நம்ம உடம்பு 3 - நங்கநல்லூர் J K SIVAN
நம்ம உடம்பு பற்றி ஒரு பாட்டு, நொண்டிச்சிந்து ராகத்தில் இருப்பது ஞாபகம் இருக்கிறதா?
யாரோ எழுதியது இல்லை. கடுவெளிச் சித்தர் பாடல்களில் பிரபலமானது இது.
''நந்தவனத்திலோர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டுவந்தானொரு தோண்டி
அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி''.
எவனோ ஒரு ஆண்டிக்கு இலவசமாக ஒரு பானை கிடைத்து அதை வைத்துக்கொண்டு விளையாடி கீழே அது டமார் என்று விழுந்து உடைந்தது என்று அர்த்தம் இல்லை.
''பகவானே எனக்கு புத்ர பாக்யம் வேண்டும்'' என்று விரதம் இருந்து, பல கோயில்கள், குளங்களுக்கு சென்று இறைவன் அருளால் கருவுற்று, பத்து மாதம் கழித்து பிறக்கிறது குழந்தை.
தோண்டி என்பது குழந்தை இங்கே. ஆண்டி என்பது மனிதன். அவன் ஆடும் கூத்து தான் இந்த மானுட வாழ்வு.
''தோண்டியைப் போட்டு உடைத்தான் '' என்று சொல்லும்போது வாழும்போதே உடலை நலமாக வைத்துக்கொண்டு அதன் மூலம் இறைவனுக்கு நன்றி செலுத்தாமல், உடலை கண்டதைச் சாப்பிட்டு, குடித்து, வாழ்க்கையை கெடுத்துக்கொண்டு உடலை பாபங்கள் செய்யும் கருவியாக வைத்துக்கொண்டு அதை இழப்பது. இது நம் கையில் தான் இருக்கிறது.
இந்த உடல் நலமாக உள்ளபோதே ஆன்மா கடைத்தேறும் வழியைத் தேட வேண்டும் என்பதே
கடுவெளிச்சித்தர் அறிவுரை. இனிமேல் புரிந்தால் நல்லது.!
இந்த சித்தரின் பாடல்களில் '' கடுவெளி'' என்றால் எல்லையற்று விரிந்த ப்ரபஞ்சம், பெருவெளி என்று அர்த்தம். அவர் பாடல்களில் கடுவெளி பற்றி அதிகம் வரும். அவர் பெயரே அதனால் கடுவெளிச் சித்தர் ஆகிவிட்டது. பரவெளி, உச்சவெளி, வெட்டவெளி, ஆகாயவெளி, சிதா காசவெளி, பிரபஞ்சவெளி, பேரண்டப் பெருவெளி என்றெல்லாம் சொல்வது எதை? '' அகம்'' எனில் நம்ம உடம்புக்குள் இருக்கும் ஆத்மா, ''பரம்'' என்றால் எல்லையற்ற வெளியே எல்லாமாக உள்ள பரமாத்மா. உள்ளும் புறமும் இருப்பது அந்த ஒரே சக்தி தான். அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும் என்று சொல்வதை இதைத்தான்.
பரமாத்மாவுடன் ஜீவாத்மாவை உரிய சாதகம் செய்து வெட்டவெளி, சூன்யம், பால்வெளி ஆகியவற்றுடன் இணைவதை சித்தர்கள் பலவித வார்த்தைகளில் அடிக்கடி கூறுவார்கள்.
கடுவெளிச்சித்தர் 15-ம் நூற்றாண்டுக் காரர். அவருக்கு வேதாரண்யம் எனும் திருமறைக்காடு எனும் க்ஷேத்திரத்தில் சிவலிங்கம் பிளவுபட்டு, பரமேஸ்வரன் காட்சி கொடுத்தாராம். இப்படி தரிசனம் கொடுத்ததை ''கடுவெளி '' என்பார்கள். ஒரு பாடல் அதை சொல்கிறது:
''வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை
செல்லும் அளவும் செலுத்துமன் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி ஆகுமே!
மனிதனின் மனம், இருதயம் , எல்லாமே இறுகிய பாறாங்கல் . அதை இளக்கினால், தவம் செய்தால், மாசு மருக்களை அகற்றினால், அத்தகைய மன அழுக்காறுகள் என்னும் இருள் நீங்கி, அதனுள் ஞானப்பிரகாசம் என்னும் பெருவெளி சித்திக்கும் என்று அர்த்தம்.
நம்ம உடம்பை பற்றி இன்னும் சில விஷயங்கள் இன்று புரியும்படி சொல்கிறேன்: உங்களுக்கே தெரிந்திருக்கலாம். இருந்தாலும் ஒருமுறை படிக்கலாம்.
''இந்தாடா கீழே போட்டுடாதே கெட்டியாக பிடி'' என்று ஒரு கண்ணாடி பாத்திரத்தை நம்மிடம் கொடுக்கும்போது நாம் அதை இறுக்கிப் பிடிக்கிறோமே. அப்போது நமது கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் இந்த காரியத்துக்கு பெரும் துணையாக இருக்கிறது. மனிதனை மாதிரியே இருக்கும் மனித குரங்குக்கு ஒத்த உருவம் கொண்ட CHIMPANZEE சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள் கிடை யாது.
நமது மூளை காலிப்ளவர் CAULIFLOWER, AKROOT மாதிரி சுருக்கம் சுருக்கமாக, மடிப்பு மடிப்பாக இருக்கிறது. பகவான் இந்த மடிப்புகளுக்குள் தான் நமது அறிவு கூர்மையை திணித்திருக் கிறான்.
குழாய் தண்ணீர் கீழே BORE ,TANK , இலிருந்து மேலே பிளாஸ்டிக், இரும்பு குழாய்கள் மூலம் மேலேறி அங்கிருந்து வேகமாக கீழே இறங்குகிறது அல்லவா. இந்த குழாய்களில் எங்கேனும் ஒரு விரிசல் துளை ஏற்பட்டால் அவ்வளவது தான். வேகமாக தண்ணீர் பீச்சி அடித்து வெளியேறுகிறது. அது போல் நம்ம உடம்பில் அடிபட்டால், காயம் ஏற்பட்டால், விபத்து நேரிட்டால், உள்ளே வேகமாக சுற்றிக் கொண்டிருக்கும் ரத்தக்குழாய் பிளந்தால் , அதில் இருந்து ரத்தம் வேகமாக சிவப்பாக 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும். படிக்கும்போதே பயமாக இருக்கிறதல்லவா? எவ்வளவு ஜாக்கிரதையாக நாம் நம்ம உடம்பை பாதுகாக்க வேண்டும் என்று புரிகிறதா?
பிறந்த குழந்தைக்கு வெள்ளை / கறுப்பு நிறங்களை தவிர வேறு எந்த கலரும், வேறுபாடும் தெரியாது. அப்புறம் அம்மா அப்பா, பள்ளிக்கூட டீச்சர் சொல்லி தான் கலர் புரிபடுகிறது

உங்கள் உடம்பு வெயிட் என்ன? உத்தேசமாக 80 கிலோ. என்று வைத்துக் கொள்வோம். அதில் உங்கள் உடம்பில் உள்ள தோலின் எடை மட்டுமே கிட்டத்தட்ட 27 கிலோ . தோல் சுருங்கிய வயோதிகர்கள் உடல் எடை குறைவாக இருக்க இது தான் காரணம். நாம் என்றாவது நமது தோலின் எடையைப் பற்றி நினைத்தது உண்டா? மாட்டின் தோல், நாயின் தோல், யானை, மான் எருமை, புலி இதற்கெல்லாம் தோல் உண்டு . அவற்றுக்கு மதிப்பு VALUE டிமாண்ட் ஜாஸ்தி. . மதிப்பே இல்லாமல் சென்ட் போட்டு சுகமாக வைத்துக்கொள்வது நம்ம உடம்பு தோல் மட்டும் தான்.
No comments:
Post a Comment