#ஸ்ரீலலிதாஸஹஸ்ரநாமம்நங்கநல்லூர் J K SIVAN
ஸ்லோகங்கள் 120-121 நாமங்கள் 595- 606
हृदयस्था रविप्रख्या त्रिकोणान्तर-दीपिका ।
दाक्षायणी दैत्यहन्त्री दक्षयज्ञ-विनाशिनी ॥ १२०॥
ஹ்ருதயஸ்தா, ரவிப்ரக்யா, த்ரிகோணாம்தர தீபிகா |
தாக்ஷாயணீ, தைத்யஹம்த்ரீ, தக்ஷயஜ்ஞ வினாஶினீ || 120 ||
दरान्दोलित-दीर्घाक्षी दर-हासोज्ज्वलन्-हासोज्ज्वलन्मुखी ।
गुरुमूर्तिर् गुणनिधिर् गोमाता गुहजन्मभूः ॥ १२१॥
Darandolita dirghakshi darahasojvalanmukhi
Gurumurtirgunanidhi r go mata guhajanmabhuh – 121
தராம்தோளித தீர்காக்ஷீ, தரஹாஸோஜ்ஜ்வலன்முகீ |
குருமூர்தி, குணநிதி கோமாதா, குஹஜன்மபூஃ || 121 ||
லலிதா ஸஹஸ்ரநாமம் - (595 -606 ) அர்த்தம்
*595* हृदयस्था ஹ்ருதயஸ்தா-
அம்பாள் இதயத்தில் வசிப்பவள். கதோபநிஷத் இதைத்தான் சொல்கிறது. (II.2.12) ''ஹ்ருதய வாஸினி'' என்கிறது. அதே உபநிஷத் இன்னொரு ஸ்லோகத்தில் (II.1.12) ‘ ப்ரம்மம் என்பது உன் கட்டைவிரல் அளவு தான். அதுவே உன் உடல் நடுவே, (இதயம்) காணப்படுகிறது என்கிறது. இடது பக்கம் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்யும் இதயம் அல்ல. இது வலது மார்பில் என்கிறார் ஸ்ரீ ரமணர். எக்ஸ்ரே, ஸ்கேன் எதிலும் தெரியாது. கண்ணில் படாத விஷயம்.
*596' रविप्रख्या ரவிப்ரக்யா -
பஞ்சதசியில் ரெண்டாவது கூடம் என்பது அனாஹத சக்ரத்தில் உள்ளது. அதற்கு சூரியகூடம் என்று பெயர்.
*597*त्रिकोणान्तर-दीपिका । த்ரிகோணாந்தர தீபிகா -
அம்பாள் மூலாதார முக்கோண சக்ரத்தில் நெருப்பு மாதிரி ஜொலிக்கிறாள். பஞ்சதசி சொல்லும் முதல் கூடமாகிய அக்னி கூடம் என்பது இதைத்தான். இப்படிப்பட்ட கூடங்களை தெரிந்து கொள்ள மூக பஞ்சதசி படிக்கலாம்.
*598* दाक्षायणी தாக்ஷாயணீ -
ஸ்ரீ லலிதாம்பாளின் ஒரு முக்யமான நாமம் தாக்ஷாயணி - தக்ஷன் மகள். சிவனை மணந்தவள் . அமாவாஸ்யா பவுர்ணமி தினங்களில் தர்ச பூர்ண மாச யஞங்கள் பண்ணுவார்கள். தாக்ஷாயண யஞம் என்று பெயர்.
*599* दैत्यहन्त्री தைத்யஹந்த்ரீ -
தைத்ய என்பது ராக்ஷஸர்களை குறிக்கும் சொல். கெடுதல், தீங்கு அதர்ம அக்கிரம செயல்களில் ஈடுபடுபவர்கள். அவர்களை நிர்மூலமாக அழிப்பவன், ஸம்ஹாரிப்பவள் என்று இந்த நாமம் சொல்கிறது.
*600* दक्षयज्ञ-विनाशिनी தக்ஷயஜ்ஞ வினாஶினீ -
தக்ஷர்கள் ரெண்டு பேர். ஒருவன் பெயர் தக்ஷ பிரஜாபதி. சர்வ சக்தி படைத்த அசுரன். மற்றொருவன் அவனது மானுட உருவம். அந்த ரெண்டு பேருடைய யாகத்தை அழித்தவள் பார்வதி. தனது கணவன் பரமேஸ்வரனை அவமதித்தவர்களை விடுவாளா உமை? யாகத்தில் மற்ற தேவர்கள், கடவுளர்க்கு அவிர்பாகம் கொடுத்து முக்கியமான சிவனை மதிக்காமல் அழைக்காமல் இருந்த தவறுக்கு தண்டனை கொடுத்தாள் . சக்தி மானான தக்ஷப்ரஜாபதி தான் சிவன் சாபத்தால் சாதாரண தக்ஷனாக பூமியில் பிறக்கிறான்.
*601* दरान्दोलित-दीर्घाक्षी தராம்தோளித தீர்காக்ஷீ, -
நீண்ட நயனங்களை கொண்டவள் அம்பாள் ஸ்ரீ லலிதை. கருவண்டுகளாக சுறுசுறு ப்பாக அலைபாயும் விழிகள். மூக பஞ்சதசி அம்பாளின் கண்ணழகை 101 ஸ்தோத்ரங்களில் சொல்கிறது. சௌந்தர்ய லஹரியும் அழகாக வர்ணிக்கிறது. அம்பாள் அதனால் தான் விசாலாக்ஷி.
*602* दर-हासोज्ज्वलन्-हासोज्ज्वलन्मुखी । தரஹாஸோஜ்ஜ்வலன்முகீ -
அம்பாள் புன்னகைக்கும்போது முகமே புடம்போட்டு தங்கமாக ஜொலிக்கிறது என்கிறார் ஹயக்ரீவர் அகஸ்தியரிடம். அந்த பார்வையின் ஜொலிப்பு கருணையும் பேரன்பும் தான்.
*603* गुरुमूर्तिर् குருமூர்த்தி, --
அம்பாள் தான் நமக்கெல்லாம் குரு. வழி நடத்துபவள் . ப்ரம்ம ஸ்வரூபத்தின் ஞான உபதேசம் சாதாரணமானதா?
*604* गुणनिधिर् குணநிதி -
நற்பண்புகள் நிறைந்த பொக்கிஷம் அம்பாள் என்கிறது இந்த நாமம். சரி தானே. இதை விட எப்படி சொல்ல முடியும்?
* 605 * गोमाता கோமாதா -
அருமையான நாமம். பசு எல்லோருக்கும் தாய். இணையற்ற அன்னை. காமதேனு. வேண்டியதை எல்லாம் வாரி வழங்கும் அம்பாள் கோமாதா என்ற சிறப்பு பெயரை கருணையால், நம்மிடம் அன்பால் பெற்ற பெயர் இது.
* 606 * गुहजन्मभूः குஹஜன்மபூ -
குஹ என்றால் ரகசிய, மறைந்து இருக்கும் என்று பொருள். ஜென்ம பூ என்றால் பிறந்த இடம். தேகத்தில் ஆத்மா உள்ள மறைந்திருப்பதை ப்ரஹதாரண்யக உபநிஷத் எப்படி கூறுகிறதென்றால்: (II.i.20) எப்படி அக்னியிலிருந்து ஒளிச் சுடர்கள் நாலா பக்கமும் பரவுகிறதோ அதுபோல் பரமாத்மாவின் சக்தி சகல சுடர்விடுகிறது. அந்த சக்தி தான் ஸ்ரீ லலிதாம்பிகா.
சக்தி பீடம்: லிங்க பைரவி. கோவை த்யான லிங்க ஆலயம்
யாராயிருந்தாலும், எந்த குலமோ , வர்ணமோ, சமூகமோ, ஆனாலும் பெண்மை தனக்கே உரிய இடத்தை அடைய அனுமதிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. ஆணாதிக்கம், என்கிறோமே அந்த ஆண் தன்மை மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வகையில் சமூகம் இருந்துவிட்டால், உண்ண தேவையான உணவு இருக்கும், ஆனால் நாம் வாழ வாழ்க்கை இருக்காது. கொஞ்சம் யோசிப்போம். ஓரு மரத்தின் வேர் ஆண் தன்மை என்று வைத்துக் கொள்வோம். மரத்தின் மலர்களும் கனிகளும் பெண் தன்மை என்றும் வைத்துக் கொள்வோம். வேரின் நோக்கமே மரத்தில் மலர்களையும் கனிகளையும் அள்ளி வழங்குவதாகத்தானே இருக்க வேண்டும். இது நடக்கவில்லை என்றால் வேர் இருப்பதே வீண்தானே.
இந்த உலகில் இருந்த எல்லா சிறந்த கலாச்சாரங்களிலும் பெண் தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளனர். தீவிரமாக ஆணாதிக்க கலாச்சாரங்களையும், மதங்களையும் நாடோடி பழங்குடியினர் உருவாக்கத் துவங்கிய பின்னர், பெண் தெய்வ வழிபாடு மெதுவாக அகற்றப்பட்டு இந்த உலகில் இருந்தே பொசுக்கப்பட்டது. பெண் தெய்வ வழிபாடு இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே நாடு நம் பாரதம்தான். இன்றும் தென்னிந்தியாவில், தங்களுக்கே உரிய தனித்த பெண் தெய்வ வழிபாடு இல்லாத கிராமங்கள் ஒன்றைக் கூட காண முடியாது. பெண்மையை கொண்டாடுவதில்தான் இந்த கலாச்சாரத்தின் அடிப்படையே அமைந்துள்ளது. ஆனால் மெதுவாக, பெண்மையை சுரண்டும் கலாச்சாரமாக இது பரிணமித்துள்ளது. எனவே சக்திமிக்க வடிவில் பெண்மையை நாம் மீட்டெடுக்க விரும்பினோம்.
லிங்க பைரவி தீவிரமான சக்தி மிக்க பெண்மையின் வடிவம். ஆனால் லிங்க வடிவில் பெண் சக்தியை வழிபடுவது அபூர்வம். ஒரு சில இடங்களிலும் கூட இம்முறை தனிப்பட்டவர்கள் பின்பற்றுவதாகவே இருந்திருக்கிறது. அநேகமாக இது போன்ற இடம், பொதுமக்கள் பங்கேற்புடன், முற்றிலும் மாறுபட்ட வகையில் கையாளப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.
இந்த உலகில் பெண்கள், ஒன்று பார்பி பொம்மையை போலவோ அல்லது ஆணை போலவோ மாற முயலும் சோகம் நிகழ்ந்து வருகிறது. அவர்களுக்கும் பொறாமை, ஆண்மைமிக்க லட்சியங்கள் என்று பல முட்டாள்தனங்கள் இருந்தாலும், பெண்மையின் அந்த ஜுவாலை அவர்களிடம் இல்லை. தான் நெருப்பைப் போல இருப்பதே ஒரு பெண் இந்த உலகிற்கு சேர்க்க வேண்டிய பங்கு. லிங்க பைரவி சிறு பொறி கொண்ட பெண்ணல்ல, ஒரு பெரும் தீயை தன்னில் கொண்டவள். பைரவி ஒரு பொம்மையை போலவோ, ஆணைப் போலவோ இல்லாமல் தீவிரமான உச்சபட்ச பெண்மையின் வடிவம்.
உங்கள் உச்சபட்ச நல்வாழ்வை நோக்கியே தியானலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. உலகியல் நலன்களையும் வழங்கும் தன்மை தியானலிங்கத்தின் உள்ளூர இருந்தாலும், உடல் நலம் மற்றும் பொருளியல் சார்ந்த நல்வாழ்வுக்கு பைரவி விரைந்து வருவாள். ஆனால் பைரவியிடமும் ஆன்மீக குணம் இணைந்தே இருக்கிறது. உங்களை நீங்கள் ஆழமாக பைரவியுடனான செயல் முறைகளில் ஈடுபடுத்திக் கொள்ளும்போது, நீங்கள் பொருள் தன்மையை நாடியே பைரவியை தேடி வந்திருந்தாலும், மெதுவாக ஆன்மீகம் நோக்கி உங்களை அழைத்துச் செல்வாள்.
எந்தவொரு சமுதாயத்திலும் பெண்மை அதன் இடத்தைக் கண்டுபிடிக்க அனுமதிப்பது மிகவும் முக்கியம்.ஆண்மையின் வெளிப்பாடு மிகவும் அதிகமாக இருந்தால், நாம் சாப்பிட போதுமானதாக இருக்கும், ஆனால் நமக்கு வாழ வாழ்க்கை இருக்காது.
லிங்க பைரவி என்பது மிகவும் சக்திவாய்ந்த, உக்கிரமான பெண் வடிவமாகும், இது ஒரு லிங்கமாக வழிபடப்படுகிறது, இது அரிதானது. அநேகமாக இது முதல் தடவையாக இந்த வகையான இடம் மக்கள் கண்டுள்ளனர் மற்றும் இந்த இடம் நிர்வாகிக்கப்படும் முறை முற்றிலும் வேறு விதமாக உள்ளது.
லிங்க பைரவி மிகவும் தீவிரமான பெண்மணி, சிறிது அளவு தீவிரம் அல்ல. அவள் ஒரு பொம்மை அல்ல, அவள் ஒரு மனிதன் அல்ல, அவள் பெண்மையின் மையம்.
தியானலிங்கம் அனைவருக்கும் ஒரு பொதுவான நல்வாழ்விற்காக உருவாக்கபட்டுள்ளது. உடனடி நல்வாழ்வும் அதில் நிரம்பியுள்ளது, ஆனால் உடல்நலம், செழிப்பு மற்றும் இந்த வகையான விஷயங்களை எதிர்பார்க்கும் மக்களுக்கு, லிங்க பைரவி மிகவும் பதிலளிக்கக்கூடியவராக இருப்பார். ஆனால் அவளுக்கு ஆன்மீக பரிமாணமும் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த ஆன்மீக செயல்முறைக்கு உங்களை ஆழமாக ஈடுபடுத்தி கொண்டால், நீங்கள் பொருள்தன்மை தேடி ஒரு இடத்திற்கு சென்றால் அந்த இடத்திற்கு லிங்க பைரவி உங்களை அழைத்து செல்வாள்.
உண்மையில் சத்குரு இதைச் சொன்னார் - “பைரவியின் அருளைப் பெறுபவர் கவலை, பயம், வறுமை தோல்வி ஆகியவற்றில் வாழத் தேவையில்லை. ஒருவர் லிங்க பைரவியின் அருளை பெற்றால், அவர் நல்வாழ்வு என்று எதை நினைக்கிறாரோ அனைத்தும் அவருக்கு வந்து சேரும். ”
உங்கள் இதயத்தில் ஆழமாக ஊடுருவி வரும் ஒரு ஜோடி ஒளிரும் கண்கள், அப்பால் ஒரு பரிமாணத்தை உணரும் ஒரு புகழ்பெற்ற பிரகாசமான மூன்றாம் கண், தேவைப்படும் அனைவருக்கும் எல்லையற்ற அருளைக் கொடுக்கும் கரங்கள் - லிங்க பைரவி என்பது பெண் தன்மையின் அளப்பரிய வெளிப்பாடு, வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முக்கோண வடிவத்தில் உள்ள தெய்வீக உறைவிடம்.
தேவி எட்டு அடி உயரமும், திடமான பாதரச மையத்துடன் கூடிய சக்திவாய்ந்த ஆற்றல் வடிவமாக சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. லிங்க பைரவியின் பிரதிஷ்டை பிராண பிரதிஷ்டை மூலம் நடத்தப்பட்டது. பிராண பிரதிஷ்டை ஒரு அரிய விசித்திரமான செயல்முறையாகும், இது வெறும் கல்லை ஒரு தெய்வமாக மாற்ற உயிர் சக்தியை பயன்படுத்துவது.
லிங்க பைரவி என்பது பெண்மையின் உச்சமாகவும் ஒரே நேரத்தில் உக்கிரமும் இரக்கமும் உள்ளவர். பிரபஞ்சத்தின் படைப்பு மற்றும் வளர்ச்சி அம்சங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர், பெண்மையின் உச்சபச்ச வெளிப்பாடு.
லிங்க பைரவியின் ஆற்றல் மனித அமைப்பில் மூன்று அடிப்படை சக்கரங்களை பலப்படுத்துகிறது; இதனால் ஒருவரின் உடல், மனம் மற்றும் ஆற்றல் அமைப்பை உறுதிப்படுத்துகிறது. வாழ்க்கையை தீவிரமாக வாழ முற்படும் அனைவருக்கும், தேவியின் இருப்பு மற்றும் அருள் உதவும். அவளுடைய அருளைச் செயல்பட ஒருவர் அனுமதித்தால், உடல் தன்மையை தாண்டி , ஆன்மீகத்தைத் தொடுவதற்கான ஏக்கம் இயல்பாகவே எழும். ஆன்மீக நல்வாழ்வை விரும்புவோருக்கு, கருணைமிக்க இந்த தெய்வம் பாதையில் உள்ள தடைகளை கடந்து மற்றும் அவற்றை உச்ச பக்ஷ விடுதலையின் அரங்கிற்கு எடுத்து செல்கிறது.
இந்த இடத்தில் தேவியின் அளப்பரிய அருளை பெற்று பக்தர்கள் பலன் பெற பல்வேறு அர்ப்பணைகள் உள்ளன. இங்கு ஒருவர் தன் வாழ்வின் எடுக்கும் ஒவ்வொரு படிக்கும், (பிறப்பு முதல் இறப்பு வரை) உதவும் விதமாக பல்வேறு தனித்துவமான சடங்குகள் உள்ளன. இந்த சடங்குகள் ஒருவரின் வாழ்க்கை அனுபவம் தெய்வீகத்தை தொடுவதை உறுதி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment