ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - நங்கநல்லூர் J K
SIVAN
ஸ்லோகங்கள்: 117-119 நாமங்கள் 578-594
महाकैलास -निलया मृणाल-मृदु-दोर्लता ।
महनीया दयामूर्तिर् महासाम्राज्य-शालिनी ॥ ११७॥
Mahakailasa nilaya mrunala mrududorlata
Mahaniya dayamurti rmahasamrajyashalini – 117
மஹாகைலாஸ நிலயா, ம்ருணால ம்ருதுதோர்லதா |
மஹனீயா, தயாமூர்தீ, மஹாஸாம்ராஜ்யஶாலினீ || 117 ||
आत्मविद्या महाविद्या श्रीविद्या कामसेविता ।
श्री-षोडशाक्षरी-विद्या त्रिकूटा कामकोटिका ॥ ११८॥
Aatmavidya mahavidya shreevidya kamasevita
Shree shodashaksharividya trikuta kamakotika – 118
ஆத்மவித்யா, மஹாவித்யா, ஶ்ரீவித்யா, காமஸேவிதா |
ஶ்ரீஷோடஶாக்ஷரீ வித்யா, த்ரிகூடா, காமகோடிகா || 118 ||
कटाक्ष-किङ्करी-भूत - कमला-कोटि-सेविता ।
शिरःस्थिता चन्द्रनिभा भालस्थेन्द्र -धनुःप्रभा ॥ ११९॥
Katakshakinkaribhuta kamala kotisevita
Shirasdhita chandranibha phalasdhendra dhanuh prabha – 119
கடாக்ஷகிம்கரீ பூத கமலா கோடிஸேவிதா |
ஶிரஃஸ்திதா, சம்த்ரனிபா, பாலஸ்தேம்த்ர தனுஃப்ரபா || 119 ||
லலிதா ஸஹஸ்ரநாமம் - (578-594 ) அர்த்தம்
* 578 * महाकैलास -निलया மஹாகைலாஸ நிலயா -- சாதாரண கைலாசமா அது. மஹாதேவன் இருக்கும் இடம் இல்லையா. எனவே மஹா கைலாசம். இப்போது நாம் யாத்திரை செல்லும் கைலாஷ் என்பதையும் தாண்டியது. அங்கே நாம் போக முடியாது. அங்கே வசிப்பவள் அம்பாள். உடலின் ஆறு சக்ரங்களையும் கடந்த ஸஹஸ்ராரத்தில் இருக்கும் பிந்து தான் கைலாசம். சூக்ஷ்ம சரீரமாக அம்பாளுடன் சிவன் வீற்றிருக்கும் ஸ்தலம் .
* 579 * मृणाल-मृदु-दोर्लता । ம்ருணாள ம்ருது தோர்லதா - தாமரைத்தண்டு போல மிருதுவான குளிர்ந்த மெத்து மெத்தென்ற கரங்களையுடையவள் அம்பாள் என்கிறார் ஹயக்ரீவர். அவளது ஸூக்ஷ்ம சரீரம் குண்டலினி.
* 580* महनीया மஹனீயா -- பூஜிக்கத் தக்கவள் அம்பாள். போற்றிப் பாட கிடைத்தவள். மஹா என்று அதனால் தான் முதலில் சொல்லியிருக்கிறதோ?
* 581* दयामूर्तिर् தயாமூர்த்தீ - கருணை வடிவம். காருண்ய மூர்த்தி அம்பாள். இரக்கம் கொண்டவள். தாயன்பு மிக்கவள். மோக்ஷ தாயினி.
* 582 *महासाम्राज्य-शालिनी மஹாஸாம்ராஜ்யஶாலினீ - சிற்றரசி அல்ல. பிரபஞ்ச மகா சாம்ராஜ்யத்தின் அதிபதி ஸ்ரீ லலிதா அம்பாள். சர்வ கிரஹங் களையும் லோகங்களையுமே கட்டுப்பாட்டில் வைத்திருப்பவள் .
* 583 *आत्मविद्या ஆத்மவித்யா- சகல வித்யைகளுக்கும் மூலமானவள். ஆத்ம வித்யைக்கு ஆதாரமானவள். ஞான ஸ்வரூபிணி. பரப்ரம்மணி. துரீய காயத்ரி. சர்வ சக்தி. ஆத்ம அஷ்டாக்ஷர மந்த்ரம் என்று ஒன்று உண்டு. அது ஓம்.ஹ்ரீம், ஹம்ஸா, ஸோஹம் ஸ்வாஹா: ஸ்ரீ வித்யா உபாசனையில் முக்கிய மந்திரம்.
* 584 *महाविद्या மஹாவித்யா - சிறந்த உயர்ந்த வித்யை அவள் தான். ஞானமே உருவானவள். ஆத்மாவை அறிந்தவன் அவளை அறிய முடியும். வனதுர்கா சப்தசதி என்று ஒரு ஸ்தோத்ரம். அதில் 700 ஸ்லோகங்கள். அவை ஒவ்வொன்றும் மூலமந்த்ர 37 பீஜங்கள் கொண்டது. ''ஓம் உத்திஷ்ட புருஷிக் கிம் ஸ்வாபிஸி பயம் மீ ஸமுபஸ்திதம் யதி ஸக்யமஸக்யம் வா தன்மே பகவதி சமய ஸ்வாஹா:'' என்பது
* 585 * श्रीविद्या ஶ்ரீவித்யா- வித்யையே உருவமானவள் - ஸ்ரீ வித்யா என்பது பஞ்சதசி மந்த்ரம். விஷ்ணு புராணம் நாலு வித்யை பற்றி சொல்கிறது. , கர்மாவைப் பற்றி விளக்கும் யஞ வித்யா, சடங்குகளை பற்றி சொல்லும் மஹா வித்யா, ரஹஸ்யங்களை உரைக்கும் குஹ்ய வித்யா, தன்னை அறியும் ஆத்ம வித்யா.
* 586 *कामसेविता । காமஸேவிதா -- மன்மதனுக்கு உயிர்ப் பிச்சை அளித்ததால் நன்றியோடு அவனால் வழிபடப்படுபவள் அம்பாள். அம்பாளின் பக்தர்களில் மன்மதன் ஒருவன்.
* 587 * श्री-षोडशाक्षरी-विद्या ஶ்ரீஷோடஶாக்ஷரீ வித்யா - பதினாறு அக்ஷரங்களைக் கொண்ட மந்த்ர ஞான உருவானவள் அம்பாள்.சக்தி பத்து உருவங்களில் வழிபடப்படுகிறாள். தச மஹா வித்யா என்று அதனால் அவளுக்கு பெயர். சோடசி என்று அதில் ஒரு உருவம்.
* 588 *त्रिकूटा த்ரிகூடா- அம்பாளை மூன்று பிரிவாக காணலாம். அ உ ம (ஓம்) அதில் ஒன்று. ப்ரம்மா விஷ்ணு சிவன் என்று முத்தொழில் புரிபவள். மூன்று நிலைகள், ஜாக்ரதா, ஸ்வப்னா, சுஷுப்தி, மூன்று குணங்கள் சத்வ, ரஜோ, தமோ குணம். அக்னி சூர்யன் சந்திரன் என்று மூன்று கூடம் பஞ்சதசியில் அவளை குறிக்கும்.அம்பாளை மூன்று சக்தியாக அறிவோம் இச்சா, க்ரியா, ஞான சக்தி ஸ்வரூபம்.
* 589 * कामकोटिका காமகோடிகா -- காம கோடி பீடத்தில் அமர்பவள் ஸ்ரீ அம்பாள். காமாக்ஷி. சிவசக்தி.
* 590 *कटाक्ष-किङ्करी-भूत - कमला-कोटि-सेविता । கடாக்ஷகிம்கரீ பூத கமலா கோடிஸேவிதா- என்னைக் கொஞ்சம் கடைக்கண்ணால் பார்த்து ரக்ஷி என கோடானுகோடி யக்ஷிணிகள் தேவதைகள் வணங்கி அவளை வலம் வருபவர்கள் என்கிறார் ஹயக்ரீவர். அந்த அளவுக்கு சர்வ சக்தி வாய்ந்தவள் ஸ்ரீ லலிதாம்பிகை.
* 591 * शिरःस्थिता ஶிரஸ்திதா - சிரத்தில் நிலைத்திருப்பவள், உறைபவள் . ஸஹஸ்ராரத்தில் காமேஸ்வரனோடு ஐக்யமாவதை குறிக்கிறது. ப்ரம்ம ஞானமேயானவள். ஞானாநந்தம் தருபவள்.
* 592 *चन्द्रनिभा சந்த்ரநிபா -- முழு நிலவைப்பழிக்கும் அழகுடையவள். பூரண சந்திரிகா அம்பாள். குண்டலினி சக்தியின் முழு சக்தி ஜொலிப்பது முழு நிலவைப்போல அவளிடம்.ஸ்ரீ சக்ர உபாசனையில் பஞ்சதசியில் மூன்றாவது மந்திர கூடம் சந்திர கூடம். அது இதைத்தான் குறிக்கிறது.
* 593 * भालस्थेन्द्र பாலஸ்தேந்திர -- நெற்றியில் பிந்துவாக தெரிபவள். சிவனைச் சக்தி வாய்ந்த நெற்றிக்கண்ணன் என்கிறோமே நெற்றியில் சக்தி அதுவே தான்.
* 594 * -धनुःप्रभा தனுப்ரபா - மழை கூட்டம் ஒன்று சேர்ந்தது போன்றவள் - அதை தான் இந்திர தனுசு என்போம். இந்திர வில் நீயே என்று பாடுகிறோம் அதனால் தான் அம்பாளை. வண்ண வண்ண வான வில். பிறைச்சந்திரன் போன்ற உருவம். அதை தானே சிவன் தலையில் சூடி பிறைசூடி என்று பெயர் பெற்றவர்.
சக்தி பீடம் -- குஹ்யேஸ்வரி - நேபாளம்.
அம்பாளை நேபாளத்தில் காட்மாண்டுவில் குஹேஸ்வரி, குஜேஸ்வரி, என்றும் சொல்கிறார்கள். ஆதி சக்தி அவதாரம். எனக்கு நேரில் சென்று பார்க்கும் பாக்யம் வாலிப வயதில் கிடைத்தது. பசுபதி நாதனை தரிசித்து விட்டு பிறகு என்னை யாரோ இங்கேயும் அழைத்து சென்றார்கள். சக்தி பீடம். பாகமதி நதிக்கரையில் பசுபதி நாத் சிவாலயத்திலிருந்து கிழக்கே ஒரு கி.மீ. தூரம்.
17ம் நூற்றாண்டில் பிரதாப் மல்லா என்ற நேபாள அரசர் கட்டிய ஆலயம். இன்னொரு விஷயம். ஷோடசி மந்திரத்தில் 16வது கடைசி சொல் ''குஹ்யேஸ்வரி, குஹாம்பா'' அம்பாளை குறிக்கும்.
தக்ஷனின் யாகத்தில் உயிர் நீத்த சதிதேவி உடலை சுமந்து ருத்ரன் கோர தாண்டவம் ஆடியபோது அவள் ஞானம் விழுந்த இடம் இதுவாம். குஹ்யம் என்றால் ரகசிய ஞானம். ஜல கலசம் இங்கே வெள்ளி தங்கத்தாலானது. மண்டப நடுவில் நான்கு சர்ப்பங்கள் தாங்கியவாறு அமைந்தது. கால பைரவர் சந்நிதி உண்டு. இந்த ஆலயம் பற்றி காளி தந்த்ரா, சண்டி தந்திரா, சிவா தந்திர ரஹஸ்ய நூல்களில் சொல்லப்படுகிறது. நவ ராத்ரி சமயத்தில் இந்த ஆலயத்தில் பக்தர்கள் அலைமோதுவார்கள்.
No comments:
Post a Comment