ஆதி சங்கரர் - நங்கநல்லூர் J K SIVAN
நிர்வாண தசகம் - பதிவு 3
ஏற்கனவே சொன்னாலும் விளக்கினாலும், அதே கேள்வி மீண்டும் கேட்கிறேன்.
''நிர்வாணம் என்றால் என்ன?''
'' இதென்ன கேள்வி. துணியில்லாமல் பறவை, மிருகம் போல் சுற்றுவது? ''
இப்படி சட்டென்று பதில் சொல்பவர்களே, அதல்ல இதன் உண்மை அர்த்தம். மறுபடியும் நினைவில் இதைக் கொள்வோம்.
உயர்ந்த ஞானிகளை பற்றி அறியும்போது இந்த வார்த்தை அடிக்கடி வரும். தன்னை மறந்த நிலை யில், ப்ரம்மத்துடன் ஒன்றாக இணைந்த ஜீவர்களின் சமாதி நிலையைக் குறிக்கும் சொல். புத்தர் நிர்வாணத்தை தேடி அடைந்தவர். அவர் துணி இல்லாமல் இருந்த ஒரு சிலையை, படத்தைக் கூட பார்க்க முடியாது. 'சமா' = அமைதி, சாந்தம், வேறுபாடில்லாத நிலை. 'தி' = புத்தி. வேறு வேறாக எதுவுமில்லை. எல்லாம் ஒன்றே! அதுவே கடவுள் என்கிறது இரண்டல்ல ஒன்று என போதிக்கும் அத்வைதம். ஒரே சக்திதான் இயக்குகிறது என்று சயன்ஸ் கூட சொல்கிறது.
ஒரு கதை சொல்கிறேன்.
ஒரு ஊரில், ஜென் குரு ஒருவர் அழகாக ஓவியம் வரைவார். அந்த ஊர் ராஜா, அவரை காட்டிலிருந்து எப்படியோ தனது அரண்மனைக்கு வரவழைத்தான்.
''சுவாமி, நீங்கள் ஒரு ஓவியம் வரைந்து அது என் அரண்மனையை பெருமையாக அலங்கரிக்க வேண்டும்" என்று கேட்டபோது அந்த துறவி,
"ராஜா எனக்கு ஒரு தனி அறை வேண்டும் '' என்கிறார்.
''ஆஹா இதோ என் அறையை எடுத்துக் கொள்ளுங்கள்''
சகல வசதிகளுடன் ஓர் அறையை அவருக்கு அளித்தான் ராஜா. மாதத்துக்கு ஒரு தடவை அவர் அறைக்குள் நுழைந்து ஓவியம் எவ்வாறு வரைந்திருக்கிறார் என்று ராஜா பார்க்கச் செல்வான் . சுவற்றில் ஒரு சின்னக் கீறல், கோடு கூட அவர் போட வரையவில்லை.
"சுவாமி, ஓவியம் எப்போது தயாராகும்?''
''இன்னும் மூணு வருஷம் என்கிட்டே வராதே''
மூன்று வருஷங்கள் பல்கலைக் கடித்துக்கொண்டு ராஜா ஜென் குருவின் ஓவியத்துக்காக ஆவலாக காத்திருந்தான். ஒருநாள் ஜென் குருவின் அறைக்குள் நுழைந்தான்.
மொட்டையாக ஒரு பாதையை ஏணி மாதிரி வரைந்திருந்தார் ஜென் குரு.
என்ன இது ஓவியமா? ஏதோ ஒரு பாதை. மொட்டையாக, ஆரம்பம் எங்கு என்றோ முடிவு எங்கு என்றோ ஒன்றுமே இல்லையே? இன்னும் ஒருவேளை ஜென் குரு ஓவியத்தை பூர்த்தி செய்ய வில்லையோ?
''சுவாமி, இது என்ன ஏதோ ஒரு நீண்ட பாதை மாதிரி இருக்கிறதே. இது எங்கே போகிறது? ''
ஜென் குரு புன்னகையோடு சுவற்றுப் பக்கம் சென்றார். பாதையை நெருங்கினார். அதில் நுழைந்தார். அப்பறம் அவரைக் காணோம்? அவர் புகட்டிய உபதேசம், நீதி, உண்மை என்ன?
பிரபஞ்சத்துடன் உயிர் ஒன்றிக் கலப்பதுதான் சமாதி நிலை. ஞானப் பாதையில் பயணம் செய்யும் ஒவ்வொருவரும் எட்ட நினைக்கும் நிலை, சமாதி நிலை. உடலிலிருந்து உயிர் ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும் என்பது நியதி. நாமாக அல்லது ஏதோ காரணமாக உயிரை உடலிலிருந்து பிரித்தால் அது தற்கொலை, கொலை, அல்லது விபத்து ஆகும். ஆனால் அது இல்லை சமாதி. உடலோடு மூச்சு நன்றாக இருந்து, உயிர் தானாகவே, மூச்சோடு கலந்து பிரம்மத்தை அடைவது தான் சமாதி. மஹா யோகிகளால் வேண்டும்போது இப்படி சமாதி நிலை அடைந்து திரும்பவும் முடியும். அவர்கள் இப்படி அடைவது மரணம் இல்லை. ஜீவனோடு சேர்ந்த சமாதி. ஜீவ சமாதி. அவர்கள் சமாதி அடைந்த உடலில் மீண்டும் அவர்களால் நினைத்தபோது திரும்ப வந்து பிரவேசிக்க முடியும் என்று நம்பிக்கை உண்மையை அடிப்படையாக கொண்டது. ராகவேந்திரர் மந்த்ராலயத்தில் 700 வருஷங்கள், மஹான்கள் அவரவர்கள் அதிஷ்டானத்தில் பல காலம் சூக்ஷ்ம சரீரத்தில் இருப்பதை நம்மால் உணரமுடியும். அதனால் தான் அவர்கள் பூத சரீரத்தை சமாதியாக பத்திரப்படுத்துவது. புதைப்பது. எரிப்பதில்லை. இந்த உடல் இல்லாவிட்டாலும் சூக்ஷ்ம சரீரத்தோடு அவர்களால் எங்கும் சஞ்சரிக்க முடியும். அவர்களை அதனால் தான் ஜீவன் முக்தர்கள் என்கிறோம்.
ஸ்ரீ ராகவேந்திரர், மஹா பெரியவர் போன்றவர்கள் இன்னும் பூத சரீரத்தில் இல்லாமல் சூக்ஷ்ம சரீரத்தோடு நம்மோடு இருப்பவர்கள்.
முக்தி, மோட்சம், நிர்வாணம் என்பதெல்லாம் இந்நிலையைக் குறிக்கும் வேறுவேறு வசீகரமான சொற்கள்.
ஆதி சங்கரரின் அத்வைத சாரத்தின் ஒரு துளியாக இந்த நிர்வாண தசகம் அமைந்திருக்கிறது. இன்று மற்ற மூன்று ஸ்லோகங்களை அறிவோம்.
न शुक्लं न कृष्णं न रक्तं न पीतं न पीनं न कुञ्जं न ह्रस्वं न दीर्घम ।
अरूपं तथा ज्योतिराकारकत्वात्तदेकोऽवशिष् टः शिवः केवलोऽहम ॥५॥
Na shuklam na krishnam na raktham na peetham, Na peenam na kubjam na hruswam na deergam,
Na roopam thada jyothirakarakathwath, Thadekovasishta Shiva kevaloham. 5
ந சுக்லம் ந க்ருஷ்ணம் ந ரக்தம் ந பீதம் ந பீநம் ந குஞ்ஜம் ந ஹ்ரஸ்வம் ந தீர்கம் |
அரூபம் ததா ஜ்யோதிராகாரகத்வாத்ததேகோ(அ)வசி ஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௫||
न शुक्लं न कृष्णं न रक्तं न पीतं न पीनं न कुञ्जं न ह्रस्वं न दीर्घम ।
अरूपं तथा ज्योतिराकारकत्वात्तदेकोऽवशिष्
Na shuklam na krishnam na raktham na peetham, Na peenam na kubjam na hruswam na deergam,
Na roopam thada jyothirakarakathwath, Thadekovasishta Shiva kevaloham. 5
ந சுக்லம் ந க்ருஷ்ணம் ந ரக்தம் ந பீதம் ந பீநம் ந குஞ்ஜம் ந ஹ்ரஸ்வம் ந தீர்கம் |
அரூபம் ததா ஜ்யோதிராகாரகத்வாத்ததேகோ(அ)வசி
எனக்கு என்று ஒரு நிறம் உண்டா என்று கேட்கலாம். நான் வெள்ளை நிறமோ, கருப்போ, சிவப்போ, மஞ்சளோ, எதுவும் இல்லையே. என் உயரம் பருமன் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நான் உயரம் இல்லை, குட்டை இல்லை. குண்டும் இல்லை ஒல்லியுமில்லை. ஆகவே எந்த ஒரு நிறமோ, உருவமோ இல்லாத ஆத்மா. ஒளி ஸ்வரூபம். நான் என்றும் சாதாரண சிவன். தூக்கத்திலும் மறையாதவன். எல்லாம் அழிந்தாலும் அழியாத நிலையானவன்.
न जाग्रन्न मे स्वप्नको वा सुपुप्तिर्न विश्वो न वा तैजसः प्राज्ञको वा ।
अविद्यात्मकत्वान्त्रयाणां तुरीयं तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥६॥
Na jagranna me swapnako vaa sushupthi,Ne viswo na vaa thaijasa pragnako vaa,
Avidhyathmakathwath trayanam thureeyam,Thadekovasishta Shiva kevaloham. 6
ந ஜாக்ரந்ந மே ஸ்வப்நகோ வா ஸுபுப்திர்ந விச்வோ ந வா தைஜஸ: ப்ராஜ்ஞகோ வா |
அவித்யாத்மகத்வாந்த்ரயாணாம் துரீயம் ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௬||
எனக்கு விழிப்பு நிலை என்று தனியாக எதுவும் இல்லை. கனவு காண்பவனும் அல்ல நான். தவன். எனக்கு தூக்கமும் கிடையாது. சுருக்கமாக சொன்னால் உங்கள் உலக வாழ்க்கையில் நீங்கள் காணும் உணர்வுகள் எதுவும் இல்லை நான். கனவில் தோன்றும் காட்சிகளில் என்னை காண முடியாது. எந்த உணர்ச்சியில் என்னை தேடாதே. நான் மேலே சொன்னதெல்லாம் அவித்யா என்பார்களே அது தான். நான் அதல்ல. உனக்கு புரியும்படி ஒரு விஷயம் சொல்கிறேன் கேள். விழிப்பு, கனவு, தூக்கம் என்ற வழக்கமான நீ அறிந்த மூன்றும் கடந்து இன்னுமொன்று நாலாவதாக இருக்கிறது. அதற்கு பெயர் துரீய நிலை. அதில் இருப்பவன் நான். என் பெயர் அங்கே சிவன். தூக்கத்தையும் மற்றதையும் தாண்டி நிற்பவன். எது அகன்றாலும் அகலாமல் தனித்து நிலையாக நிற்பவன்.
No comments:
Post a Comment