Wednesday, December 1, 2021

ADHI SANKARAR NIRVANA DHASAKAM


 ஆதி சங்கரர் -     நங்கநல்லூர் J K  SIVAN 


நிர்வாண தசகம் - பதிவு 2

சங்கரரைப்   பார்த்ததும் கோவிந்த பாதர் மனமகிழ்ந் தார்.  பரமேஸ்வரா,  எவனுடைய  வருகைக்காக  இந்த  உடலில் உயிர் தங்கியிருந்ததோ அது  பூரணமாக நிறைவேறி விட்டது.  இவனுக்கு நான் அறிந்தவற்றை உபதேசித்தால் என் கடமை பூரணமாகிவிடும்.''என்று எண்ணினார்.அதே நேரம் ஆதி சங்கரருக்கு ப்ரத்யக்ஷமாக  பகவானே  நேரில் குருவாக வந்து நிற்பது  போல் மனதில் உணர்வு. இரு  கரம் கூப்பி கடகடவென்று இந்த  நிர்வாண தசகம் ஸ்தோத்ரம் பாடுகிறார்.    
ஆதி  சங்கரரின் பஜ கோவிந்தம் அவர்  தனது குரு   கோவிந்தபாதர்  மேல்  குருவந்தனமாக பாடப்பட்டது என்பார்கள்.  இனி நிர்வாண தசகம் 2வது ஸ்லோகம்: 
न वर्णा न वर्णाश्रमाचारधर्मा न मे धारणाध्यानयोगादयोऽपि ।
अनात्माश्रयोऽहं ममाध्यासहानात्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥२॥

Na varna , na varnasramachara dharma, Na me dharana dhyana yogadhayopi,
Anathmasrayo aham mamadhya sahanath, Thadekovasishta Shiva kevaloham. 2

ந வர்ணா ந வர்ணாச்ரமாசாரதர்மா ந மே தாரணாத்யாநயோகாதயோ(அ)பி |
அநாத்மாச்ரயோ(அ)ஹம் மமாத்யாஸஹாநாத்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௨||

குருநாதா,  ஜாதி என்று மனிதர்கள் தங்களைப்  பிரித்துக் கொள்கிறார்களே நான் அதில் எந்த  ஜாதியிலும்  இல்லாதவன், வாழ்க்கையை  பல படிகளாக, பருவங்களாக காண்கிறார்கள் அதில் ஒன்றும் நான் இல்லை,  எனக்கும்  அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  நான் மனிதர்கள் விதிக்கும் விதிகளும்  இல்லை.  அதன் எந்த கட்டுப்பாடும் என்னை   பிணைக்காது. நான்  குணமும் இல்லை.  தியானமும் இல்லை, மந்திரமும் இல்லை, யோகவழிமுறையும் இல்லை. இந்த ''நான் '' ''எனது''  உணர்வு  தானே எல்லா குளறுபடிகளுக்கும்  காரணம். நான்  தான் அது ஒன்றுமே இல்லையே . அப்படியென்றால் நான் உண்மையில் யார் என்று கேள்வி தானே எழும்புகிறதல்லவா?
 நான் அந்த சிவன் எனும் ஆத்மன், தூக்கம் விழிப்பு கனவு எதிலும் உள்ளவன்.எல்லாவற்றையும் அகற்றினாலும் அப்புறமும்  கூட  எஞ்சி மிஞ்சி நிற்பவன்.
न माता पिता वा न देवा न लोका न वेदा न यज्ञा न तीर्थं ब्रुवन्ति ।
सुषुप्तौ निरस्तातिशून्यात्मकत्वात्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥३॥

Na matha pitha vaa na deva na loka,Na veda na yagna na theertham bruvanthi,
Sushupthou nirasthadhi soonyath makathwath,Thadekovasishta Shiva kevaloham. 3
ந மாதா பிதா வா ந தேவா ந லோகா ந வேதா ந யஜ்ஞா ந தீர்தம் ப்ருவந்தி |
ஸுஷுப்தௌ நிரஸ்தாதிசூந்யாத்மகத்வாத்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௩||

நான் எது அல்ல என்று மேலே ரெண்டு ஸ்லோகத்தில் சொன்ன ஆதி சங்கரர் மூன்றாவது ஸ்லோகத்தில் இன்னும் எதெல்லாம் கூட  தான்  இல்லை என்று விவரிக்கிறார்?.

நான் தாயும் இல்லை, தந்தையும் இல்லை. எனக்கும் அப்படி யாரும் இல்லை. நான் வானுலகில் வாழும் தேவதைகளோ தெய்வங்களோ இல்லை. அப்படி ஏதாவது பூமியில் காணப்பட்டால் நான் அதுவும் இல்லை. நான் வேதம் எதுவும் இல்லை. ஹோம குண்ட அக்னியோ யாக யஞமோ இல்லை. அப்படியானால் நான் ஒருவேளை புண்ய நதிகளோ என்று  நீங்கள் எண்ணினால் அதுவும் தவறு. நான் அதுவும் இல்லை. நான் தூக்கத்திலும் இருப்பவன். திரும்ப மூன்றாவது முறை சொல்கிறேன். நான் சிவன், ஆத்மன். எங்கும் எதிலும் உள்ளவன். எதை பிரித்து எடுத்தாலும் அதற்கு பின்னாலும் உள்ளவன்.
சங்கரர் மேலே சொன்னதெல்லாம் ப்ரஹதாரண்யக உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

न साङ्ख्यं न शैवं न तत्पाञ्चरात्रं न जैनं न मीमांसकादेर्मतं वा ।
विशिष्टानुभूत्या विशुद्धात्मकत्वात्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥४॥

Na sankhyam na saivam na thath pancha rathram, Na jainam , na meemamskader matham vaa,
Visishtanubhoothya vishudhath maka thwath, Thadekovasishta Shiva kevaloham. 4

ந ஸாங்க்யம் ந சைவம் ந தத்பாஞ்சராத்ரம் ந ஜைநம் ந மீமாம்ஸகாதேர்மதம் வா |
விசிஷ்டாநுபூத்யா விசுத்தாத்மகத்வாத்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௪||
இன்னும்  நான்   யார் இல்லை  என்று சொல்லிவிட்டால்  கடைசியில் நான்  யார்  என்பது தெரிந்துவிடும் அல்லவா. 
சாங்கிய கோட்பாடுகளா நீ என்று கேட்டால் ஹுஹும் நான் அதை சேர்ந்ததல்ல. அப்படியென்றால் சைவமோ? இல்லையே , அதுவும் இல்லை. வைணவர்கள் கடைபிடிக்கும் பாஞ்சராத்ரம் போல் இருக்கிறது என்று நினைத்தால் அதுவும் தவறு. சொல்லிவிடுகிறேன் நான் ஜைன மதமோ, மீமாம்ச சாஸ்திரமோ சொல்பவையும் இல்லை. ஏன் தெரியுமா இந்த ஆத்மா இருக்கிறதே அது பரிசுத்த தனித்த சத்யம், உண்மை. அது தான் நான். விழிப்பு தூக்கத்தில் கனவு சகலத்திலும் இருப்பவன். நான்   தான்  சிவன். எல்லாவற்றையும் அகற்றினாலும் அதன் பின்னும் நிலையாக இருப்பவன்.

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...