ஒரு அன்பு இதயம் -- நங்கநல்லூர் J K SIVAN
தீபாவளிக்கும் மழைக்கும் நெருங்கிய சம்பந்தம். ஐப்பசி அடைமழை என்பார்கள். அப்போது தான் தீபாவளி வரும் . பட்டாசுக்கு தண்ணீர் கிட்டவே வரக்கூடாது. அதுவும் தீபாவளியின் இன்னொரு கண். இந்த வருஷம் அதிகம் டபாஸ் , பட்டாசு சத்தமே கேட்கவில்லை. எத்தனையோ கட்டு திட்டங்கள். கோரோனோ இன்னும் போகமாட்டேன் என்று அடம்பிடித்து இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. எல்லாமே யானை விலை குதிரை விலை வைக்கும்போது என்ன தீபாவளி எப்படி தீவாளி. மனம் நிறைந்து ஒருவரை வாழ்த்தினால் அதுவே சிறந்த தீபாவளி. இதோ பிடியுங்கள் என் மனமார்ந்த அன்பு நிறைந்த, பரிசுத்த தீபாவளி வாழ்த்துக்கள், பெரிசுகளுக்கு சாஷ்டாங்க தீபாவளி நமஸ்காரங்கள். பெரிசு எனும்போது என்னிலும் 14 வயது மூத்த ஒரு அக்கா ஆசிர்வாதம் அனைவருக்கும் அளிக்கிறார். இதோ பாருங்கள் அவர் எழுதியிருப்பதை:
என் பெய ஹம்சம். என் வயது 97.மதுரையில் என் மகள் ரஞ்சனி வெங்கட்ராமனுடன் வசிக்கிறேன் உடம்பு தள்ளாமைதான்.இருப்பினும் நான் திரு ஜேகேசிவன் என்ற நண்பர் எழுதியஐந்தாம் வேதம் தெவிட்டாத விட்டலா ரமே ராமே மனோரமே போன்ற புத்தங்கள் மற்றும் இப்போது அவர் எழுதிக்கொண்டுவரும் நாராயணீயம் இன்று 89வது தசகம் தமிழ் விளக்கத்துடன் கூடியதை படித்து வருகிறேன்.என் வயதுக்கு ராமாயணம் மகாபாரதம் ஏற்கனவே பலமுறை படித்திருந்தாலும் வாழ்க்கையில் நல்ல விஷயங்களை திரும்ப திரும்பப்படித்து நற்கதி அடையவே நான் படிக்கிறேன்.எனவேஅனைவரும் ஆன்மீக விஷயங்களைதெரிந்துகொள்ளவும் அதன்படி வாழ்க்கையில் கடைபிடித்து செவ்வனே செழிப்புற வாழ இம்மாதிரி புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.அனைவருக்கும் என் தீபாவளி
வாழ்த்துக்கள்
.கிருஷ்ணார்ப்பண சேவா டிரஸ்டில் ஈடுபட்டு ஆன்மீகப் பணிபுரியும் அனைவருக்கும்என் ஆசீர்வாதங்கள்.
நாம் ஹம்சம் போல் நீண்ட காலம் வாழ கிருஷ்ணன் அருள் புரிந்தால் எத்தனையோ புத்தகங்களை இலவசமாக அனைவருக்கும் தர அவன் அருளவேண்டும். இதுவே என் வேண்டுகோள். வாழ்ந்தால் மட்டும் போதாது, வாழும் ஒவ்வொரு கணமும் அன்பும் பண்பும் நிறைந்ததாக ''ஹம்சமாக '' அமைய வேண்டும். படிக்க எழுத சக்தி வேண்டும்.
No comments:
Post a Comment