Tuesday, February 1, 2022

SRI LALITHA SAHASRANAMAM

 ஸ்ரீ  லலிதா  ஸஹஸ்ரநாமம்   -   நங்கநல்லூர்   J K   SIVAN

ஸ்லோகங்கள்:  169-170   நாமங்கள்  912-922

सव्यापसव्य-मार्गस्था सर्वापद्विनिवारिणी ।
स्वस्था स्वभावमधुरा धीरा धीरसमर्चिता ॥ १६९॥

Savyapasavyamargasdha sarva padvi nivarini
svasdha svabhavamadhura dhira dhirasamarchita – 169

ஸவ்யாபஸவ்ய மார்க்கஸ்தா ஸர்வாபத் விநிவாரிணீ
ஸ்வஸ்தா ஸ்வபாவமதுரா தீரா தீரஸமர்ச்சிதா 169

चैतन्यार्घ्य-समाराध्या चैतन्य-कुसुमप्रिया ।
सदोदिता सदातुष्टा तरुणादित्य-पाटला ॥ १७०॥

Chaitanyardhya samaradhya chaitanya kusumapriya
sadodita sadatushta tarunadityapatala – 170

சைதந்யார்க்ய ஸமாராத்யா சைதந்ய குஸுமப்ரியா
ஸதோதிதா ஸதாதுஷ்டா தருணாதித்யபாடலா 170

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்   ஸ்லோகங்கள்  912-922   அர்த்தம்.

*912* सव्यापसव्य-मार्गस्था  ஸவ்யாபஸவ்ய மார்க்கஸ்தா
எங்கள் குடும்பத்தில்  சிலரை  அபசவ்யம் என்று பெரியோர்கள் திட்டியதை கேட்டிருக்கிறேன். கிறுக்கன் என்று சொல்வதை போல்  இடது கைக்கு  அபசவ்யம்  என்று பெயர்.  வேத கார்யங்கள் வலது காயாலும்  தாந்த்ரீக வழிபாடுகள் இடது கையாலும்  செய்யப்படுவது.  அம்பாள் வலது இடது இரெண்டுமில்லாத நேரான நடுவழியில் செல்பவள் என்கிறது இந்த நாமம்.   தக்ஷிண மார்க்க  பக்தர்கள் எல்லா கடவுள்களையும்  வழிபடுபவர்கள்.  சக்தி அளிக்கும் எல்லாமே  தெய்வம் நமக்கு.  நீர், அக்னி பூமி, ஆகாசம், சூரியன் சந்திரன், வாயு, கிரஹங்கள், நதிகள்,  மலைகள், சமுத்திரங்கள் எல்லாமே  உப தேவதைகள். பிரபஞ்ச இயக்கத்துக்கு அத்தியாவசியமானவை.   இப்படிப்பட்ட உபதேவதைகள் தங்களுக்கு உரித்தான முறையில் வழிபட்டால்,  உலக வாழ்க்கையில் தேவையான பயன் தருபவர்கள்.  பூஜை ஹோமங்களில்  த்ருப்திஅடைபவர்கள். இவர்கள்  இஷ்ட தேவதைகளாக அருள்பாலிப்பவர்கள்.  இஷ்ட தெய்வம்  குலதெய்வமாக இருக்க வேண்டியதில்லை.  பாரம்பரியமாக வணங்கப் படுவது தான்  குலதெய்வம்.   வருஷத்துக்கு ஒரு தடவையாவது  குடும்பத்தோடு சென்று வணங்கவேண்டிய தெய்வம்.   இடது கை  உபாசகர்கள்  தாந்த்ரீக  வழிபாட்டில் ஒரே தெய்வத்தை தான் கொண்டாடுவார்கள்.  குரு  உபதேசத்தோடு செய்வது.   பெரும்பாலும்  சக்தி தேவதைகளை,  தான் வழிபடுபவர்கள். இந்த தெய்வங்கள் முக்தி அளிக்காது.  எந்த உபதேதவத்தையை உபாசித்தாலும்,  அது கடைசியில் பரமாத்மா மஹா விஷ்ணுவான  கேசவனைத் தான் சென்றடைகிறது.  ஸந்த்யாவந்தன மந்த்ரத்திலும் இது  தான் சொல்லப்படுகிறது. ''
 sarva deva namaskāraḥ śrī keśavaṁ prati gacchati (सर्व देव नमस्कारः श्री केशवं प्रति गच्छति)   அம்பாளை  தக்ஷிண மார்க்க, வாம மார்க்க பக்தர்கள்  கூட வித்தியாசமின்றி  வழிபடுகிறார்கள்.


*913*  सर्वापद्-विनिवारिणी   ஸர்வாபத் விநிவாரிணீ
போறாத  காலம்,  கஷ்ட தசை,  துன்பம், துரதிர்ஷ்டம் என்கிறோமே அதெல்லாம் போக்குபவள் அம்பாள்.  சரியான  இடதோ,   வலதோ  (தக்ஷிண/வாம) மார்கத்தில்,  ஏதோ ஒரு  பாதையில் செல்லாததால்   வருவது மேலே சொன்ன இடையூறுகள்.   பிருஹதாரண்யக உபநிஷத்   (VI.ii.16),  ''இந்த  இரு பாதைகளை அறியாதோர், அதன் வழியில் செல்லாதவர்கள், புழு, பூச்சி , வண்டாக பிறக்கிறார்கள்.''என்கிறது.   அவளை தியானித்தால்  தான் மோக்ஷம் கிட்டும்.

*914*  स्वस्था   ஸ்வஸ்தா 
இயல்பு நிலையை இருப்பது தான் ஸ்வஸ்தமாக  இருப்பது.  உடம்பு ஸ்வஸ்தமாய்விட்டதா?  என்றால் நார்மலுக்கு வந்துட்டதா என்று அர்த்தம்?  இதை  ''சொஸ்தமாயிட்டுதா?'' என்கிறோம்.

*915*  स्वभाव-मधुरा   ஸ்வபாவமதுரா    
அம்பாள் மதுர பாஷிணி.  இனிமையானவள். காந்த சக்தி கொண்டவள்.   அழகு பிம்பம்.  
எப்போதும்  குதூகலம், உத்ஸாகத்தோடு  இருப்பவள்.  அவள் பக்தர்களைக் கவர இதற்கு மேல் என்ன வேண்டும்.  இந்த  நாமத்தை   ஸ்வ+பா+அவம+துரா  என்று பிரிக்கலாம்.  ஸ்வ :  அவள்.  பா:  ஒளி  அவம:  ஞானிகளில் முதன்மையானவள்,   துரா :   நுகத்தடி.   அம்பாளின்  ஞான ஒளி  வழிநடத்துகிறது.

*916*   धीरा   தீரா.
அம்பாள்  தைரியம் மிக்கவள்.    படைத்தலைவி.  அவளது பலம்  அவளது ஞானம், ஆத்மபலம்.  எல்லாம் ஒன்றேயானவள்.   ஆகவே  அத்வைதம்  அறிய  அவளே  காரண non-duality is attained through Her.

*917*  धीर-समर्चिता 
 தீரஸமர்ச்சிதா    
கற்றோரால், பண்டிதர்களால்,  போற்றப்படுபவள்  அம்பாள்.   ஆத்ம ஞானம் பெற்றவர்கள் தான் அவளது பெருமையைப் பாடி  போற்றி வணங்குபவர்கள்.  

*918*  चैतन्यार्घ्य-समाराध्या  சைதந்யார்க்ய ஸமாராத்யா.
மிக உயர்ந்த  ஆத்ம  ஞான நிலையை  சுத்த சைதன்யம் என்போம்.  எந்த  காட்டப்படும் இல்லாத சுதந்திரமானது.  எல்லா ஜீவன்களும் அடைய வேண்டிய  கடைசி நிலை.  அர்க்கியம்  என்பது  அதிதிகள், விருந்தினர்களுக்கு, வரவேற்று அளிக்கும்  வரவேற்பு ஜலம்.   ஒருவருக்கு ஞானம் புகட்டுவதே  சிறந்த அர்க்யம்  என்கிறது   பாவனோபநிஷத்.(10).    புவனேஸ்வரி மந்திரம்  சைதன்ய மந்திரம் என்று பெயர் பெற்றது.  பத்தாயிரம் தடவை உச்சரித்தால் பாபங்கள்  தொலையும் என்பார்கள்.  ரெண்டு வித புவனேஸ்வரி மந்த்ரங்கள் இருக்கிறது.  ஒன்று ஒத்தை பீஜ மந்திரம்   ஹ்ரீம் ह्रीं . மற்றது  மூன்று பீஜ மந்த்ரம்   ஐம் ஹ்ரீம்  ஸ்ரீம் ..ऐं ह्रीं श्रीं).

*919*  चैतन्य-कुसुम-प्रिया    சைதந்ய குஸுமப்ரியா
அம்பாள்   குஸுமாத்ரி பூவை  விரும்புபவள் . இது ஒரு வகை தேனை வழங்கும்  மலர். இன்னொரு உள்ளர்த்தம்  எட்டு புஷ்பங்கள் சேர்க்கை என வர்ணிக்கப்படுகிறது. இதெல்லாம் அந்த எட்டு புஷ்பங்கள்?  

ahimsā prathamam puṣpam puṣpam indriya-nigraha:
sarva-bhūta-dayā puṣpam kṣamā puṣpam viseśata: |
jnānam puṣpam tapa: puṣpam dhyānam puṣpam tathaiva ca
satyam aśṭavidham puṣpam viṣṇo: prītikaram bhavet ||

अहिम्सा प्रथमम् पुष्पम् पुष्पम् इन्द्रिय-निग्रह:
सर्व-भूत-दया पुष्पम् क्षमा पुष्पम् विसेशत: ।
ज्नानम् पुष्पम् तप: पुष्पम् ध्यानम् पुष्पम् तथैव च
सत्यम् अश्टविधम् पुष्पम् विष्णो: प्रीतिकरम् भवेत् ॥

அஹிம்சை,  இந்திரிய வெற்றி, தயை, காருண்யம்,  அறிவு, தவம், சத்யம், த்யானம்  இவற்றை ஒன்று சேர்த்தால் அது தான்  சைதன்யம்.  அதை குஸும புஷ்பம் என்கிறது இந்த நாமம். அம்பாளுக்கு செடியில் பூத்த  புஷ்பங்கள் தேவையா?  மனதில்  பூத்தவை அல்லவோ  பிரியம்.

*920*  सदोदिता ஸதோதிதா
எப்போதும்  ஒளிவிடும்  மேனியள் .  ஞானிகள்  மனதைப் போல். என்கிறார் ஹயக்ரீவர்..  சாந்தோக்ய உபநிஷத்  ஒரு விஷயம் சொல்கிறது:  ப்ரம்மலோகத்தில்  சூரியன்  உதயமாவதும் இல்லை,  அஸ்தமிப்பதும் இல்லை,   சூரியன் இல்லை இரு அர்த்தமில்லை, சூரியன்  ஒரே மாதிரியான  ஒளியோடு பிரகாசிப்பவன் என்கிறது (III.xi.2). 

*921*  सदा-तुष्टा  ஸதாதுஷ்டா 
தமிழில் ஒரு   சங்கடம்.   குறில் நெடில்  ரெண்டுக்கும் ஒரே    உயிர் மெய்யெழுத்துக்கள். 
 து thu   dhu  இரண்டுக்குமே ஒரே எழுத்து,  துஷ்டா இப்படி ரெண்டு விதமான அர்த்தங்களை கொடுத்துவிடும். து thushta  என்பது திருப்தி, சந்தோஷம் எனும் அர்த்தத்தில்  மேலே சொல்லப்பட்டிருக்கிறது. து   dhushta  என்றால்  கெட்டவன், பொல்லாதவன், கொடியவன் என்று பொருள் தரும்.   பக்தர்களின் பக்தியில் அம்பாள் த்ரிப்தியடைந்து சந்தோஷமாக உள்ளாள். என்று இந்த நாமம் சொல்கிறது. 

*922* तरुणादित्य-पाटला  தருணாதித்ய பாடலா
பாடலா  என்றால்  அதிக சிவப்பில்லாத,  இளம் சிவப்பு,  ஆரஞ்ஜ்  நிற   உதய சூரியன் வர்ணத்தில் செந்நிறத்திலும் காண்பவள்  அம்பாள்.  ப்ரஹதாரண்யக உபநிஷத்   மஞ்சள்  நீரில் தோய்த்த  வஸ்திரம் போன்று,  பழுப்பு நிற  செம்மறியாட்டின்  கம்பளி  சருமம் போல், வெண் தாமரை போல்,  கண்ணைப்பறிக்கும் மின்னல் போல், தங்கநிறம்  என்றெல்லாம்  அவள் நிறம் மாறும் என வர்ணிக்கிறது. 

சக்தி பீடம்:     ஸ்ரீ  வஜ்ரேஸ்வரி  யோகினி தேவி  ஆலயம்.    வஜ்ரேஸ்வரி.  மகாராஷ்டிரா 

இந்த ஆலயம்  மும்பையிலிருந்து  75 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது.  இந்த ஊரின் முந்தைய  பெயர்  வட்வாலி, பின்னர்  அம்பாளின் நாமத்தை சூடிக்கொண்டிருக்கிறது.   தானே  ஜில்லாவில்  பிவாண்டி என்ற ஒரு நகரத்தில்  ஓடும்   தன்ஸா  நதிக்கரையில் உள்ளது இந்த ஆலயம்.  மேற்க்கத்திய  ரயில் மார்கத்தில்  விரார்  என்ற  ரயில் நிலயத்திலிருந்து 27 கி.மீ. தூரம் இந்த ஊர். 
ஆலயம் அமைந்துள்ள  குட்டி  மலைக்கு பெயர்   மந்தகிரி.  எந்த காலத்திலேயோ  ஒரு எரிமலையினால் பொங்கி எழுந்த மலை இது என்பார்கள்.  அம்பாள் சம்பந்தப்பட்ட எதுவுமே  உஷ்ணம், தீ, அக்னி, எரிமலை  தானே.  சுற்றிலும் மலைகள்.  

வட்வாலி  ஊருக்கு  ராமரும்  பரசுராமரும்  வந்திருக்கிறார்கள். வட்வாலியில்   பரசுராமர்  ஒரு யாகம் வளர்த்திருக்கிறார்.  அந்த  பெரிய  யாகத்தீ தான் எரிமலையின் சாம்பலாக இன்னும் அந்த  பிரதேசத்தில் இருக்கிறது.   வஜ்ரேஸ்வரி அம்பாளை  வஜ்ராபாய்,  வஜ்ர யோகினி என்றும்  வணங்குகிறார்கள்.   ஆதி மாயா,  பார்வதி அவதாரம்  என்பார்கள்.  இந்திரனின் வஜ்ராயுதம்  இடியும் மின்னலும் சேர்ந்தது. அதுபோல் சக்தி வாய்ந்து  ஒளி வீசுபவள் அம்பாள்  வஜ்ரேஸ்வரி.

கலிகாலன்  என்ற  ஒரு ராக்ஷஸன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  இருந்து  தேவர்களை துன்புறுத்தி,   எல்லோரும்  அவனை  அழிக்க  வசிஷ்டர் தலைமையில் ஒரு த்ரி சண்டிஹோமம் நடத்தினார்கள்.  இந்திரனுக்கு இந்த யாகத்தில்  ஆஹுதி கொடுக்கவில்லை.  அவனுக்கு கோபம். எவராலும் தடுக்க முடியாத, எதிர்க்க முடியாத  வஜ்ராயுதத்தை  அந்த ரிஷிகள் மேல்  வீசினான்.  யாகத்தை அழிக்க அது நெருங்கியபோது  ரிஷிகள்  அம்பாளை வேண்டினார்கள்.  அம்பாள் அந்த வஜ்ராயுதத்தை வாயைத் திறந்து விழுங்கிவிட்டாள் . இந்திரன்  பணிந்தான்.  அசுரனை அழித்தாள் . பரசுராமர்  ''தாயே  நீ இங்கேயே  தங்கி இருக்கவேண்டும்  என்று வேண்டிக்கொண்டார்.  வஜ்ரேஸ்வரி அதனால் வட்வாலியில் இன்றும்  இருக்கிறாள்.

  மச்சேந்திரநாதர் இங்கு ஒரு மாச காலம் தங்கி  வஜ்ரபகவதியை  வெந்நீர்  ஊற்றில் அபிஷேகம் செய்து,   தியானம் செய்து பூஜித்தார். இந்த ஊருக்கு நாத பூமி என்றும் ஒரு பெயர்.   இங்கே  21  வெந்நீர் ஊற்றுக்கள் உள்ளன. 

 ஆரம்பகாலத்தில் இந்த ஆலயம்  குஞ்ஜ்  என்ற ஊரில் இப்போது இருக்கும் இடத்தில்  இருந்து 8 கிமீ தூரத்தில் இருந்தது. வழக்கம்போல் இந்த ஆலயத்தையும் போர்ச்சுகீசியர்கள் அழித்துவிட்டார்கள்.  இப்போது இருப்பது அப்புறம் உருவான  ஆலயம். 1739ல்   முதலாவது பேஷ்வா பாஜி ராவ்  தம்பி  சீமாஜி அப்பா, இந்தப்பக்கமாக  வந்து  வஸை  எனும்  இடத்தில் போர்ச்சுகீசியர்களின்   பாஸீன் கோட்டையை பிடிக்க வந்தான்.  மூணு வருஷம் சண்டை. கோட்டை பிடிபடவில்லை.  அம்மா தாயே  வஜ்ரேஸ்வரி, உதவி செய்யம்மா. ஜெயித்தால் இங்கே உனக்கு ஒரு கோயில் கட்டுகிறேன்  என்று  சீமாஜி வேண்டினான்.  வஜ்ரேஸ்வரி அவன் கனவில் தோன்றி அவன் எப்படி  தாக்குதல் செய்தல் கோட்டை வீழும், பிடிபடும் என்று சொல்லிக்கொடுத்தபடியே  செய்தான்.  16.5.1739 அன்று கோட்டை தகர்ந்தது.  
போர்ச்சுசியர்கள்   தோற்று ஓடினார்கள்.    சீமாஜி நன்றியோடு,  அவனது   சுபேதார்  கேஷவ் பட்கேயிடம் இங்கே வஜ்ரேஸ்வரிக்கு  கோவில் கட்ட  ஆணையிட்டான்.  
ஆலய  பிரதான வாசலில் இருப்பது போல்   நகரா  எனும்  பெரிய தோல்  வாத்யம் ஒலிக்கும்  அறை. சுற்றிலும் கோட்டை சுவர்கள்  போல் உயர்த்த மதில்.   52  படிகள்.   தங்க ஆமை.  ஒரு படி   கூர்ம  அவதார  அம்சம். வஜ்ரேஸ்வரி  குங்குமப்பூ  வர்ணம்.  வாள் , கதை, திரிசூலம்  ஏந்தியவள். ரேணுகா தேவி.  சப்த ஸ்ருங்கி ,மஹாலக்ஷ்மி, புலி வாகனம். காளிகாம்பாள்,  பரசுராமர், கணேசர், பைரவர், ஹனுமான்,  சிம்ம வாஹனம்  எல்லோரையும் தரிசிக்கலாம்.   நவராத்ரி வைபவம் ரொம்ப விசேஷம்.
ஒரு அரசமரம்  பிள்ளையார் போல் உருவில் இருப்பது  அதிசயம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...