  மனதில் தூய்மை ஒன்றே  நிரம்பிய  புனிதவதியாக  போற்றுகிறோம். நமது மனம் முழுமையாக அம்பாளின் நினைவிலேயே  ஈடுபடும்போது நாமும் புனிதமடைகிறோம்.  இது தியானத்தால்  நாம் பெறுவது.

*974* बिन्दु-तर्पण-सन्तुष्टा.   பிந்துதர்ப்பண-ஸந்துஷ்டா
பிந்து என்றால் என்ன என்று முன்பே  விளக்கி இருக்கிறது.  ஸ்ரீ சக்ர மத்தியில் உள்ள நுண்ணிய பாகம் தான்  பிந்து. சக்தி வாய்ந்தது.  அதற்கு செலுத்தும் நமது பூஜை, அர்ச்சனை,  அர்ப்பணங்கள்  அம்பாளை மகிழ்விக்கும்.  பிந்துவுக்கு  ஸர்வானந்தமய சக்ரம், பைந்தவ  ஸ்தானம்  என்றும்  பெயர்கள்  உண்டு.  விசேஷ அர்க்யங்கள்,  அர்ச்சிக்க  புஷ்பங்கள் இதற்கென்று உள்ளது. 
நவாவரண பூஜை, வழிபாடு புரிபவர்கள்  விவரமாக இதை எடுத்துச் சொல்வார்கள்.

*975  पूर्वजा  பூர்வஜா
பிரபஞ்சத்தில்  ஸ்ருஷ்டிக்கு  முன்னதாகவே  விளங்கியவள்  அம்பாள்.  பரமேஸ்வரன் அம்பாளை ஸ்ரிஷ்டித்தான். அவள்  பிரபஞ்சத்தை ஸ்ரிஷ்டித்தாள் என்று சொல்வதுண்டு. அவள் ப்ரம்மஸ்வரூபிணி. நாம ரூபமற்றவள்.  ப்ரம்மத்தில் இருந்து உருவானதே  மாயத்தோற்றங்கள்.
 
*976*  त्रिपुराम्बिका   த்ரிபுராம்பிகா
ஸ்ரீ சக்ரத்தில்  எட்டாவது  ஆபரண  தலைவியாக திகழ்பவள்  த்ரிபுராம்பிகை. மிகவும் உள்ளடங்கிய  முக்கோண ஆவரணம் இது. இதன் மத்தியில் தான் பிந்து ஸ்தாபனமாகி உள்ளது.  ஸ்ரிஷ்டி  ஸ்திதி, ஸம்ஹார  முக்கிய மூன்று தொழில்களுக்கும்  தாய்  லலிதாம்பிகை என்று இந்த நாமம் அவளை போற்றுகிறது.   இந்த  ஸ்ரீ சக்ர த்ரிகோணத்தின்  முனைகளில் நின்று  பாதுகாப்பவர்கள்  வாமி, வஜ்ரேஸ்வரி, பகமாலினி  எனும் உபதேவிகள். 

ஒன்பதாவது,  நவ ஆவரணத்தின்  த்ரிகோணங்களின் ஒட்டு மொத்த மாக  ஸ்ரீ லலிதாம்பிகை பூஜிக்கப்படுகிறாள். 

சக்தி பீடம்:      கனகதுர்கா  ஆலயம், விஜயவாடா..
விஜயவாடா  ரயில் நிலையத்திலிருந்தே  பளிச்சென்று தெரியும்  இந்த்ரகீலாத்ரி மலையில்,  கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளது கனகதுர்கா ஆலயம்.  விடிகாலையில் ரயில்  விஜயவாடாவில் நின்றவுடன்,  இறங்கி  எதிரே ஹோவென்று  பரந்த இருண்ட  க்ரிஷ்ணா நதியில்  ஸ்னானம் செய்துவிட்டு, குளிரில்  வெவெடவென்று  நடுங்கிக்கொண்டு நானும் என்னுடன் 25 பேரும்  மலையேறி  கனக துர்கா ஆலயம் சென்றது நினைவுக்கு வருகிறது.
அம்பாள் ஸ்வயம்பு. த்ரிதீய கல்பத்தில் உருவானவள்.  மகிஷாசுரனை வென்ற  கனக மஹா லக்ஷ்மி
இந்திரகீல மஹரிஷியின்  தவத்தை மெச்சி, அவர் விருப்பப்படிய  அவரது சிரத்தில் அமர்ந்து ராக்ஷஸர்களை கண்காணித்தாள்  என்று புராணம் சொல்கிறது.  அந்த ரிஷி தான் மலை இப்போது.
அதன் உச்சியில் தான் அம்பாளை கனகதுர்காவாக  தரிசிக்கிறோம்.  நாலு அடி  உயரத்தில்  அஷ்ட புஜங்களுடன்  கனகதுர்கா தேவி  தரிசனம்  தருகிறாள்.  எட்டு கரங்களிலும்  ஆயுதங்கள்.பிரதான  ஆயுதமான  த்ரி சூலத்தை தரித்தவள். 
ஆடி மாதத்தில்  சாகம்பரி  விழா  மஹோன்னதமாக கொண்டாடப்படும். எண்ணற்ற  காய்கறிகள், விளைபொருள்களால் அம்பாளை அலங்கரிப்பார்கள். கண்ணுக்கு விருந்தாக  காட்சி தருவாள். 
சாகம்பரிக்கென்றே  உத்தரபிரதேசத்தில்  ஷிவாலிக் மலைத்தொடரில்   ஸஹ்ரான் பூர்  அருகே  ஒரு தனி ஆலயம் இருக்கிறது. 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...