Sunday, December 26, 2021

OUR BODY

 

நம்ம உடம்பு:  5         நங்கநல்லூர்  J K SIVAN

ஒரு விஷயம்  நன்றாக  புரிந்து கொள்ளவேண்டும்.   உடம்பை முக்யமில்லாததாக  கருதவேண்டும் என்று  எந்த  மஹானும், யோகியும் சொன்னதில்லை.  அது தான்  நீ,  அது தான் ஆத்மா, அது தான் என்றும் சாஸ்வதம் என்று மட்டும் தப்பாக  எண்ணாதே என்று தான் சொல்கிறார்கள். மற்றும், உடமை பற்றி கவலைப்படாதே  பராமரிக்காதே என்று சொல்லவே இல்லை. உடம்புக்கு அதிக  முக்யத்வம் கொடுக்காதே, அதே நினைவாக இருக்காதே என்று தான் சொல்கிறார்கள்.   ஆத்மாவுக்கு  உடம்பு தான்  கோவில்.  உறைவிடம்.  ஆகவே  உடம்பு ஒரு ஒன்பது வாசல் ஆலயம். பகவான்  உறையும் இடம் என்பதால்  உடம்பை ஜாக்கிரதையாக பரிசுத்தமானதாக வைத்துக்கொள்வது அவசியமாகிறது.  இது ஆன்மிகம். இனி நம்ம உடம்பின் அதிசயங்கள் வழக்கம்போல.


நாம்  என்ன  சிந்தித்தாலும்  அதை  வெளிப்படுத்த  வார்த்தை தேவை அல்லவா?  வார்த்தையை பேச  வாய்  உடம்பில் தான் இருக்கிறது.    மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500  வார்த்தைகள்.  அடேயப்பா இவ்வளவு  வேகமாக  சிந்தித்தாலும்  அதை பேச வேண்டுமானால்  அதிக பக்ஷம்   ஒரு நிமிஷத்துக்கு  100 வார்த்தைகள் தான் முடியும்.  இதை  ஆராய்ந்து  யாரோ  கணக்கு போட்டு சொல்லி இருக்கிறார்கள். 

நம்ம உடம்பில் எங்கே  வலி  எடுத்தாலும்  ஆ  ஊ  ஓ  என்று கத்துகிறோம், அழுகிறோம்.   இந்த  வலியை நமக்கு எடுத்து சொல்வது யார் தெரியுமா? நம்ம உடம்பின்   வலீயை நாம் அறிய செய்வது  ஸ்ரீமான்  மூளை தான்..  மூளையின் வலி நமக்கு தெரிவதில்லை.  

ஆணும்  பெண்ணும்  எல்லாவற்றிலும் சரி சமம்  என்று  நாம் வேண்டுமானால்  வாய் வலிக்க பேசலாம். இயற்கை நிறைய  வித்தியாசங்களை வைத்திருக்கிறது.   வியர்த்து  கொ
ட்டுவதில் கூட  வித்யாசம் இருக்கிறது. ஆண்களுக்கு  40 சதவீ தம் பெண்களை விட  கூடுதலாக வியர்க்கிறதாம்.  ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தது. 

நம்ம உடம்பில்  ரத்தம் பாயாத  இடம்  ஒன்றே ஒன்று  இருக்கிறது. அது எது தெரியுமா?   பாப்பா  என்று சொல்கிறோமே  கண்ணில் இருக்கும் கருவிழி மட்டும் தான் அது. 

யாரோ  சில  மஹாநுபாவர்கள்  கண்டு பிடித்து சொல்கிறது  ஆச்சர்யமாக இருக்கிறது. ''ஸார்,  எனக்கு சாப்பாடு எப்போதுமே  கொஞ்சூண்டு தான், நான் எப்போவுமே  சாப்பாட்டு ராமன் இல்லை.'' என்று பெருமை பட்டுக் கொள்ளவேண்டாம்.''  நாம் ஒவ்வொருவருமே  நமது  நம் வாழ்நாளில்  சராசரியாக  50 டன் உணவுப் பொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும் உட்கொள்கிறோம்.  எத்தனை லாரி  என்று நீங்களே  கனக்குப் போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்!

''இதோ  இந்த இடத்தில் இந்த  பத்திரத்தில்  உங்க கை எழுத்து போடுங்கோ ''  என்று  ஒரு பச்சை கலர் டாகுமெண்ட்  நீட்டினாள் நாம் முதலில் உள்ளங்கையை துடைத்துக் கொள்கிறோம். ஏன்?   நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப் பிகள் இருக்கின்றன. என் நண்பன் ஒருவனுக்கு  கையை அலம்பினால் போல் அடிக்கடி ஈரமாக  உள்ளங்கை வியர்த்திருக்கும். அடிக்கடி கைக்குட்டையால் துடைத்துக் கொள்வான்.

மண்டை  கனம்  பிடித்தவன்  ராமு ' 'என்பேன்.  அவனுக்கு மட்டும் இல்லை. நம் எல்லோருக்கும் உண்மையில்  தலை ஒரே எலும்பால் உருவானது அல்ல, 22 எலும்புகளின் கலப்பு தயாரிப்பு அது.  விஞ்ஞான  ஆராய்ச்சிகள் ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா?

சிலர்  கரடி போல் அதிக முடி மொச மொச வென்று உடம்பு பூரா  சுருள் சுருளாக  உள்ளவர்கள்.  பாவம் சம்மரில் எத்தனை கஷ்டமாக இருக்கும் என்று யோசிக்கிறேன்.  . மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளதாகவும், பெண்களின் முடியை விட ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என்றும்   சொல்கிறார்கள். .

என் நண்பன்  பத்தரை மணி பார்த்தசாரதி,   (பத்து மணி ஆபிசுக்கு தினமும்  தவறாமல் டாண்  என்று பத்தரை மணிக்கு  வருவதால் லேட்  பார்த்தசாரதி என்று உயிரோடு இருக்கும்போதே  பட்டப்பெயர் பெற்றவன்)  . என்னுடன் பேசிக்கொண்டே திடீரென்று  தூங்கி வழிவான்.   சிலர்  தூங்க  நிறைய மாத்திரைகள் விழுங்க வேண்டி இருக்கிறது. உண்மையில்  ஆரோக்கியமான மனிதன் படுத்த  வுடன் அடுத்த   7 நிமிடங்களில் தூங்கி விடுகின்றான்.

நமது உடம்பில்  மண்டையில் உள்ள  உயர் அதிகாரி  மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டி மீட்டர். உலகின் சிறந்த அதிசயம்  மனித மூளை.

மீதி அப்புறம் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...