காமாக்ஷி திருப்புகழ் தெரியுமா?- நங்கநல்லூர் J K SIVAN
''திருப்புகழ் தெரியுமா?
''ஓ, தெரியுமே, அதான் அந்த ''கைத்தல நிறைகனி ' என்று ஸ்கூலில் கடவுள் வணக்கம் பாட்டு பாடுவோமே அது தானே.'
'அருணகிரி நாதர் என்று ஒருவர் பாடியது நிறைய . அதில் ஒன்று தான் நீங்க சொல்ற ''கைத்தல நிறைகனி ''.. பாட்டு முழுசா தெரியுமா?
''இல்லே இல்லே, தெரியாது. அப்புறம் ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்'' எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும்.
''ஓதாமல் ஒருநாளும் '' திருப்புகழ் இல்லே. சரி, திருப்புகழ் யார், யார் மேலே, பாடினது என்று தெரியுமா?
''.ஹுஹும்... K B சுந்தராம்பாளா ? TMS ஆ? . பிள்ளையார் மேலேயா?' இல்லே பெருமாளே பெருமாளே என்று வருமே ' விஷ்ணு மேலே தானே ?
'அருணகிரி நாதர் என்று ஒருவர் பாடியது நிறைய . அதில் ஒன்று தான் நீங்க சொல்ற ''கைத்தல நிறைகனி ''.. பாட்டு முழுசா தெரியுமா?
''இல்லே இல்லே, தெரியாது. அப்புறம் ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்'' எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும்.
''ஓதாமல் ஒருநாளும் '' திருப்புகழ் இல்லே. சரி, திருப்புகழ் யார், யார் மேலே, பாடினது என்று தெரியுமா?
''.ஹுஹும்... K B சுந்தராம்பாளா ? TMS ஆ? . பிள்ளையார் மேலேயா?' இல்லே பெருமாளே பெருமாளே என்று வருமே ' விஷ்ணு மேலே தானே ?
''போதும் போதும். ரொம்ப ஜாஸ்தி. நானே சொல்லிவிடுகிறேன். ரெண்டுமே இல்லை. பல முருகன் கோவில்கள், ஸ்தலங்களுக்கு சென்று அங்கே எல்லாம் அருணகிரி நாதர் பாடிய அற்புத பாடல்கள் தான் திருப்புகழ். சக்தி வாய்ந்தவை. முருக பக்தர்கள் பஜனையாக பாடுவதற்கு கேட்க ஆனந்தமாக இருக்கும். திருப்புகழ் மணி என்றே ஒரு பெரிய ஜட்ஜோ வக்கீலோ நிறைய பாடியிருக்கிறார். இப்போது திருப்புகழ் பாடுவோர்கள் அதிகம் காணோம். நம்பிக்கை, பக்தி, பழைய பழக்கங்கள் சீராக, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தும், மறைந்தும் போவதை தடுக்க வேண்டும். பெற்றோர்கள் முக்கியமாக குழந்தைகளுக்கு பாடத்தைத் தவிர பண்பாட்டை, நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தவேண்டும். வீட்டில் பஜனைப் பாடல்கள் சேர்ந்து பாடும் பழக்கம் வரவேண்டும்.
அருணகிரி நாதர் திருப்புகழே இப்படி தெரியாமல் இருக்கும்போது நான் ''காமாக்ஷி திருப்புகழ் தெரியுமா'' என்று கேட்டால், அருணகிரி நாதர் காமாக்ஷி மேலும் பாடி இருக்கிறாரா? என்று கேட்பவர்கள் இருப்பார்கள். நானே சொல்லிவிடுகிறேன்.
ஸ்ரீ. ரா. சோமசுந்தரமய்யர் 122 வருஷங்களுக்கு முன்பு பிறந்து அப்பா, அம்மா. ராமசாமி அய்யர், சுப்புலக்ஷ்மி அம்மாளுக்கு மட்டும் மகிழ்ச்சியைத் தரவில்லை. உலகெங்கும் உள்ள அன்னை காமாக்ஷி தேவி பக்தர்களுக்கும் ஒரு அருமையான பரிசு தந்திருக்கிறார்.
சிவகங்கை ஜில்லா, மானாமதுரையில் பிறந்து மதுரையில் சேதுபதி ஹை ஸ்கூலில் SSLC வரை படித்துவிட்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கணிதத்தில் BA பட்டம் பெற்று, பிறகு திருவனந்தபுரம் கல்லூரி வக்கீல் பட்டம் தந்து சட்ட வல்லுநர் ஆனார்.. அது முக்கியம் அல்ல.
26ம் வயதில் ஒரு ராத்திரி காமாக்ஷி தேவி தரிசனம் தந்து ''என் மேல் திருப்புகழ் எழுது'' என்றாள் . காளமேகத்துக்கு, காளிதாசனுக்கு அருளியது போலவே அம்பாள் தாம்பூலம் எச்சில் அளித்து சில வினாடிகளில் உருவாக்கிய கவியோ இவரும் என்று தான் அதிசயிக்கிறோம்! காமாக்ஷி அனுக்ரஹம் முழுதும் பெற்றவர். காமாக்ஷி திருப்புகழ் தவிர மற்ற ஸ்லோகங்கள், மொழி பெயர்ப்பும் செய்தவர். இசைத்தட்டு, ரேடியோவில் எல்லாம் அவை பாடப்பட்டு எண்ணற்றோர் கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள். புத்தகமும் வெளியாகி மஹா பெரியவா ''காமாக்ஷி திருப்புகழ்'' ரெண்டாம் பதிப்புக்கு ஸ்ரீமுகம் தந்திருக்கிறார். காமாக்ஷி திருப்புகழ் இதுவரை 5 பதிப்புகள் (1930-2021 வரை ) வெளியாகியுள்ளன. அருணகிரி நாதர் சந்தங்கள் போலவே அதே பாணியில் அற்புதமான காமாக்ஷி திருப்புகழ் பாடல்கள் பாட சுகமாக இருக்கிறது. ஒன்றிரண்டு பாடிப் பார்த்துவிட்டு தான் சொல்கிறேன்.
மஹா பெரியவா தான் இவரை காமாக்ஷி தாஸர் என்று பெயர் வைத்து கௌரவித்தது.
இன்னொரு ஆச்சரியமான விஷயம் பகிர்ந்துகொண்டு நிறைவு செய்கிறேன்.
இந்த வக்கீல் இதற்கு முன் கவி எழுதாதவர் . திருப்புகழ் சந்தங்களை ரயில் ஓடுவது போல் எழுதுவது சுலபமில்லை.
இன்னொரு விஷயம். இவர் ஓவியரும் இல்லை. திடீரென்று ஒருநாள் இரவு காமாக்ஷி யை படமாக வரையவேண்டும் என்ற ஆவலை ஏதோ ஒரு சக்தி வேகமாக அவருள் கிளப்பி விட்டது. பேப்பர் பேனாக்களுடன் உட்கார்ந்தார் வெகு சீக்கிரத்தில் காமாக்ஷி ப்ரத்யக்ஷமாக பேப்பரில் உருவானாள் .அவள் படத்தையே காமாக்ஷி திருப்புகழ் புத்தகத்தின் அட்டையாக வெளியிட்டார். அந்த படத்தை இணைத்திருக்கிறேன்.
காமாக்ஷி திருப்புகழ் 486 பக்கங்கள் கொண்டது. என்னிடம் 10 புத்தகங்கள் வந்து சேர்ந்தது. ஒன்று எனக்கு போதும். மற்ற ஒன்பது புத்தகங்களை முதலில் யார் கேட்கிறார்களோ அவர்கள் நேரில் நங்கநல்லூரில் என்னிடம் வந்து பெறலா, அல்லது தபாலில் அனுப்பிவிடுகிறேன்.
அதன் விலை ரூபாய் 300 என்று போட்டுள்ளது. பணம் எனக்கு தரவேண்டாம். அதை வெளியிடுவோர்
களுக்கே பணத்தை அனுப்பி விடலாம்.
இது விஷயமாக அணுக: ஸ்ரீ S நாகராஜன் +91 9444137373 ஸ்ரீமதி பூர்ணிமா நாகராஜன் 65 82018352, ''ஆனந்தம்'' GF, 18, ஷா வாலஸ் காலனி முதல் தெரு, ஆதம்பாக்கம், சென்னை 600088. ஈமெயில்: srikamakshidasa@gmail.com அல்லது ஸ்ரீ M D ஷங்கர் போன்: 9940051986 வாட்ஸாப்ப் பிலும் இருக்கிறார்.
No comments:
Post a Comment