Friday, December 24, 2021

ADHI SANKARAR UPADESA SADHANA PANCHAKAM

 


ஆதி சங்கரர் -  நங்கநல்லூர்  J K SIVAN
சாதனா /உபதேச பஞ்சகம். ஸ்லோகம். 3

ஐந்து ஸ்லோகங்கள்   கொண்ட  இந்த பஞ்சகம் 40  படிகளை காட்டுகிறது. அவற்றை கெட்டியாக  பிடித்துக்கொண்டு  ஏறினால்  வாழ்க்கையை  மோக்ஷ மார்க்கம் அடையும் பாதையின்  உச்சியாக மேலே செல்லலாம்.  இது வரை ரெண்டு படிக்கட்டு ஏறிவிட்டோம். இன்று ஆதி சங்கரரின் சாதன பஞ்சகம்/உபதேச பஞ்சகத்தில் மூன்றாவது ஸ்லோகம் பார்ப்போம். அர்த்தம் அற்புதமாக இருக் கும். இதை வெறுமனே படித்தால் மட்டும் போதாது. கொஞ்சம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். வார்த்தைகளின் பளுவை நெஞ்சில் சுமக்க வேண்டும்.  இன்னும்  எட்டு படி  உயரே செல்லலாம்.

वाक्यार्थश्च विचार्यतां श्रुतिशिरः पक्षः समाश्रीयतां
दुस्तर्कात्सुविरम्यतां श्रुतिमतस्तर्कोऽनुसन्धीयताम्‌।
ब्रह्मास्मीति विभाव्यतामहरहर्गर्वः परित्यज्यतां
देहेऽहंमतिरुझ्यतां बुधजनैर्वादः परित्यज्यताम्‌॥३॥

vakyarthasca vicaryatam srutisirahpaksah samasriyatam
dustarkatsuviramyatam srutimatastarko’nusandhiyatam ।
brahmasmiti vibhavyatamaharahargarvah parityajyatam
dehe’hammatirujjhyatam budhajanairvadah parityajyatam ॥ 3॥

வாக்யார்த்தஸ்ச விசார்யதாம் ஸ்ருதிசிரா : பக்ஷ : ஸமாச்ரியதாம்
துஸ்தர்க்காதிசுவிரம்யதாம் ஸ்ருதிமதஸ்தர்க்கோநுஸந்தீயதாம்
ப்ரம்மாஸ்மிதி விபாவ்யதாமஹரஹர்கர்வா பரித்யஜ்யதாம் 
தேஹே ஹமா திருஜ்யதாம் பு தஜனைர்வாதா பரித்யஜ்யதாம்

வேத சாஸ்திர நூல்களை கற்று அர்த்தம் புரிந்து கொள்ளவேண்டும். ரிஷிகள், கற்றுணர்ந்த மஹான்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதை அவர்கள் பார்வையில் உணரவேண்டும். விதண்டா வாதம், குதர்க்கம் உதவாது. ரிஷிகளை விட தனக்கு அதிகம் தெரியும் என்ற கனவில் சிலர் புது அர்த்தங்கள் சொல்லி குழப்புவது பஞ்சமகா பாதகத்தை ஆறாம் மஹா பாதகமாக மாற்றிவிடும். இதை படிப்படியாக தருகிறேன்.

17. அருமையான மஹா வாக்கியங்களை அர்த்தத்தோடு உணர்ந்து பலனடைவாய்.

18. வேதங்கள் என்ன சொல்கிறது என்று முதலில் புரிந்து கொள்வோம். அதை உணர்த்த வேத ரிஷிகள் எந்த வார்த்தைகளை உபயோகித்து சொல்லியிருக்கிறார்கள் என்று யோசித்து ருசி.

19. குதிரைக்கு குர்ரம் என்றால் யானைக்கு யர்ரம் தானே -- விதண்டா வாதம் வேண்டாம்.

20 ரிஷிகள் எதை எவ்வாறு உணர்த்துகிறார்கள் என்பது பற்றி பேசுவோம். அறிந்து கொள்வோம்.,

21. வேதங்கள் சொல்லும் தர்க்கம் என்ன அவற்றின் உட்பொருள் என்ன என்று மட்டுமே அறிந்து கொண்டு பின் போற்றுவோம். கற்றவர்களோடு விவாதம் வேண்டாம்.

22. நான் தான் ப்ரம்மம் என்ற எண்ணம் மனதில் வேர் விடட்டும்.

23. வேத வழியில் நடந்து, ஒவ்வொருநாளும், கர்வம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு நீங்கட்டும். அகம்பாவம் ஆபத்தானது.

24. தேஹாத்ம புத்தி வேண்டாம். ''அடே , கிருஷ்ணமுர்த்தி '' என்று யாரவது கத்தினால் உடம்பை திருப்பி யார் கூப்பிட்டது என்று பார்க்கிறோமே, அந்த உடம்புக்குள் '' அது'' இருக்கும் வரை கிருஷ்ணமூர்த்தி என்று தான் அதற்கு  பெயர். எல்லோரும் அப்படி கூப்பிட்டால் அது நாம் என்று நினைக்கிறோமே அது தான் தப்பு. இந்த உடல் அந்த பெயரை தனது என்று நம்பி அதை கடைசியில் இழந்து ''பாடி'' body ஆகிறது. ''நான் ''உண்மையில் இந்த உடலாகிய கிருஷ்ணமூர்த்தி இல்லை. எனக்கு யாரோ வைத்த ஒரு அடையாளம் தான்  இந்த கிருஷ்ணமூர்த்தி என்கிற பெயர். அது நான் இல்லை. நான் உண்மையில் பெயரில்லாத ஒரு ஆசாமி. உள்ளே இருப்பவன். ஆத்மா என்று அவனை ஞாபகம் வைத்துக்கொள்'' - என்கிறார் சங்கரர்.

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...