Sunday, December 5, 2021

SRI LALITHA SAHASRANAMAM

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் -  நங்கநல்லூர் J K  SIVAN 

ஸ்லோகங்கள்   111 - 113    நாமங்கள் 542 - 558

पुण्यकीर्तिः पुण्यलभ्या  पुण्यश्रवण-कीर्तना
पुलोमजार्चिता बन्ध- मोचनी बन्धुरालका ॥ १११॥ or मोचनी बर्बरालका

 Punyakirtih punyalabhyA  punyashravana kirtana
Pulomajarchita bandha mochani bandhuralaka – 111

புண்யகீர்திஃ, புண்யலப்யா, புண்யஶ்ரவண கீர்தனா |
புலோமஜார்சிதா, பந்த மோசனீ, பம்துராலகா || 111 ||

विमर्शरूपिणी विद्या  वियदादि-जगत्प्रसूः ।
सर्वव्याधि-प्रशमनी  सर्वमृत्यु-निवारिणी ॥ ११२॥

Vimarsharupini vidya  viyadadi jagatprasuh
Sarvavyadhi prashamani sarvamrutyu nivarini – 112

விமர்ஶரூபிணீ, வித்யா, வியதாதி ஜகத்ப்ரஸூஃ |
ஸர்வவ்யாதி ப்ரஶமனீ, ஸர்வம்றுத்யு னிவாரிணீ || 112 ||

अग्रगण्याऽचिन्त्यरूपा कलिकल्मष-नाशिनी ।
कात्यायनी कालहन्त्री  कमलाक्ष-निषेविता ॥ ११३॥

Agraganya chintyarupa  kalikalmashanashini
Katyayani  kalahantri kamalaksha nishevita – 113

அக்ரகண்யா,‌உசிம்த்யரூபா,  கலிகல்மஷ னாஶினீ |
காத்யாயினீ, காலஹம்த்ரீ, கமலாக்ஷ னிஷேவிதா || 113 ||

லலிதா ஸஹஸ்ரநாமம் - (542- 558 ) அர்த்தம்  

* 542* 
पुण्यकीर्तिः -   புண்யகீர்த்தி  -  
அம்பாளை நினைத்து  வேண்டிக்   கொண்டு  துவங்கும்  எந்த  காரியமும் நல்லதாகவே  முடியும். அவள்  நாம் நல்ல காரியங்களைச்  செய்ய உதவுபவள் . புண்ணியம்  தரும் செய்கைகளை செய்ய வைப்பவள்  லலிதாம்பிகை.  அதனால் பேரும் புகழும்  வாங்கித் தருபவள் அன்னை அம்பாள்.

* 543* 
 पुण्यलभ्या -புண்யலப்யா -  
மேலே  சொன்னதோடு  கூட இன்னொரு   விஷயம். புண்ய காரியங்களைச்  செய்தால்  தான்  அம்பாள் புலப்படுவாள்.  புண்யம்   என்றால் ஸத் கார்யங்கள்.  ஸத்  எண்ணங்கள்.  பிறருக்கு உதவுபவை. சௌந்தர்ய லஹரியில்  சங்கரர் ''அம்மா உன்னை  ப்ரம்மா விஷ்ணு  ருத்ரன்  ஆகியோர் வழிபடுகிறார்கள்.  பூர்வ ஜென்ம  புண்ய பலன் இருந்தால் தானே  உன்னை  தொழக்கூட முடியும் '' என்கிறார்.

* 544 * 
पुण्यश्रवणकीर्तना -  புண்யஶ்ரவண கீர்தனா-  
புண்ய  விஷயங்களைப் , படிப்பது, கேட்பது  போன்ற பாக்யம் இருக்கிறவர்களுக்கு நன்மை புரிபவள் அம்பாள். விஷ்ணு சஹஸ்ரநாமமும் முடிவில் லலிதா சஹஸ்ரநாமம்  சொல்வதையே, இது   குறிக்கிறது. .

* 545 *
पुलोमजार्चिता -புலோமஜார்சிதா --   
இந்திரனின் மனைவி  இந்திராணி வழிபடுபவள்  லலிதாம்பிகை. சசியின் தந்தை  புலோமன்  எனவே இந்திராணி, சசிக்கு  இன்னொரு பெயர்  புலோமஜா .
புலோமன்  ராக்ஷஸன். அவனைக் கொன்று  அவன் மகள் சசியை இந்திரன் மணந்தான். இன்னொரு  ராக்ஷஸன்  வ்ருத்தாசுரனை இந்திரன்  லலிதாம்பிகையின்  அருளால்  கொன்றான்.  ராக்ஷஸன்  நஹுஷன் விஷயத்திலும்  அப்படித்தான். அவன்  இந்திரனை வென்று  இந்திராணியை அடைய திட்டமிட்டான்.   சப்த ரிஷிகளை   தன்னைப்  பல்லக்கில் சுமக்கச்  செய்த  போது குள்ளமான அகஸ்தியரால் மற்றவர்களைப் போல்  வேகமாக பல்லக்கை தூக்கிக்கொண்டு  நகர  முடியாதபோது அவரை  அவமதிக்கிறான். காலால்  உதைக்கிறான். பெரிய பாம்பாக அவரால் சபிக்கப்பட்டு   பரமபத  சோபான  பட விளையாட்டில்  நாம்  அடிக்கடி நஹுஷன்  பாம்பில்  இறங்கி   மீண்டும் தாயம்போட்டு  மேலே   போக  ஏணி  தேடுகிறோம்.

* 546 *
बन्धमोचनी - பந்தமோசனீ,-    
நம்மை பந்த பாச கட்டுகளிலிருந்து  விடுபட்டு  உய்ய  அருள்பவள்  அம்பாள்.  

* 547 *
बन्धुरालका -  , பந்துராலகா - 
நெற்றியில்  சுருள் சுருளாக  சுருள் கம்பிகளாக    அலை அலையாக ஆடும் கேசத்தை கொண்ட  அழகி அம்பாள்.  மோக்ஷ சாம்ராஜ்யம்  அடையச்  செய்பவள்.  

* 548 *
विमर्शरूपिणी   விமர்ஶரூபிணீ --  
கண்ணால் எளிதில் நாம்  காண முடியாதவள் அம்பாள். ப்ரம்மத்திற்கு  எது உருவம் ?   ஞானப்  பிழம்பு.  சக்தி ஸ்வரூபம்.   இயக்கமில்லா சிவனை இயக்கி ஸ்ரிஷ்டிப்பவள்.    அர்த்த நாரீஸ்வரி.

* 549 *
विद्या வித்யா -   
ஞானத்தின் மறுபெயர் அம்பாள் லலிதை.

* 550 * 
वियदादि-जगत्प्रसूः  வியதாதி ஜகத்ப்ரஸூ--  
இந்த  ப்ரித்வி,  பூமி,   உண்டாகக்   காரணமானவள் அம்பாள். எல்லா ஆயுதங்களும் தரித்தவள். நம்மைக்  காப்பவள்.

* 551 *
सर्वव्याधि-प्रशमनी  ஸர்வவ்யாதி ப்ரஶமனீ  --    
நோய்களிலிருந்து  நம்மை  காப்பவள் அம்பாள் ஸ்ரீ லலிதை.  வைத்தீஸ்வரன்/மகா  வைத்யநாதன்  மனைவி அல்லவா?

* 552 * 
 सर्वमृत्यु-निवारिणी  ஸர்வ ம்ருத்யு நிவாரணி --   
மரணம்  சம்பவிப்பது  நிச்சயம்.  ஒருவரும் தப்பமுடியாது.  அது எப்போது  எவ்விதம் எங்கே நிகழும் என்பது பரம ரகசியம். ஆனால் அது நிகழ்ந்ததற்கு   இயற்கை என்று  சொல்லாமல்  எத்தனையோ   காரணம் நிறைய  நாம்  காட்டுபவர்கள்.   அப்படிப்பட்ட  வித விதமான  மரணத்திலிருந்து  மரண பயத்திலிருந்து  நம்மை  மீட்பவள். காப்பாற்றுபவள்  அம்பாள். பிறப்பு  இருந்தால் தானே  இறப்பு.  மறுபிறவி இல்லாமல் நிவாரணம் கொடுப்பவள் அம்பாள்.

* 553 * 
अग्रगण्या அக்ர கண்யா-- 
 உயர்ந்த பீடத்தில்  இருப்பவள்.மேன்மையோடு  முதன்மையாக காண்பவள்.  - சௌந்தர்ய லஹரி ''தாயே,   நீ அல்லவோ  எல்லோரிலும் முதல்வள் '' என்கிறது.

* 554 * 
ऽचिन्त्यरूपा  அசிந்த்ய ரூபா  -- 
 எண்ண  முடியாத  அற்புதம்  அம்பாள்.  சிந்தனைக்கு அப்பாற்பட்டவள்.   விண்டார் கண்டதில்லை.  கண்டார் விண்டதில்லை.

* 555 *  
कलिकल्मष-नाशिनी ।கலிகல்மஷ னாஶினீ  -- 
கலியுகத்தில்  சகல துன்பங்களையும், பாபங்களையும்,   இடையூறுகளையும்  தடங்கல்களையும்   நீக்க  ஒரே வழி  அம்பாள் திருவடி சரணமே  என்கிறது இந்த அற்புத  நாமம்.   மார்க்கண்டேய புராணம்  யுக   கணக்கு ஒன்று சொல்கிறதே புரியுமா?  

ஒவ்வொரு யுக  முடிவிலும்  பிரளயம் (சர்வ நாசம்) நிகழ்ந்து பிறகு புது யுகம் தோன்றி  எல்லா உயிர்களும் மீண்டும் பிறக்கும்.  இப்போது கலியுகம் ஆரம்பித்து 5118 வது வருஷம். மொத்த வருஷம் 360000. இன்னும் எவ்வளவு கஷ்டப்படவேண்டும் என்று  படுத்துக்கொண்டே யோசிப்போம்.  நின்றால்  தலை சுற்றி கீழே  விழுந்துவிடுவோம்.  அப்பல்லோ  காசோடு வா என்று காத்திருக்கிறது.

* 556 * 
कात्यायनी காத்யாயினீ --  
ஒட்டியாண  பீடத்தில் காட்சி தரும்  காத்யாயினி அம்பாள்  ஸ்ரீ லலிதை. காத்யாயன  ரிஷியின் குமாரி . ஓளிமிக்கவள்.  .

* 557 *
कालहन्त्री காலஹந்த்ரீ--  
காலனை வதைப்பவள்.  

* 558 *
 कमलाक्ष-निषेविता கமலாக்ஷ  நிஷேவிதா --   
தாமரைக்கண்ணன்  விஷ்ணுவால்  வணங்கப்படுபவள்  ஸ்ரீ லலிதாம்பிகை

சக்தி பீடம்:  ஆலம்பூர்  -  ஜோகுலம்பா

ஆந்திர  பிரதேசத்தில் மஹபூப் நகர் என்ற  நகரத்தில்  ஆலம்பூர் என்று ஒரு கிராமம். அங்கே ஒரு சக்தி   நம்மை  பரிபாலிக்கிறாள்.  ஜோகுலம்பா என்று பெயர் அவளுக்கு. இந்த பெயர்  ஏனென்றால்  அவள்  யோகினிகளுக்கு  தாய்.  தெலுங்கு காரர்கள் நாவில்  ''ஜோகினிலு அம்மா'' .  எந்த பற்றுதலும் இல்லாதவள். யோகுலம்பா  யோகாம்பா என்று கூட  அழைப்பதுண்டு.  சதி தக்ஷனின் யாகத்தீயில்  கருகி மாய்ந்தபோது  அவள் உடலைச் சுமந்து சிவபெருமான்  கோபத்தோடு  கோர தாண்டவம் ஆடுகிறார். சதியின் உடலின் பல பாகங்கள்  பூமியில் விழுந்த இடங்கள் தான் 51 சக்தி பீடங்கள். ஊர்த்வ தந்த பங்க்தி, சதியின் வாயின் மேல்  தாடை யிலிருந்து  ஒரு பல்  கீழே  ஆலம்பூரில்  விழுந்ததை    குறிக்கிறது.   

 ஆலம்பூர் கிராமத்தின்  தென் கிழக்கு  ஓரத்தில்  ஜோகுலம்பாவின் இந்த  ஆலயம்  அமைந்திருக்கிறது.  கோவிலை ஒட்டி  துங்க பத்ரை நதி அழகாக  வேகமாக  ஓடுகிறது.  ஆலம்பூர்  கிருஷ்ணா துங்கபத்திரை நதிகளின்  சங்கம க்ஷேத்திரம்.  இங்கு  அம்பாள் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். 
  12ம்  நூற்றாண்டு  ஆலயம்.   ஆதி சங்கரர்  இங்கு  ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்ததாக தகவல்.  சக்ரத்தை  காணோம்.
ஆலம்பூர்  செல்ல  90 கி.மீ.  மஹபூப் நகரிலிருந்து பிரயாணம் செய்யவேண்டும். கர்னூலில் இருந்து  27 கி.மீ. தான்.  ஹைதராபாத் போய்  தான்  ஆலம்பூர்  போவேன் என்று  அடம் பிடித்தால்  200 கி.மீ. தூரம்  பிரயாணம் செய்யவேண்டும்.
 அம்பாள்  தலை முடியில்  பல்லி, தேள், வௌவால், மண்டை ஓடு .... இதெல்லாம்  வாழ்வில் வராது அவளை தொழுதால் என்று காட்டவே  என்கிறார்கள்.  வீட்டை இவ்வாறு பாதுகாப்பதால் அவளுக்கு  க்ரஹ சண்டி  என்று  பெயர்.
அருகில்  நவ ப்ரம்மா  ஆலயங்கள் உள்ளன.   பரசுராமரின் அம்மா  ரேணுகா, அப்பா ஜமதக்னி ரிஷி இங்கே   வாழ்ந்தவர்கள் என்று  புராணம் சொல்கிறது.  மேலைச்  சாளுக்கியர்கள், சாதவாஹனர்கள், பாதாமி  சாளுக்கியர்கள் ஆண்ட  தேசம். தாராளமாக  இது  ஒரு ஆயிர வருஷ கோயில். சந்தேகம் வேண்டாம். முடிந்தால்  தரிசனம் செய்யவேண்டும். 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...