பாரப்பா பழனியப்பா, கேளப்பா சொல்லுவதை. நங்கநல்லூர் J K SIVAN
சுவாமி சிவானந்தா உபதேசிப்பதை படித்தேன் உடனே அதைச் சொல்லவேண்டும் என்று தோன்றியது.
ஒவ்வொரு மனிதனின் அறிவை, சமநிலையை, இயற்கையான அமைதியை தகர்ப்பது எது?
Kàmakrodha ca lobhaca dehe tiùñhanti taskara |jànaratnàpahàràya tasmàjjàgrata jàgrata ||
பேராசை, கோபம், இன்னும் இன்னும் வேண்டும் என்ற தேவையற்ற தேடுதல். விழித்துக் கொள் அப்பனே, போதும் இந்த விளையாட்டு. ஜாக்கிரதை.
janma dukhaü jarà duþkhaü jàyà dukhaü puna |
saüsàramàgaraü dukhaü tasmàjjàgrata jàgrata ||
பிறப்பு என்பதே வலியம் துயரமும் தருவது. போதாதற்கு முதுமை, வ்ருத்தாப்யாம் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம், துன்பம் கஷ்டம் மூட்டை மூட்டையாக சேர்ந்திருக்கும். இந்த சம்சார கடல் ரொம்ப ஆழமானது. நீந்திக் கரையேற பகவான் அருள் இல்லாவிட்டால் முடியாதப்பனே . விழித்துக் கொள். ஜாக்கிரதை.
màtà nàsti pità nàsti nàsti bandhu sahodara |
arthaü nàsti gçhaü nàsti tasmàjjàgrata jàgrata ||
அப்பனும் இல்லை, ஆத்தாளும் இல்லை சொந்தமுமில்லை, பந்தமுமில்லை உடன்பிறப் பெதுவு மில்லை, சொத்துமில்லை வீடு வாசலுமில்லை, ஏன் இல்லை ? இருந்தால் என்ன பயன்? என் கூடவே வருமா? அதனால் தான் வேண்டாம். விழித்துக் கொள் . ஜாக்கிரதை.
àayà badhyate loke karmaõà bahucintayà |
àyuþ kùãõaü na jànàti tasmàjjàgrata jàgrata ||
இந்த உலகத்தில் என்னை கட்டிப்போட்டுவைப்பது என் ஆசைகள் விருப்பங்கள், என் சொல்லும் செயலும் தான். அது தரும் எண்ணற்ற கவலைகள். இதெல்லாம் தான் உனக்கு என்று இருக்கும் கொஞ்ச காலத்தை துன்பமயமாக்குகிறது. வாழ்நாளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வீணாளாக்குகிறது. விழித்துக் கொள் . ஜாக்கிரதை.
yàda haqa karanà karànà hai phaqata sàdhukà kàma |
khalaka ko rastà dikhànà hai phaqata sadhu kà kàma ||
இதெல்லாம் உனக்கு அடிக்கடி திருப்பி திருப்பி உனக்கு கோபம் வரும்படியாக ஏன் சொல்கிறார்கள் ஞானிகள்? அவர்களுக்கு தெரியும் உன் ஞாபக சக்தியை, வைராக்கிரயம், திட சித்தத்தைப் பற்றி அதனால் தான். எது சரி, எது நீ செய்யவேண்டும் என்று வேறு யார் சொல்லப்போகிறார்கள்?
dina nãke bãte jàte hai |
ஒவொருநாளும் சீட்டு கிழிக்கிறாயே, நாள் எவ்வளவு சீக்கிரம்,வேகமாக ஓடுகிறது என்று உணர்ந்தாயா?
sumirana kara rã ràma nàma taja viùaya bhoga aura sarva kàma |
tere saïga cale nahi eka dàma jo hete hai so pàte hai ||
dina nãke bãte jàte hai ||
இதற்கு தான் ராம ராமா, சிவ சிவா என்று சொல்லிக்கொண்டே இருப்பது. உலக ஈர்ப்புகளிலிருந்து உன்னை மெதுவாக விடுவிக்கும். ஒரு தம்படி, அப்புறம் நயாபைசா, இப்போ ஒரு ரூபா கூட உனக்கு பை பை BYE BYE சொல்லிவிடும். கொடுத்தவனுக்கு தான் திரும்ப கிடைக்கும். தான தர்மம் செய், பிற உள்ளங்கள் வாழ்த்தட்டும்.
bhàã bandhu aura kuñuma parivàrà saba jãte jã ke nate haiü |
kisake ho tuma kaina tumhàrà kisake bala harinàma visàrà ||
dina nãke bãte jàte hai ||
உறவுகள் எல்லாமே வாழ்க்கை ரயிலில் சக பிரயாணிகள். ஆங்காங்கே சேர்ந்து ஆங்காங்கே பிரிபவர்கள்.சிலகாலம் மட்டுமே உறவாக நாம் இருக்கும் வரை, இறக்கும் வரை, கூட இருப்பவர்கள். என்றும் இருப்பவன் ராமனும், சிவனும், கிருஷ்ணனுமே,
lakha cauràsã bharama ke àye ba.De bhàga mànuùa tana pàte |
tisa para bhãrnàüha karã kamàã kira pàche pachatàte haiü ||
dina nãke bãte jàte hai ||
உனக்கு ஒரு உண்மை தெரியுமா மனிதா? இந்த மனிதப்பிறவி உனக்கு 84 லக்ஷம் பிறவிகளுக்குப் பிறகு கிடைத்தது என்று அறிவாயா? விடலாமா இதை? அடுத்ததும் இதுவாகவே கிடைப்பதற்காகவாவது நல்லதைச் சொல், நினை , செய், பகவானின் நாமத்தை மறவாதே.
jo tå làge viùaya vilàsà mårakha ka.Nse mçtyu kã pà÷à |
kyà dekhe ÷vàsa kã àsà gaye kera nahãü àte haiü ||
dina nãke bãte jàte hai || 4 ||
நிழலைத் துரத்திப் பிடிக்கும் விளையாட்டு போதும். இனி நிஜத்தை நாடு. தேடு. தனியாக வந்தபோதும் அழுதாய், இருக்கும்போதும் எதற்கெல்லாமோ அழுகிறாய், உன் மீது யார் பரிதாபம் பட்டார்கள்? அவனவன் அழுகை அவனுக்கு சமாளிக்க முடியவில்லையே. உன்னை யார் லக்ஷியம் பண்ணுவார்கள். பகவானைப் பாடு, முடியாவிட்டால் பிறர் பாடுவதைக் கேளேன். நேரம் போவதே தெரியாத அளவு ஆனந்தமாக இருப்பதை அனுபவம் சொல்லும் .
No comments:
Post a Comment