ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - நங்கநல்லூர் J K SIVAN
ஸ்லோகங்கள் 105-107 நாமங்கள் 509-523
मेदोनिष्ठा मधुप्रीताबन्धिन्यादि-समन्विता ।
दध्यन्नासक्त-हृदयाकाकिनी-रूप-
Medhonishta maduprita bandinyadi samanvita
Dadyannasakta hrudaya kakini rupadharini – 105
மேதோனிஷ்டா, மதுப்ரீதா, பந்தின்யாதி ஸமன்விதா |
தத்யன்னாஸக்த ஹ்றுதயா, காகினீ ரூபதாரிணி - 105
मूलाधाराम्बुजारूढा पञ्च-वक्त्
अङ्कुशादि -प्रहरणा वरदादि-निषेविता ॥ १०६॥
Muladharanbujarudha
Ankushadi praharana varadadi nishevita – 106
மூலா தாராம்புஜாரூடா, பம்சவக்த்ரா,
அம்குஶாதி ப்ரஹரணா, வரதாதி னிஷேவிதா || 106 ||
मुद्गौदनासक्त-चित्ता साकिन्यम्
आज्ञा-चक्राब्ज-निलया शुक्लवर्
Mudgaodanasaktachitta
Aagynachakrabja nilaya shuklavarna shadanana – 107
முத்கௌதனாஸக்த சித்தா, ஸாகின்யம்பாஸ்வரூபிணீ |
ஆஜ்ஞா சக்ராப்ஜனிலயா, ஶுக்லவர்ணா, ஷடானனா || 107 ||
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (509-523) அர்த்தம்
* 509* मेदोनिष्ठा -மேதோனிஷ்டா --
சருமம் , ரத்தம், சதை, அதற்கப்புறம் நாலாவது கொழுப்பு சத்து சேர்ந்தது இந்த தேகம் என்று உணர்த்துகிறது இந்த நாமம். உடலில் நாலாவது சக்ரம். காமினி உடலின் கொழுப்பு சத்தை கண்காணிக்கிறாள்.
*510* मधुप्रीता -மதுப்ரீதா,-
மது என்றால் தேன். காகினிக்கு தேன் ரொம்ப பிடிக்கும். மது என்றால் போதை தரும் பானத்தையும் குறிக்கும். அதைப்பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை. அதில் ஊறவைத்த காய் கனிகள் காகினிக்கு நைவேத்யமாக படைப்பார்கள். நெய் , தேன், பால், சிறிது கலந்து அர்பணிப்பார்கள்.
*511* बन्धिन्यादिसमन्विता -பந்தின்யாதி ஸமன்விதா --
காகினிக்கு அருகில் பந்தினி, பத்ரகாளி, மஹாமாயா, போன்ற ஆறு உதவியாளர்கள் எப்போதும் சூழ்ந்திருப்பார்கள்.
*512* दध्यन्नासक्तहृदया -தத்யன்னாஸக்த ஹ்ருதயா--
காகினிக்கு என்னென்ன பிடிக்கும் என்று அவளது நாமமே சொல்கிறது அல்லவா? இப்போது அவளுக்கு தயிர் சாதம் ரொம்ப பிடிக்கும் என்கிறது இந்த நாமம்.
*513* काकिनीरूपधारिणी - காகினீ ரூபதாரிணி --
அசப்பில் காகினி மாதிரியே தோற்றமளிப்பவள் என்று ஒரு நாமம். காகினி ஸ்வாதிஷ்டான சக்ரத்தின் அதிபதி.
* 514 * मूलाधाराम्बुजारूढा -மூலா தாராம்புஜாரூடா--
மூலாதார கமலத்தின் மேல் வீற்றிருப்பவள் அம்பாள். ஆதாரமான சக்தி பீடம்.
* 515 * पञ्चवक्त्रा -பஞ்சவக்த்ரா,-
ஐந்து முகம் கொண்டவள். அவள் பெயர் இப்போது ஸாகினி. இது ஐந்தாவது சக்ரம். இந்த யந்த்ரத்திற்கு பஞ்சவக்த்ரம் என்று பெயர். இந்த ஐந்து முக யந்திரத்தை சிவ பெருமான் ராவணேஸ்வரனுக்கு அவன் தவத்தை மெச்சி பரிசாக கொடுத்தார் என்று ராமாயணத்தில் வரும்.
* 516 * अस्थिसंस्थिता - ஸ்திஸம்ஸ்திதா --
இது வரை ஐந்து விஷயங்களாக, அதாவது, எலும்புகள். சருமம், ரத்தம், சதை, கொழுப்பு சத்து எல்லாம் பார்த்தோம், இனி உடலில் அடுத்தது எலும்புகள். அம்பாள் உடலை இவ்வாறு உறுதியுள்ள தாக செய்கிறாள்.
* 517 * अङ्कुशादिप्रहरणा - அங்குஶாதி ப்ரஹரணா ---
மற்ற ஆயுதங்களோடு அங்குசத்தையும் கரத்தில் ஏந்தியவள். ஸாகினி அங்குசதாரி என்று இந்த நாமம் சொல்கிறது. அவளது நான்கு கரங்களில் அங்குசத்தை தவிர, புத்தகம், தாமரை மலர் ஏந்தியவளாக, ஒரு கரம் சின் முத்திரை காட்டுகிறது.சில நூல்கள் அவள் சூலதாரி, தண்டம் ஏந்தி யவள் , கமண்டலம், ருத்திராக்ஷ மாலை ஏந்தியவளாக காட்டுகிறது.
* 518 * वरदादिनिषेविता -வரதாதி நிஷேவிதா--
ஸாகினியை ச்சுற்றி வரதா ஸ்ரீ, ஸந்தா , ஸரஸ்வதி என்ற யோகினிகள் புடை சூழ்ந்திருக்கிறார்கள் என்கிறது இந்த நாமம்.
* 519 * मुद्गौदनासक्तचित्ता -முத்கௌதனாஸக்த சித்தா --
பாசி பருப்பு கலந்த பருப்பு சாதம் பிரியமாக உண்பவள் ஸாகினி என்கிறார் ஹயக்ரீவர் இந்த நாமம் மூலம். ஒரு சின்ன ரெஸிபி கொடுக்கிறேன்.
வேகவைத்த பாசி பருப்பு, (பயத்தம் பருப்பு) வெல்லம் ,தேங்காய் துருவல், ஜீரகம் கொஞ்சம், நெய் , பால். இதெல்லாம் தான் பாகும் பருப்பும், தெளி தேனும் பாலும் கலந்து தருவது போல் இருக்கிற தல்லவா? இது அம்பாளுக்கு பிடித்த நைவேத்தியம். செய்து அர்ப்பணியுங்கள், நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு வேண்டியதை தருவாள்.
* 520 * साकिन्यम्बास्वरूपिणी -ஸாகின்யம்பாஸ்வரூபிணீ --
ஸாகினி அம்பாள் ஸ்வரூபம் என்கிறது இந்த நாமம். மூலாதார சக்ர நாயகி அவள்.
* 521 *आज्ञाचक्राब्जनिलया -ஆஜ்ஞா சக்ராப்ஜனிலயா-
ஆக்ஞா சக்ரத்தில் குடி கொண்டு ஆள்பவள் என்று ஒரு நாமம். ஆஞ்ஞா சக்ர தாமரையில் காண்ப வள் அம்பாள்.
* 522 * शुक्लवर्णा -,ஶுக்லவர்ணா --
வெள்ளை வெளேர் என்று ஆடை உடுத்துபவள் என்கிறது. சரஸ்வதி தேவி ஞாபகம் வருகிறதா? அவளே இவள். இவளே அவள்.
* 523 * षडानना -, ஷடானனா --
ஆறுமுகம் கொண்டவன் முருகன் மட்டும் அல்ல. அம்பாளும் தான் என்கிறார் ஹயக்ரீவர். ஷடானனா என்றால் ஆறு வதனங்கள் கொண்டவள் என்று அர்த்தம்.
சக்தி பீடம் : சாமுண்டீஸ்வரி , மைசூர்
மைசூர் ரஸம் தெரியும். ஜம்மென்று தலைப்பாகை கட்டிய மைசூர் மஹாராஜா என்ற பெயர் எல்லோருக்கும் தெரியும். மைசூர் என்ற கர்நாடக தேசத்தை ஆண்டவர். ஆனால் அந்த அரசருக்கும் ரொம்ப காலத்திற்கு முன்னால் அந்த சிம்மாசனத்தில் உட்கார்ந்தவன் அரசன் என்பதைக் காட்டிலும் அசுரன் என்று சொல்லலாம். அவன் பெயர் மஹிஷாசுரன். எருமைத் தலையன் . அந்த ஊர் அதனால் எருமைத்தலை ஊர் மஹிசூரு என்று இருந்தது. எல்லோரும் வேகமாக பேசி பேசி அதை மைசூர் ஆக்கி விட்டார்கள். மஹிஷாஸுரன் எல்லோரையும் வாட்டி வதைத்தான். அவன் கொடுமை தாங்கமுடியாமல் தவித்தனர். அவனை ஆண்கள் யாரும் கொல்ல முடியாது என்பதால் விஷயம் பார்வதி தேவி வரை போயிற்று. அவள் சாமுண்டேஸ்வரியாக உருவெடுத்து அவனை தவமிருந்து கொன்றாள். அவனோடு மோதுவதற்கு முன் அவள் ஒன்பது நாள் தவம் இருந்ததது தான் தான் நவராத்ரி. பத்தாவது நாள் அவள் மஹிஷாசுரனை கொன்றது விஜய தசமி. சாமுண்டேஸ்வரி குன்று, 16 அடி உயரம் 25 அடி நீளம் பெரிய நந்தி ஆகியவை இன்றும் அநேக கோடி யாத்ரிகர்களை மகிழ்விக்கிறது. மைசூர் தசரா எனும் நவராத்ரி பண்டிகைக்கு பேர் போனது. உலகமே திரண்டு வரும்.
பெங்களூருக்கு விமான போக்குவரத்து வசதி இருக்கிறது. அங்கிருந்து மைசூருக்கு நிறைய பஸ் கார் வசதி உண்டு. 140 கி.மீ. தூரம்.
No comments:
Post a Comment