Tuesday, November 9, 2021

SRIMAN NARAYANEEYAM

 ஸ்ரீமந்  நாராயணீயம் -  நங்கநல்லூர்  J K SIVAN

96வது தசகம்

96.   ஞானோதயம் பிறக்கட்டும்.

பகவான் எங்கும் நிறைந்தவர். ஸர்வ வ்யாபி என்கிறோம். இருந்தாலும்  சில  க்ஷேத்ரங்களில் ஸ்தலங்களில் அவரை எளிதாக, சநதோஷமாக, பக்தி சிரத்தையோடு உணர விக்ரஹங்கள்  ஸ்தாபிக்கப்பட்டு  அந்த ஸாந்நித்யம்  நம்மை  ஊக்குவித்து,  பெரிதும் உதவுகிறது அல்லவா? பல வழிகள் உள்ளன அவனை அடைய.  இந்த தசகத்தில் நாராயண பட்டத்ரி நிறைய விஷயங்கள் சொல்கிறார்.

त्वं हि ब्रह्मैव साक्षात् परमुरुमहिमन्नक्षराणामकार-
स्तारो मन्त्रेषु राज्ञां मनुरसि मुनिषु त्वं भृगुर्नारदोऽपि ।
प्रह्लादो दानवानां पशुषु च सुरभि: पक्षिणां वैनतेयो
नागानामस्यनन्तस्सुरसरिदपि च स्रोतसां विश्वमूर्ते ॥१॥

tvaM hi brahmaiva saakshaat paramurumahimannaksharaaNaamakaaraH
taarO mantreShu raaj~naaM manurasi muniShu tvaM bhR^igurnaaradO(a)pi |
prahlaadO daanavaanaaM pashuShucha surabhiH pakshiNaaM vainateyO
naagaanaamasyanantaH surasaridapi cha srOtasaaM vishvamuurte || 1

த்வம் ஹி ப்³ரஹ்மைவ ஸாக்ஷாத் பரமுருமஹிமன்னக்ஷராணாமகார-
ஸ்தாரோ மந்த்ரேஷு ராஜ்ஞாம் மனுரஸி முனிஷு த்வம் ப்⁴ருகு³ர்னாரதோ³(அ)பி |
ப்ரஹ்லாதோ³ தா³னவானாம் பஶுஷு ச ஸுரபி⁴꞉ பக்ஷிணாம் வைனதேயோ
நாகா³னாமஸ்யனந்த꞉ ஸுரஸரித³பி ச ஸ்ரோதஸாம் விஶ்வமூர்தே || 96-1 ||

குருவாயூரா, உன்னை என்ன பேர் சொல்லி எப்படி அழைப்பேன்? நீ  எங்கும் நிறைந்த பரம்பொருள். ப்ரபஞ்ஜன். ஸ்ருஷ்டியில் ப்ரம்மா.  அக்ஷரங்களில்  முதல்  எழுது  ''அ''. மந்த்ரங்களில்  பிரணவம்  ''ஓம்''.   ராஜாக்கள் வரிசையில்  முதலில்  ஸ்வயம்பு மனு.  ரிஷிகளில்  நாரதரா, ப்ருகுவா , ரெண்டுமே. அசுரர்களில்  ப்ரஹ்லாதன். பசுக்களில்  காமதேனு. பக்ஷிகளில் கருடன். சர்ப்பங்களில் அனந்தன், ஆதிசேஷன். நதிகளில் கங்கை. நீ தான்  விவரிக்கமுடியாத ப்ரம்மம். எல்லாமே நீ தான்.

 ब्रह्मण्यानां बलिस्त्वं क्रतुषु च जपयज्ञोऽसि वीरेषु पार्थो
भक्तानामुद्धवस्त्वं बलमसि बलिनां धाम तेजस्विनां त्वम् ।
नास्त्यन्तस्त्वद्विभूतेर्विकसदतिशयं वस्तु सर्वं त्वमेव
त्वं जीवस्त्वं प्रधानं यदिह भवदृते तन्न किञ्चित् प्रपञ्चे ॥२॥

brahmaNyaanaaM balistvaM kratuShucha japayaj~nO(a)si viireShu paarthO
bhaktaanaamuddhavastvaM balamasi balinaaM dhaama tejasvinaaM tvam |
naastyantastvadvibhuutervikasadatishayaM vastu sarvaM tvameva
tvaM jiivastvaM pradhaanaM yadiha bhavadR^ite tanna ki~nchit prapa~nche || 2

ப்³ரஹ்மண்யானாம் ப³லிஸ்த்வம் க்ரதுஷு ச ஜபயஜ்ஞோ(அ)ஸி வீரேஷு பார்த²꞉
ப⁴க்தானாமுத்³த⁴வஸ்த்வம் ப³லமஸி ப³லினாம் தா⁴ம தேஜஸ்வினாம் த்வம் |
நாஸ்த்யந்தஸ்த்வத்³விபூ⁴தேர்விகஸத³திஶயம் வஸ்து ஸர்வம் த்வமேவ
த்வம் ஜீவஸ்த்வம் ப்ரதா⁴னம் யதி³ஹ ப⁴வத்³ருதே தன்ன கிஞ்சித்ப்ரபஞ்சே || 96-2 ||

தான தர்மிஷ்டர்களில்  நீ மஹாபலி. யோகங்களில்  ஜபயோகம்.  மஹா வீரர்களில் நீ தான் அர்ஜுனன். பக்தர்களில் நீ  உத்தவன்.  சக்தியில்  மஹா பலம், தைர்யம்,  கம்பீரம். உன் மஹிமையை, பெருமையை சொல்ல இயலாது. எழுத முடியாது. ஒரே  வரியில் சொல்லிவிடட்டுமா? எதெல்லாம் உசத்தியோ, எதெல்லாம்  அற்புதமோ, ஆனந்தமோ , இணையில்லாததோ,   ஜீவன் ப்ரக்ருதி அண்டம் பேரண்டம்  எல்லாமுமோ அது  நீயே.

धर्मं वर्णाश्रमाणां श्रुतिपथविहितं त्वत्परत्वेन भक्त्या
कुर्वन्तोऽन्तर्विरागे विकसति शनकै: सन्त्यजन्तो लभन्ते ।
सत्तास्फूर्तिप्रियत्वात्मकमखिलपदार्थेषु भिन्नेष्वभिन्नं
निर्मूलं विश्वमूलं परममहमिति त्वद्विबोधं विशुद्धम् ॥३॥

dharmaM varNaashramaaNaaM shrutipathavihitaM tvatparatvena bhaktyaa
kurvantO(a)ntarviraage vikasati shanakaiH santyajantO labhante |
sattaasphuurti priyatvaatmakamakhila padaartheShu bhinneShvabhinnaM
nirmuulaM vishvamuulaM paramamahamiti tvadvibOdhaM vishuddham || 3

த⁴ர்மம் வர்ணாஶ்ரமாணாம் ஶ்ருதிபத²விஹிதம் த்வத்பரத்வேன ப⁴க்த்யா
குர்வந்தோ(அ)ந்தர்விராகே³ விகஸதி ஶனகைஸ்ஸந்த்யஜந்தோ லப⁴ந்தே |
ஸத்தாஸ்பூ²ர்திப்ரியத்வாத்மகமகி²லபதா³ர்தே²ஷு பி⁴ன்னேஷ்வபி⁴ன்னம்
நிர்மூலம் விஶ்வமூலம் பரமமஹமிதி த்வத்³விபோ³த⁴ம் விஶுத்³த⁴ம் || 96-3 ||

கிருஷ்ணா,  நீ வகுத்த  நான்கு தொழில்முறை  பிரிவுகளில்,   உலக வாழ்க்கையின்   நாலு ஆஸ்ரமங்களில்,  பிரம்மச்சாரி, கிரஹஸ்தன், வானப்ரஸ்தன், சந்நியாசியாக,  பற்றற்ற  வாழ்வில், பக்தியில் பலனெதிர் பாரா கர்மத்தில், கடமையில் காணப் படுபவன் நீ.  ப்ரபஞ்ச  காரணன். ஸர்வ  ரக்ஷகன்.

 ज्ञानं कर्मापि भक्तिस्त्रितयमिह भवत्प्रापकं तत्र ताव-
न्निर्विण्णानामशेषे विषय इह भवेत् ज्ञानयोगेऽधिकार: ।
सक्तानां कर्मयोगस्त्वयि हि विनिहितो ये तु नात्यन्तसक्ता:
नाप्यत्यन्तं विरक्तास्त्वयि च धृतरसा भक्तियोगो ह्यमीषाम् ॥४॥

j~naanaM karmaapi bhaktisitratayamiha bhavatpraapakaM tatra taavat
nirviNNaanaamasheShe viShaya iha bhaved j~naanayOge(a)dhikaaraH |
saktaanaaM karmayOgastvayi hi vinihitO ye tu naatyantasaktaaH
naapyatyantaM viraktaastvayi cha dhR^itarasaa bhaktiyOgO hyamiiShaam ||4

ஜ்ஞானம் கர்மாபி ப⁴க்திஸ்த்ரிதயமிஹ ப⁴வத்ப்ராபகம் தத்ர தாவ-
ந்னிர்விண்ணானாமஶேஷே விஷய இஹ ப⁴வேத் ஜ்ஞானயோகே³(அ)தி⁴கார꞉ |
ஸக்தானாம் கர்மயோக³ஸ்த்வயி ஹி வினிஹிதோ யே து நாத்யந்தஸக்தா꞉
நாப்யத்யந்தம் விரக்தாஸ்த்வயி ச த்⁴ருதரஸா ப⁴க்தியோகோ³ ஹ்யமீஷாம் || 96-4 ||

கிருஷ்ணா, உன்னை  மூன்று பாதைகளின் வழி சென்று, ஞானயோகம் பக்தியோகம் கர்மயோகத்தின் முடிவாக காணலாம். பற்றுள்ளபோது யோகம் சித்தியாகாது.  ஸர்வ  சங்க பரித்யாகம் பண்ணி ப்ரம்மமாகிய உன்னை அறியலாம்.அடையலாம்.

 ज्ञानं त्वद्भक्ततां वा लघु सुकृतवशान्मर्त्यलोके लभन्ते
तस्मात्तत्रैव जन्म स्पृहयति भगवन् नाकगो नारको वा ।
आविष्टं मां तु दैवाद्भवजलनिधिपोतायिते मर्त्यदेहे
त्वं कृत्वा कर्णधारं गुरुमनुगुणवातायितस्तारयेथा: ॥५॥

j~naanaM tvadbhaktataaM vaa laghu sukR^itavashaanmartyalOke labhante
tasmaat tatraiva janma spR^ihayati bhagavannaakagO naarakO vaa |
aaviShTaM maaM tu daivaad bhavajalanidhi pOtaayite martya dehe
tvaM kR^itvaa karNadhaaraM gurumanuguNa vaataayitastaarayethaaH || 5

ஜ்ஞானம் த்வத்³ப⁴க்ததாம் வா லகு⁴ ஸுக்ருதவஶான்மர்த்யலோகே லப⁴ந்தே
தஸ்மாத்தத்ரைவ ஜன்ம ஸ்ப்ருஹயதி ப⁴க³வன் நாககோ³ நாரகோ வா |
ஆவிஷ்டம் மாம் து தை³வாத்³ப⁴வஜலனிதி⁴போதாயிதே மர்த்யதே³ஹே
த்வம் க்ருத்வா கர்ணதா⁴ரம் கு³ருமனுகு³ணவாதாயிதஸ்தாரயேதா²꞉ || 96-5 ||

கிருஷ்ணா,  இந்த பூவுலகில்  கலியுகத்தில்,   அவரவர் செய்யும்   நற் காரியங்களின் பலனாக  எளிதில் நாமசங்கீர்த்தனம், பாராயணங்கள்,  பிரார்த்தனைகள்  மூலம் உன்னை  பக்தியால்  உணரமுடிகிறது. அதனால்  இந்த புண்ய பூமியில் பிறக்க   தேவர்களும்  ஸ்வர்கத்தில் , நரகத்தில் உள்ளவர்களும் கூட  விரும்புவார்கள்.   நான் செய்த  புண்யத்தின் பயனாக  நானும் இந்த மானுடப் பிறவி எடுத்துள்ளேன். அதுவே  இந்த பவசாகரத்தை கடக்கும் தோணி.   என் ஆசார்யன், குரு தான்  அதை இயக்கும்  படகோட்டி.  நீ தான் படகு  ஆற்றை கடக்க  உதவும்  சாதகமான காற்று . 

 अव्यक्तं मार्गयन्त: श्रुतिभिरपि नयै: केवलज्ञानलुब्धा:
क्लिश्यन्तेऽतीव सिद्धिं बहुतरजनुषामन्त एवाप्नुवन्ति ।
दूरस्थ: कर्मयोगोऽपि च परमफले नन्वयं भक्तियोग-
स्त्वामूलादेव हृद्यस्त्वरितमयि भवत्प्रापको वर्धतां मे ॥६॥

avyaktaM maargayantaH shrutibhirapi nayaiH kevalaj~naana lubdhaaH
klishyante(a)tiiva siddhiM bahutarajanuShaamanta evaapnuvanti |
duurasthaH karmayOgO(a)pi cha paramaphale nanvayaM bhaktiyOgastvaamuulaadeva
hR^idyastvaritamayi bhavatpraapakO vardhataaM me || 6

அவ்யக்தம் மார்க³யந்த꞉ ஶ்ருதிபி⁴ரபி நயை꞉ கேவலஜ்ஞானலுப்³தா⁴꞉
க்லிஶ்யந்தே(அ)தீவ ஸித்³தி⁴ம் ப³ஹுதரஜனுஷாமந்த ஏவாப்னுவந்தி |
தூ³ரஸ்த²꞉ கர்மயோகோ³(அ)பி ச பரமப²லே நன்வயம் ப⁴க்தியோக³-
ஸ்த்வாமூலாதே³வ ஹ்ருத்³யஸ்த்வரிதமயி ப⁴வத்ப்ராபகோ வர்த⁴தாம் மே || 96-6 ||

குருவாயூரா ,  ஞான யோகத்தை தேர்ந்தெடுத்து உன்னை தேடுவோர்  உருவமற்ற  ப்ரம்மமாகிய  உன்னை அடைய,  வேதங்கள், ந்யாய  சாஸ்திரங்கள்,  கடின உழைப்பு, மூலம்   பல பிறவிகள் எடுத்து  கடைசியில் உன்னை அடைகிறார்கள்.   கர்ம யோகம்   முடிவான உன்னை அடைய  வெகு தூர பயணம் செய்ய வைக்கிறது.   பக்தியோகம், ஆஹா,  இவற்றை எல்லாம் விட  எளிமையானது, சுலபமானது. ஆரம்பத்திலிருந்தே உன்னை  கைக்கெட்டிய  தூரத்தில் பிடிக்கிறது.   ஆகவே  உன் மேல் உண்மையான, முழு பக்தி எனக்கு  மேலும் மேலும் வளரவேண்டும். 

ज्ञानायैवातियत्नं मुनिरपवदते ब्रह्मतत्त्वं तु शृण्वन्
गाढं त्वत्पादभक्तिं शरणमयति यस्तस्य मुक्ति: कराग्रे ।
त्वद्ध्यानेऽपीह तुल्या पुनरसुकरता चित्तचाञ्चल्यहेतो-
रभ्यासादाशु शक्यं तदपि वशयितुं त्वत्कृपाचारुताभ्याम् ॥७॥

j~naanaayaivaatiyatnaM munirapavadate brahmatattvantu shR^iNvan
gaaDhaM tvatpaadabhaktiM sharaNamayati yastasya muktiH karaagre |
tvaddhyaane(a)piihatulyaa punarasukarataa chittachaa~nchalya hetOH
abhyaasaadaashu shakyaM tadapi vashayituM tvatkR^ipaa chaarutaabhyaam || 7

ஜ்ஞானாயைவாதியத்னம் முனிரபவத³தே ப்³ரஹ்மதத்த்வம் து ஶ்ருண்வன்
கா³ட⁴ம் த்வத்பாத³ப⁴க்திம் ஶரணமயதி யஸ்தஸ்ய முக்தி꞉ கராக்³ரே |
த்வத்³த்⁴யானே(அ)பீஹ துல்யா புனரஸுகரதா சித்தசாஞ்சல்யஹேதோ-
ரப்⁴யாஸாதா³ஶு ஶக்யம் தத³பி வஶயிதும் த்வத்க்ருபாசாருதாப்⁴யாம் || 96-7 ||

கிருஷ்ணா,  வேதவியாசர்  சொல்வது சரி தான்.   தனியாக உட்கார்ந்து கொண்டு  நிறைய  முயற்சிகள் செய்து   ஞானத்தை  பெறுவது  என்பது  கடினம் தான்.   
ஆசார்யன், குருவைப் பணிந்து  வேத சாஸ்திரங்கள் கற்று, பிரம்மத்தை அறிந்து, உன்னை தஞ்சம் அடைபவனுக்கு  மோக்ஷ சாதகம் எளிது. உன்னை தியானிப்பது,  எளிதில் பலன் தராமல்  மனம்  வேறு திசை நோக்கி இழுக்கும். அதை பயிற்சி மூலம் ஸ்திரப்படுத்த வேண்டும். உன்  திவ்ய  ரூபம்,  திவ்ய  நாமம் , உன் அருள்  அதற்கு பெரிதும் உதவுகிறது.

 निर्विण्ण: कर्ममार्गे खलु विषमतमे त्वत्कथादौ च गाढं
जातश्रद्धोऽपि कामानयि भुवनपते नैव शक्नोमि हातुम् ।
तद्भूयो निश्चयेन त्वयि निहितमना दोषबुद्ध्या भजंस्तान्

nirviNNaH karmamaarge khalu viShamatame tvatkathaadau cha gaaDhaM
jaatashraddhO(a)pi kaamaanayi bhuvanapate naiva shaknOmi haatum |
tadbhuuyO nishchayena tvayi nihitamanaa dOShabuddhyaa bhajamstaan
puShNiiyaaM bhaktimeva tvayi hR^idayagate mankshu nankshyanti sangaaH || 8

நிர்விண்ண꞉ கர்மமார்கே³ க²லு விஷமதமே த்வத்கதா²தௌ³ ச கா³ட⁴ம்
ஜாதஶ்ரத்³தோ⁴(அ)பி காமானயி பு⁴வனபதே நைவ ஶக்னோமி ஹாதும் |
தத்³பூ⁴யோ நிஶ்சயேன த்வயி நிஹிதமனா தோ³ஷபு³த்³த்⁴யா ப⁴ஜம்ஸ்தான்
புஷ்ணீயாம் ப⁴க்திமேவ த்வயி ஹ்ருத³யக³தே மங்க்ஷு நங்க்ஷ்யந்தி ஸங்கா³꞉ || 96-8 ||

வாதபுரீசா, வேதங்கள் யாகங்கள் எல்லாம்  கடின வழியாக  எனக்கு தோன்றுவதால் அவற்றில் அதிக நாட்டம் எனக்கு இல்லை.  உன் திவ்ய சரித்திரம் கேட்பதில்  என்  நம்பிக்கை பெருகுகிறது. அப்படியும் எனது ஆசா பாசங்கள் குறையாவிட்டால், அவற்றுக்கு அடிமையாகி விடுவேன். ஆனாலும் அவற்றால் விளையும்  தீங்கை  கொஞ்சம் கொஞ்சமாக  உணர்ந்து மெதுவாக  உன் மேல் பக்தியை  வளர்த்துக் கொள்வேன். இப்படி நீ  என் மனதில் ஹ்ருதயத்தில் குடிகொண்டுவிட்டால் அப்புறம்  இந்த பற்றுகள் எல்லாம் தானாகவே விலகிவிடுமே .நசித்துப்போகுமே. 

 कश्चित् क्लेशार्जितार्थक्षयविमलमतिर्नुद्यमानो जनौघै:
प्रागेवं प्राह विप्रो न खलु मम जन: कालकर्मग्रहा वा।
चेतो मे दु:खहेतुस्तदिह गुणगणं भावयत्सर्वकारी-
त्युक्त्वा शान्तो गतस्त्वां मम च कुरु विभो तादृशी चित्तशान्तिम् ॥९॥

kashchit kleshaarjitaarthakshaya vimalamatirnudyamaanO janaughaiH
praagevaM praahaviprO na khalu mama janaH kaalakarmagrahaavaa |
chetO me duHkhahetustadiha guNagaNaM bhaavayat sarvakaariityuktvaa
shaantO gatastvaaM mama cha kuru vibhO taadR^ishiiM chittashaantim || 9

கஶ்சித்க்லேஶார்ஜிதார்த²க்ஷயவிமலமதிர்னுத்³யமானோ ஜனௌகை⁴꞉
ப்ராகே³வம் ப்ராஹ விப்ரோ ந க²லு மம ஜன꞉ காலகர்மக்³ரஹா வா |
சேதோ மே து³꞉க²ஹேதுஸ்ததி³ஹ கு³ணக³ணம் பா⁴வயத்ஸர்வகாரீ-
த்யுக்த்வா ஶாந்தோ க³தஸ்த்வாம் மம ச குரு விபோ⁴ தாத்³ருஶீ சித்தஶாந்திம் || 96-9 ||

குருவாயூரப்பா,  ஒரு பிராமணன் கதை சொல்கிறேன் கேள்.   நிறைய  செல்வம் சேர்த்தான். கடினமாக உழைத்தான்.  இருந்தும்  எல்லாம் அவனை விட்டு சென்றுவிட்டது.  ஏமாற்றம், கோபம், வெறுப்புணர்ச்சி அவனை ஆட்கொண்டது.  எல்லோரும்  இகழ்ந்தார்கள். பிறகு தான்  உண்மை புலப்பட்டது. 
  மனம் பரிசுத்தம் அடைந்தது.  எது சரியானது, தவறான வழி என்று உணர்ந்தான். தனது துன்பத்துக்கு  காரணம்  மற்றவர்களோ,  காலமோ, கர்மாவோ, க்ரஹங்களோ இல்லை, அவன் மனமே  அவன் எதிரி. அதில் வளரும் குணங்கள். அவற்றை  உதறித்தள்ளி  விட்டு  ஆத்மாவை உணர ஆரம்பித்தான்.  விடாமுயற்சியால்  உன் திருவடிகளை அடைந்தான்.   எனக்கும் அந்த மாதிரி மன அமைதி வேண்டுமப்பா.

 ऐल: प्रागुर्वशीं प्रत्यतिविवशमना: सेवमानश्चिरं तां
गाढं निर्विद्य भूयो युवतिसुखमिदं क्षुद्रमेवेति गायन् ।
त्वद्भक्तिं प्राप्य पूर्ण: सुखतरमचरत्तद्वदुद्धूतसङ्गं
भक्तोत्तंसं क्रिया मां पवनपुरपते हन्त मे रुन्धि रोगान् ॥१०॥

ailaHpraagurvashiiM pratyativivashamanaaHsevamaanashchiraM taaM
gaaDhaM nirvidya bhuuyO yuvatisukhamidaM kshudrameveti gaayan |
tvadbhaktiM praapya puurNaH sukhataramacharat tadvaduddhuuya sangaM
bhaktOttamsaM kriyaa maaM pavanapurapate hanta me rundhi rOgaan || 10

ஐல꞉ ப்ராகு³ர்வஶீம் ப்ரத்யதிவிவஶமனா꞉ ஸேவமானஶ்சிரம் தாம்
கா³ட⁴ம் நிர்வித்³ய பூ⁴யோ யுவதிஸுக²மித³ம் க்ஷுத்³ரமேவேதி கா³யன் |
த்வத்³ப⁴க்திம் ப்ராப்ய பூர்ண꞉ ஸுக²தரமசரத்தத்³வது³த்³தூ⁴தஸங்க³ம்
ப⁴க்தோத்தம்ஸம் க்ரியா மாம் பவனபுரபதே ஹந்த மே ருந்தி⁴ ரோகா³ன் || 96-10 ||

எண்டே  குருவாயூரப்பா,  உனக்கு ஞாபகப் படுத்தட்டுமா?   ஒரு காலத்தில் ராஜா  புரூரவஸ் இருந்தானே, அவன் என்ன செய்தான் ? தேவலோக நடன ராணி ஊர்வசி மீது மையல் கொண்டான்  அவன் காதல் வாழ்க்கை  வெகுகாலம் தொடர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக  அவன்  ஆசை நேசம் பாசம் எல்லாம்  தளர்ந்தது.  இதெல்லாம்  வீண் என ஞானோதயம் புலப்பட்டது. உன்னை விடாமல்  பிடித்துக் கொள்ள மனம்  உறுதிப்பட்டது. பந்தங்கள் பற்றுக்கள் எல்லாவற்றிலிருந்து விடுதலை பெற்றான்.   எனக்கும்  அது போல் ஆசாபாசங்கள் விலகவேண்டும்.  உன் சிறந்த பக்தர்களில் நானும் ஒருவன் என்ற  பெருமை எனக்கு சேரவேண்டும். என் நோய் தீர்த்து மனம் உன்னை நாட செய்வாயா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...