Saturday, December 18, 2021

THIRUMOOLAR

 திருமூலர்  -    நங்கநல்லூர்     J K  SIVAN  

திருமந்திரம்  -10ம் திருமுறை.

சிவனை வழிபடும் சைவர்கள் போற்றி புகழ்வது  பன்னிரு திருமுறைகள்.  இவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும்.  இராஜராஜ சோழன்  காலத்தில்  சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.

இந்த  பன்னிரண்டு திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருபவை.  சிவாலயங்களில்  சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள்  பாடுவது வழக்கம்.  இந்த  12  திருமுறைகள் என்னென்ன?

1ம்  / 2ம் /3ம்   திருமுறை   -   தேவாரம்திருஞானசம்பந்தர்
7ம்  திருமுறை      -    சுந்தரர்
8ம்  திருமுறை      -     திருவாசகம்மாணிக்கவாசகர், திருக்கோவையார் 
9ம்  திருமுறை  -  திருவிசைப்பாதிருமாளிகைத் தேவர் சேந்தனார்,கருவூர்த் தேவர்,பூந்துருத்தி நம்பிகாடநம்பி
கண்டராதித்தர் ,வேணாட்டடிகள்,திருவாலியமுதனார்,புருடோத்தம நம்பி,சேதிராயர்,திருப்பல்லாண்டுசேந்தனார்
10ம்   திருமுறை -  திருமந்திரம்திருமூலர்
11ம்  திருமுறை - திருமுகப் பாசுரம்திரு ஆலவாய் உடையார், திருவாலங்காட்டுத் திருப்பதிகம், காரைக்கால் அம்மையார், திருவிரட்டை மணிமாலை, அற்புதத்திருவந்தாதி, சேத்திர வெண்பா, ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி சேரமான் பெருமான் நாயனார், திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா, கயிலைபாதி காளத்திபாதி,  அந்தாதி, நக்கீர தேவ நாயனார், திருஈங்கோய்மலை எழுபது
திருவலஞ்சுழி மும்மணிக்கோவை , பெருந்தேவபாணி, கோபப் பிரசாதம், கார் எட்டு போற்றித்திருக்கலிவெண்பா,
திருமுருகாற்றுப்படை, திருக்கண்ணப்ப தேவர்,  திருமறம் கல்லாடதேவ நாயனார், மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை, கபிலதேவ நாயனார், சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை, சிவபெருமான் திருஅந்தாதி
சிவபெருமான் திருவந்தாதி, ரணதேவ நாயனார், சிவபெருமான் மும்மணிக்கோவை, இளம்பெருமான் அடிகள், 
மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை, அதிராவடிகள், கோயில் நான்மணிமாலை, பட்டினத்தார், திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபது, திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை நம்பியா,ண்டார் நம்பி 
கோயில் திருப்பண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம், ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை, திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை
12ம்  திருமுறை -  பெரியபுராணம்சேக்கிழார் பெருமான்

1, 2, 3  ம்    திருமுறைகளில்    மொத்தம்  திருஞானசம்பந்தர்  தேவார பாடல்கள் 1,469+1331+1358
4, 5, 6 ம்   திருமுறைகளில்  மொத்தம்  :  திருநாவுக்கரசர்    1,070+1015 +981   தேவாரம்  பாடல்கள் 7
7ம்   திருமுறைசுந்தரர்   1,026  தேவாரம்  பாடல்கள்: 
8ம் -  திருமுறை   மாணிக்கவாசகர்  1,058
9ம்  திருமுறை    9 ஆசிரியர்கள்301
10ம் திருமுறைதிருமூலர்  3,000  திருமந்திரங்கள் 
11ம்  திருமுறை   12 ஆசிரியர்கள் 1,385  பாடல்கள் 
12ம்  திருமுறை    சேக்கிழார் பெருமான்4,286
12 திருமுறைகளிலும்  சேர்த்து  மொத்தம்   18,280  பாடல்கள்.   யாராவது நிச்சயம் இத்தனை பாடல்களையும்  படித்தோ பாடியோ இருப்பார்கள்.  நம்மால்  முடியவில்லை என்றால்  எவராலும் முடியாது என்ற  எண்ணம் தப்பு.  சில பேர்  அத்தனையும் மனப்பாடம் பண்ணி பாடியும் இருப்பார்கள்.  எத்தனை நூற்றாண்டுகள் ஓடிவிட்டன. அதிசய மனிதர்களுக்கு தமிழினத்தில்  பஞ்சமே இல்லை.

திருமூலரின்  3000  திருமந்திரங்களும்  10ம் திருமுறையாகும்.    அவற்றில் தான் சில வற்றை  படிக்கிறோம். 

12 திருமுறைகளையும்  தோத்திரம், சாத்திரம், பிரபந்தம், புராணம் என நான்கு வகையாக பிரித்து அனுபவிப்பது    வழக்கம்.  
1- 9  திருமுறைகள்:    ஸ்தோத்ர  வகை. 
10ம் திருமுறை :   சாஸ்த்ர  வகை  திருமந்திர மாலை.
11ம் திருமுறை  :   பிரபந்தம் வகை.
12 ம்  திருமுறை:   புராணம் வகை: 

திருமூலரின்  திருமந்திரம் 9   தந்திரங்களால், அதாவது  9  ஆகமங்களின் சாரமாகும். 
 
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

திருமூலர்  எழுதிய  கடவுள் துணை பாடல் இது.    ஐந்து கைகளையும் யானை முகத்தையும் இளம்பிறை போன்ற தந்தத்தை உடையவனும் சிவனது குமாரனும் ஞானச் சிகரமாக விளங்குபவனுமாகிய விநாயகக் கடவுளை அறிவினில் வைத்து அவன் திருவடிகளைத் துதிக்கின்றேன்  என்று திருமந்திரங்களை ஆரம்பிக்கிறார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...