Sunday, December 19, 2021

THIRUMOOLAR

 திருமூலர்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 


அவன்  சிவன் தான்.  

ஒன்று  அவன்தானே இரண்டு அவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் *ஏழு உம்பர்ச்
சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே. 1

திருவிளையாடல்  சினிமாவில்  KB   சுந்தராம்பாள்  ஒளவையாராக  ''ஓன்றானவன் , இரண்டாமவன்  மூன்றானவன்  என்று பாடுவார்..  நாம் ரசித்திருக்கிறோம்.  இதை  பல ஆயிரம் வருஷங்கள் முன்பே  பாடியவர்  திருமூலர் சித்தர்.

சிவன் ஒருவனே  கடவுள்.  அவன்  சக்தியோடு இனைந்து  இரண்டாக  அருள் பாலிக்கிறான்.  அவனே  படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று தொழில்களை புரிந்தவர்  பிரம்ம, விஷ்ணு,  ருத்திரன்  என  மும்மூர்த்திகள்  ஆகிறான்.   நான்கு வேதங்களாகி உண்மையைப்  புகட்டுகிறான்.  ஐந்து இந்திரியங்களையும் அடக்கி   ஆண்டு   ஆற்றல் அளிக்கிறான்.   ஆறு ஆதாரங்களிலும் விரிந்து, எங்கும் வியாபிக்கிறான்.   மேல் ஏழாவது   ஆதாரமாகிய  உச்சந்தலை   சகஸ்ரதளத்தின் மேல் பொருந்தி, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுப் பொருள் களையும் உணர்ந்து அவற்றில் கலந்து அஷ்ட மூ ர்த்தமாய் விளங்குகின்றான்.
 
போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை
மேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாங்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே. 2

எந்நேரமும்  நான்  இறைவனைப் புகழ்ந்து பாடி  இதை  உரைக்கின்றேன். இனிமையாக  என்   உயிரிலே பொருந்தியிருக்கும் தூயவனாகவும் நான்கு திசைகளுக்கும் பராசக்திக்கும் தலைவனாகவும், மேல் சொல்லப்பட்ட திசைகளுள் தெற்குத் திக்கிற்குரிய யமனை உதைத்தவனாகவும்  காணும்  அந்த பகவானை, பரமேஸ்வரனை நான்  புகழ்ந்து  பாடுகின்றேன்.

ஒக்க நின்றானை உலப்பு இலி தேவர்கள்
நக்கன் என்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கம் நின்றார் அறியாத பரமனைப்
புக்கு நின்று உன்னியான் போற்றி செய்வேனே. 3

பரமா,  உன்னை நான் அணுகி இருந்து அநுதினமும் வழிபாடு செய்வேன்.  நிழலாக  உன்னுடனேயே  நிற்பேன்.  ன்; அழிவற்ற தேவர்கள்   பற்றற்றவன் என  போற்றும்  தலைவா,  உன்   பக்கத்தில் உள்ள திருமால் முதலிய தேவர்கள் அறிய முடியாத உயர்ந்தவனே, இத்தகைய   உன்னை  நான்   முற் பிறப்பில் செய்த  பயனாக   அணுகி நின்று நாள் தோறும் வழிபடுவேன்.

அகல் இடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப்
புகல் இடத்து *என்றனைப் போத விட்டானைப்
பகல் இடத்தும் இரவும் பணிந்து ஏத்தி
இகல் இடத்தே இருள் நீங்கி நின்றேனே. 4

பகவானே, உன்னை  வணங்கி அறியாமை நீங்கப்  பெற்றேன்.  உன்னை  நாடும்  பக்தர்களுக்கு   மெய்ப்பொருள் ஆனவனே ,   வானுலகுக்கு வித்துப் போன்றவனே.  அடைக்கலமான இடத்திலே என்னைச் செல்ல விட்டவனே . இத்தகு இறைவனைப் பகலிலும் இரவிலும் வணங்கிப் பரவி மாறுபாடுடைய இவ்வுலகில் நான் அறியாமை நீங்கி நின்றேன்.

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்த அன்று பொன் ஒளி மின்னும்
தவனச் சடை முடித் தாமரை யானே. 5

சிவபெருமானைப் போன்ற தெய்வம்  வேறு எவராவது உண்டா என்று எங்கெல்லாமோ தேடினேன். ஹுஹும்  எங்கும் காணேன்.  உள்ளும்  இல்லை, புறத்திலும் இல்லை . பகவான்  பிரம்மாண்டத்தை கடந்து  நின்ற போது  தகதகவென்று  பொன் போல  பிரகாசிப்பான். சிவன் செந்நிறம் பொருந்திய ஊர்த்துவ சகஸ்ரதளத் தாமரையில் விளங்குபவனா வான்.

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. 6

அப்பா   பரமேஸ்வரா,  உன்னை விட்டால்  வேறு எவர் மூலமாகவும்  எமக்கு  முத்தி பெற வழியில்லை! சிவனைக் காட்டிலும் மேம்பட்ட தேவர்கள்   எவருமே , ஏன்  ஒருவருமே   இல்லை.   சிவனல்லாது செய்கின்ற அருமையான தவமும் எதுவும்   இல்லை. அவனை அல்லாது பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவராலும் பெறுவது ஒன்றும் இல்லை. அவனையல்லாது வீடு பேறு அடைவதற்குரிய வழியை அறியேன்.

திருமூலர்  தமிழ்  நன்றாக  புரிகிறது.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...