ஆதி சங்கரர் - நங்கநல்லூர் J K SIVAN
சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் -- ''ம '' விசேஷம்
मन्दाकिनीसलिलचन्दनचर्चिताय
नन्दीश्वरप्रमथनाथमहेश्वराय ।
मन्दारपुष्पबहुपुष्पसुपूजिताय
तस्मै म_काराय नमः शिवाय ॥२॥
மந்தாகினி சலில சந்தன சர்சிதாய
நந்தீச்வர பிரமதநாத மகேஸ்வராய
மந்தார முக்ய பஹுபுஷ்ப சுபூஜிதாய
தஸ்மை மகாராய நமசிவாய
வடக்கே ஓடும் புண்ய நதிகளில் ஒன்று மந்தாகினி. அதன் நீரால் பரமேஸ்வரனுக்கு அபிஷேகம் செய்யப் படுகிறது. வாசமிகு சந்தனம் ஏன் உடலெங்கும் பூசிக்கொள்கிறான்.? சிவன் அக்னி. எப்போது உஷ்ணம். உள்ளே ஹாலஹால விஷம் பாய்லர் வெந்நீர் போல் கொதிக்கிறது. ஆத்ம ஞானாக்னியின் உஷ்ணம். ருத்ரன் என்பதால் எப்போதும் ரௌத்ரம். ஆகவே அவனை குளிர்ச்சிப் படுத்த தலையின் மேல் பனி உருகிய கங்கை, சில்லென்று வாழைத்தண்டு போல் நாகம், உஷ்ணத்தை குறைக்கும் ருத்ராக்ஷம். குளிர்ந்த பால் போல் வெள்ளையான சந்திரன், உஷ்ணத்தை உறியும் விபூதி. சாம்பல். குளிர்ந்த பனி மலை வாசம், உடலெங்கும் சந்தனம். சதா அபிஷேகம். சிவன் நந்தி வாஹனன். பைசாசங்களும் சிவகணங்களும் அவன் உதவியாளர்கள். ஸம்ஹார மூர்த்தி அல்லவா? மந்தார புஷ்பம், தும்பை கொன்றை பாரிஜாதம் போன்ற மலர்களால் வில்வ இதழ்களால் பூஜிக்கும்போது மகிழ்ந்து அருள்பவன்.
பரமேஸ்வரா பஞ்சாக்ஷரத்தில் ரெண்டாம் அக்ஷரம் '' ம'' எனும் எழுத்தால் உன்னை வணங்குகிறேன் பரமேஸ்வரா அருள் புரிவாய்.
இந்த ப்ரபஞ்சம் உருவாவதற்கு முன்பு எங்கும் வெறுமை, அசைவற்ற நிலை. நிசப்தம். இருள்.ஓம் என்ற சப்தம் உயிரூட்டியது. அசைவு தந்தது, பிறகு உயிர்கள் தோண்றியது.ஓம் நமசிவாய என்பதில் ஓம் எனும் பிரணவ சப்தம், ஜீவ நாடி. நம என்பது வணங்குவது.சிவாய: சிவபெருமான் என்று வெளியே தேடும் பரமேஸ்வரனைத் தவிர உள்ளே ஒளி வீசும் ஆத்ம சக்தி
ஓம் நமசிவாய என்பது பஞ்சபூத தத்வம்.
ந: பூமி, ப்ரித்வி மண்
ம: ஜலம். அப்பு, நீர்.
சி : அக்னி. நெருப்பு , தீ.
வா: வாயு.
ய : ஆகாசம்.
No comments:
Post a Comment