கொஞ்சம் யோசிக்க.... நங்கநல்லூர் J K SIVAN
அஸ்திவாரம் பலமாக கட்டாவிட்டால், பெரிதோ, சிறிதோ, அதன் மீது கட்டப்படும் கட்டிடம் சிதறி விழும். எல்லோருக்கும் தெரிந்தது.
இந்த உண்மை முழுக்க முழுக்க நமது வாழ்க்கைக்கும் பொருந்தும்.
''இளமையில் கல்'' என்று சொன்னது பால் குடிக்கும்போதே கிட் ஸ்கூல்ஸ் kid schools நர்சரி LKG லோயர் கிண்டர்கார்ட்டன் எனும் குழந்தை பள்ளிக்கூடங்களில் நிறையை காசை கொட்டி குழந்தைகளை அழ அழ பிடிவாதமாகக் கொண்டு போய் தள்ளுவது அல்ல. நல்ல அப்யாசங்களை, ஒழுக்கத்தை பெற்றோர் சொல்லிக் கொடுப்பது தான். நாங்கள் ஆறுவயதில் தான் முதலில் பள்ளிக்கூடத்தை பார்த்தவர்கள். இப்போதுள்ள முறை குழந்தைகளை பெற்றோரிடமிலிருந்து விலக்குகிறது. இந்த வயதில் உண்டாகும் நெருக்கம் தான் கடைசிவரையில் பாசத்தை வளர்த்து பெற்றோருக்கு மகிழ்ச்சியளிக்கும். செவிலித்தாயிடம் பணியாளர்களிடம் வளரும் குழந்தைக்கு பெற்றோரிடம் மன நிறைவு இல்லாமல் செய்துவிட பெற்றோரே காரணமாகிறார்களா? தாய் தந்தை எங்கோ வேலைக்கு போகும் குடும்பங்களில் தாத்தா பாட்டி, அல்லது மற்ற ஏதோ ஒரு உறவினர் இருக்கும் கூட்டுக குடும்பம் நிலமையை சமாளிக்க வாய்ப்புண்டு. இப்போது பெற்றோரில்லாத, வேண்டாத, தம்பதிகள் வேலைக்குப்போய் குழந்தைகளை மற்றவர் பொறுப்பில் விடுவது வழக்கமாகி விட்டது.
சிவாஜி, காந்திஜி, விவேகானந்தர் போன்றோர் அம்மாக்கள் படிக்காதவர்கள் என்றாலும் பண்பாட்டை, சத்தியத்தை, வீரத்தை, தன்னம்பிக்கையை தெய்வ நம்பிக்கையை சொல்லிக் கொடுக்க பள்ளிக்கூடம் தேவை இல்லை என்று நிரூபித்தவர்கள்.
வீடு இவ்வாறு நன்மக்களை கொண்டு திகழ்ந்தால் சமூகம் நல்லவர்கள் நிரம்பியதாக இருக்கும். கிராமம், நகரம், நாடு பூரா இப்படிப்பட்டவர்கள் எங்கும் காணப்பட்டால் எதற்கு போலீஸ், கோர்ட், சிறை தண்டனை, தூக்கு என்று?
மனசாட்சியை அறிந்து, அதன் அறிவுரை வழி செல்பவன் பிறருக்கு தீங்கோ குற்றமோ, புரிய மாட்டான். செய்தாலும் தவறை உணர்ந்து திருந்துவான். நாடு சுபிக்ஷமாக இருக்கும்.
வளரும் குழந்தைகளுக்கு முதலில் பெற்றோர்கள் தான் வழிகாட்டியாக திகழ வேண்டும். நடு நிலையோடு பாரபட்சமின்றி தவறுகளைச் சுட்டிக்காட்டி அன்போடும் ஆதரவோடும் குடும்ப ஒற்றுமைக்குத் தங்கள் தகுதியை உரிமையோடு உபயோகிக்க வேண்டும்..
எளிமை, ஆடம்பரம், இன்றி மற்றவரையும் தம்மைப்போலவே மதிக்கும் ஒரு சிறந்த தலைமுறை அப்போது உருவாகும். இது நம் கடமை.
இளம் ரத்தங்கள் அவசரத்தில் தவறிழைக்க வாய்ப்பு அதிகம். அனுபவம் அதைத் தடுத்து நிறுத்த தக்க நேரத்தில், காலத்தில் செயல்பட வேண்டும்.
குடும்பம் என்பது ஆயிரம் காலப்பயிர் என்பார்கள். அதை டாலரைக்கொண்டு பண மதிப்பீடு செய்யாமல் குணத்தைக் கொண்டு எடைபோட வேண்டும்.
நமது ஹிந்து சமுதாயத்தில் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக கல்யாணங்கள் பெற்றோரால் பல விஷயங்களை சீர் தூக்கிப் பார்த்து நிச்சயிக்கப்பட்டு வந்த ஒரு விஷயம். இதில் பெற்றோர்கள் ரொம்ப பொறுப்போடு குழதைகளின் எதிர்காலத்தை , வாழ்க்கை நலத்தை மனதில் கொண்டு, அவர்கள் சந்தோஷமாக இருக்க என்ன செய்யவேண்டும் என்று புரிந்து நிச்சயித்தார்கள். இதற்காக பிரயாசைப்பட்டு, நல்ல இடம், குடும்ப விருத்தாந்தம், பொருத்தங்கள் எல்லாம் பார்த்தார்கள். தேவையான விஷயங்கள் சேகரித்தார்கள். பிள்ளைகளும் பெண்களும் தாய் தந்தை தமது நலனை கருத்தில் கொண்டு இதில் ஈடுபடுவதை உணர்ந்தார்கள்.
தரகர்கள் நடுவே இருப்பது தெரிந்து அவர்களில் சுயநலமில்லாதவர்களை அடையாளம் கண்டு கொண்டார்கள்.
பிள்ளையைப் பெற்றவர்கள் சிலர் அல்ல பலர் கண்டிஷன்கள் போட்ட காலம் உண்டு. அது மாறி விட்டது. பெண்ணைப் பெற்றவர்கள் இப்போது தலை தூக்கி விட்டார்கள். அதுவும் மாறிக்கொண்டே வருகிறது. பெண்களே இப்போது தமது எதிர்பார்ப்பு என்ன என்று வரையறுத்து சொல்லி விடுகிறார்கள். பல திருமணங்கள் பணத்தால், கண்டிஷன்களால் தடுமாறி, ஒருவாறு நடந்து முடிந்தாலும் வெகு சீக்கிரம் முறிய காரணமாகி விட்டது ரொம்ப வருந்த தக்கது. கல்யாணம் ஆயிரங்கால பயிராக தோன்றவில்லை. அறுபது நாளில் கருகும் செடியாக போவது சமூகத்துக்கு தொய்வு. பாதை மாறி செல்லும் ஹிந்துக்கள் அதிகமாகி விட்டார்கள். பழம் பெருமை, நாகரிகம், கலாச்சாரம் பக்தி எல்லாம் காற்றில் பறக்க விடப்படுகிறது. சுயநலம் குறுகிய மனப்பான்மை பலம் கொண்டு விட்டது.
கல்யாணம் பண்ணி வைக்கும் புரோகிகள் கல்யாணம் ஆகாத ப்ரம்மச்சாரிகளாகி விட்டார்கள். நமது சமூகத்தின் ஒரு பிரிவே நசித்துப் போகும் அளவுக்கு க்ஷீண மாகிக்கொண்டு வருகிறது.
இதை மீட்பது பெற்றோர்களின் கடமை.. தமது பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் தக்க நேரத்தில் சிறுவயது முதற்கொண்டே அவர்களுக்கு உணவோடு சேர்த்து நமது பாரம்பரிய கோட்பாடுகள், நம்பிக்கைகள், பண்புகள் ஆகியவற்றையும் பக்தியோடு ஊட்டவேண்டும்.
மேனாட்டு கல்வி பணம் சம்பாதிக்க மட்டுமே என்று ஆகிவிட்டது. கல்வியினால் ஒருவனது தரம் உயரவேண்டும். தரம் உயர்ந்தால் குணம் உயரும். குணம் உயர்ந்தால் பண்பு உயரும். பண்பு உயர்ந்தால் சமுதாயம் மேம்படும். வரதக்ஷணை அநேகமாக முற்றிலும் ஒழியவில்லை. பல வடிவங்களில் இன்னும் ஆங்காங்கே தலை தூக்கினாலும் அதன் வீர்யம் முற்றிலும் அழியவில்லையோ? மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் முதலில் தனிமையில் சந்தித்து பேசி திருமணத்தை முடிவு செய்யும்போது என்ன விஷயங்கள் அஜெண்டாவாக இருக்கிறது? உன் உரிமை, என் உரிமை, உன் பெற்றோர், என் பெற்றோர், உன் கடமை என்கடமை இரண்டுமே சமமல்ல. நான் அதிக உரிமை உள்ளவன் /உள்ளவள் என்றா? அது மட்டுமா வாழ்க்கை? எதிர்காலம்? குழந்தைகள் கதி?
எல்லாம் வல்ல கிருஷ்ணன் கலிகாலத்தில் என்னென்ன நடக்கவேண்டும் என்று சங்கல்பம் செய்துவிட்டானோ அது தான் நடக்கும்.

No comments:
Post a Comment