நாலடியில் நாம் அறிவோம்! - நங்கநல்லூர் J K SIVAN
முன்பு ஒரு காலத்தில் தென்னகமெங்கும் சைவ மதத்தை க்ஷீணிக்க வைத்த சமண மனதம் செழுத்தோங்கியது. தென்னக மன்னர்கள், சேர சோழ பாண்டியர் சிலர் சமணர்களை ஆதரித்தார்கள். அப்போது தான் பாண்டிய நாட்டில் சமண முனிவர்கள் 400 பேர் சேர்ந்து காலத்தை வென்ற எண்ணற்ற 4 அடி பாடல்களை இயற்றினார்கள். அவற்றில் சிலவே நமக்கு இப்போது கிடைத்தவை.
சமணர்கள் மறைந்தாலும் அவர்கள் சமைத்த இந்த நாலடியார் என்றும் நிலையாக நிற்கும். பல் உறுதியாக இருப்பதற்கு அந்த காலத்தில் ஆலங் குச்சி, வேப்பங் குச்சி உபயோகித்து பல் துலக்கினார்கள். பல்லை விடுங்கள், நமது சொல்லுக்கு உறுதியாக எதை நாம் கற்க வேண்டும் என்று ரெண்டு காவியங்களை விட்டு விட்டுப் போயிருக்கி றார்கள் நமது முன்னோர். அவையே நாலடியும் ஈரடியும். அதாவது நாலடியாரும் திருக்குறளும்.
இதில் நாலடியாரை கொஞ்சம் பார்க்கும்போது அதை 1873க்கு முன்பே லீபேர் என்கிற தரங்கம்பாடி வெள்ளைக்கார பாதிரியார் ஒரு நல்லவேலை செய்திருப்பது

தெரிகிறது. இதை ஆங்கிலத்தில் அழகாக அவர் மொழி பெயர்த்திருக்கிறார்.
நாலடியார் புரியாவிட்டாலும் வெள்ளைக்காரர்கள் சிலர் நம்மைவிட தமிழை நன்றாக அறிந்திருந்தார்கள் என்று புரிகிறதே.
நாம் தான் ஏனோ அவர்கள் மொழியான ஆங்கிலத்தை அரைகுறையாக பிடித்துக் கொண்டு நமது தாய் மொழியை இரக்கமின்றி தயக்கமின்றி வெளியேற்றிவிட்டோம். தாய்க்கு கொடுக்கும் மதிப்பு தானே தாய் மொழிக்கும் தருகிறோம்.
நாலடியார் 40 அத்தியாயம் கொண்டு ஒவ்வொன்றிலும் 10 பாடல்கள். மொத்தம் 400. ஒவ்வொரு பாடலும் 4 அடி கொண்டது.
ஒரு ராஜாவின் அரண்மனையில் 8000 புலவர்கள் கூடியிருந்தனர். அவனது அரண்மனை யில் ஏற்கனவே சில புலவர்கள் இருந்தனர். ராஜாவுக்கு புது புலவர்கள் மேல் மோகம் வந்து விட்டது. இனி நாம் எதற்கு என்று அவர்கள் அரண்மனையை விட்டு ராவோடு ராவாக சொல்லாமல் கிளம்பிவிட்டனர். போவதற்கு முன்பு ஆளுக்கு ஒரு பாடல் ஓலைச் சுவடியில் எழுதி தங்கள் தலையணைக்கு கீழே வைத்து விட்டு சென்றனர். மறுநாள் ராஜா விஷயம் அறிந்து கோபம் கொண்டு அத்தனை ஓலைச்சுவடிகளையும் நதியில் எறியச் சொன்னான். ஆற்று வெள்ளத்தையும் எதிர்த்து 400 ஓலைச்சுவடிகள் மட்டுமே மிதந்து வந்தன. ஆச்சர்யப்பட்ட ராஜா அவற்றை எடுத்து பாதுகாத்து இப்போது உங்களுக்கு நாலடியாராக வீட்டுக்குள்ளேயே வந்து விட்டது.

அற்புதமான நாலடியார் பாடல்கள் சிலவற்றை அறிவோம்:
''நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார் - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
இன்னாங் கெழுந்திருப் பார்.''
''இளமையோ அதனால் விளையும் அழகோ சாஸ்வதம் என்று எண்ணி பெருமிதம் அடைகிறோம். எந்த கண்ணாடியில் நம் அழகு நம்மை பெருமிதம் கொள்ள செய்ததோ சில வருஷங்கள் கழித்து நம்மை அதே கண்ணாடி எப்படி காட்டப் போகிறது என்று நாம் நினைத்து பார்ப்பதே இல்லை . அறிஞர்கள் இதை சிந்திப்பார்கள், காதோரம் நரை தெரியும் ஒரு நேரம்வரும். அது நமக்து காலத்தைச் சொல்லும் என்று நல்லறிவாளர்கள் உணர்ந்தவர்கள். வயோதிகம் வாக்கிங் ஸ்டிக்காகி வாசலில் கதவுக்கு பின்னால் சுவற்றில் நமக்காக சாய்ந்து கிடப்பதை ஞாபகம் கொள்பவர்கள். இளமையிலேயே பின்னால் மூப்பு நிச்சயமாக வரும் என்று கருதி இளமையிலேயே துறவு உணர்வு கொண்டவர்கள்.
குற்றம் நீங்காத, நிலையற்ற இளமைப் பருவத்தில் மகிழ்ந்து வாழ்ந்தவர்கள் , முதுமைக் காலத்தில் கோலை ஊன்றிக் கொண்டு வருத்தத்துடன் எழுந்திருப்பர்.
ஏதோ யாருக்கோ வரவேண்டியது தமக்கு வந்துவிட்டதாக அதிர்ச்சி அடைந்து அதன் காரணமாக அதிகமாகவே தனது கைப் பணத்தை டாக்டருக்கு அளிப்பார்கள்.
''நட்புநார் அற்றன நல்லாரும் அ·கினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன - உட்காணாய்
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி.''
எவரெல்லாம் நமக்கு உகந்தவர், உற்ற நண்பர்கள் என்று நம்பி பழகினோமோ, உபசரித்தோமோ அந்த பிணைப்பு எல்லாம் பொட்டலம் கட்டும் நூலாக
அற்றுப் போய்விட்டதே. எந்தப் பெண்கள் மேல் பாசமும் நேசமும் கொண்டு அவர்கள் பின்னாலேயே சுற்றி வந்தோமே அவர்களைக் காணோமே. எங்கே அந்த
அன்பு? சுற்றம் , உற்றார், சொந்தம் பந்தம் என்ற பெயரில் சிலர் நம்மருகே உண்டே எங்கே அவர்கள்? மனத்திலே யோசித்துப் பார்!

நடுக் கடலில் மூழ்கும் கப்பலில் இருப்போர்க்கு நேர்ந்த துன்பம் போலத் துன்பம் (முதுமை) வந்து விட்டது! இனி எது நமக்கு சாஸ்வதம் என்று இனியாவது புரிந்து கொண்டால் கொஞ்சமாவது பயன் உண்டு
.''வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅது எழுதலால் - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின் யாரும்
நிலவார் நிலமிசை மேல்''.
எந்த கருவியும் வேண்டாம். மிக எளிதில் அன்றாடம் நமக்கு நினைவூட்ட அந்த கெட்டிக்கார இறைவன் ஒரு உபாயம் கொடுத்து இருக்கிறான். நாம் தான் அதை புரிந்து கொள்வதில்லை.
காலத்தை அளக்கும் கருவியாக விளங்கு கிறான் சூரியன். தினமும் சிகப்பாக உதிக்கிறான். சிகப்பு டேஞ்சர் லைட் என்போம். நாள் தவறாமல் சிவப்பாக உதய மாகி சூரியன் நினைவூட்டுகிறான். ''அடே மனிதா இன்று இன்னுமொரு நாள் தருகிறேன், இந்தா. போனதெல்லாம் இனி வராது. நாட்கள் ஓட ஓட யமன் வீசும் பாசக்கயிறு மெது மெதுவாக நெருங்கி வருகிறது. உன் ஆயுள் முடியும் முன்பே பிறருக்கு உதவி செய்''.

யாருமே உலகில் சாகாமல் நிலைத்து இருக்க முடியாது என்று உணர்ந்து கொள். சூரியன் குறிப்பாக உணர்த்துவது இது தான்
- ஒரு நாள் கழிந்தது; இரு நாட்கள் கழிந்தன என ஆயுளை அளவிடுவதாக இருக்
கின்ற படியால் வாழ்நாள் முடிவதற்கு முன்னரே நல்லறம் செய்து வாழவேண்டும் என்பது தான் இந்த நாலடி பாடல் சொல்வது.
'' ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து
போவாம்நாம் என்னாப் புன்நெஞ்சே - ஓவாது
நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாட்கள்
சென்றன செய்வது உரை''.
பாவம் நாம் இரவு பகல் எப்பாடு பட்டாவது நிறைய செல்வத்தை விரும்பி
அடைந்து அதைச் சேர்த்து பலவாக்கி பெருக்கி -- புதைத்து என்று ஏன் சொல்கிறேன்? புதைப்பதே பிறருக்கு தெரியாமல் இருக்கத் தானே. இப்போது மட்டும் என்னவாம்? எங்கோ ஒரு வங்கியில் எங்கேயோ ஒரு தேசத்தில் மறைவாக சேர்த்து வைத்து ''இதோ வெளியே வரப்போகிறது'' என்று சொல்லியே பயத்தை அவனுக்கு அளிக்கிறதே இந்த பணம்.
அடைந்து அதைச் சேர்த்து பலவாக்கி பெருக்கி
எது பெருஞ்செல்வம்? நமக்கே உதவாமல் எங்கோ மறைந்து கிடக்கும் இதுவா? தான தர்மத்தில் கிடைக்கும் சந்தோஷமா?
அறத்தை மறந்து இறந்துபோவோம் நாம் என்று எண்ணாத அற்ப நெஞ்சே!
கானல் நீரைத் தேடி ஏனோ ஓடுகிறாய். அது உதவும் என்று கனவு கண்டு
ஓயாமல் உழைத்து வாழ்கின்றாய். எனினும்,நீ சேர்த்த பணத்தை பாராமலேயே
உன் வாழ் நாட்கள் ஒழியுமே.! இனி நீ மறுமைக்காகச் செய்யப் போவதுதான் என்ன? சொல்!

தொடரும்
No comments:
Post a Comment