ஆதி சங்கரர் - நங்கநல்லூர் J K SIVAN
சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்
எனக்கு முதலில் இந்த ஐந்து ஸ்லோகங்களில் ஒரு பிடிப்பு உண்டானது MSS பாடிய ராக மாலிகையைக் கேட்ட பிறகு. எத்தனை தடவை கேட்டிருக்கிறேன் என்று கணக்கில்லை. நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம் தான் சமஸ்க்ரிதத்தில் பஞ்சாக்ஷரம். ந ம சி வா ய எனும் ஒவ்வொரு எழுததுக்கும் லக்ஷம் பக்கங்கள் அர்த்தம் எழுதுவார்கள் இருக்கிறார்கள். ஒரே ஒரு முறை மனம் திறந்து அதை கண்மூடி ரமித்து உச்சரித்தால் கண்ணில் நீர் பெருகும். பக்தி பிரவாகம் அது.
என் தந்தை J K ஐயர் இதை தினமும் பாராயணம் பண்ணி சின்ன வயதில் கேட்டதால் தான் ஒரு ஈர்ப்பு உண்டாயிற்று. குழந்தைகள் பெற்றோரிடமிருந்து தான் நல்லது கெட்டது எல்லாமே கற்றுக் கொள்கிறார்கள். அவசியம் உங்கள் குழந்தைகளுக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுங்கள்.
அர்த்தம் புரியாமல், தெரியாமல் இசையில் மயங்கிய காலம் அது. அப்புறம் MSS பாடியதை கேட்டதும் இன்னும் அதிகம் ஆர்வம், இனம் புரியாத ஒரு பக்தி என்னுள்ளே ஏற்பட்டது. அடிக்கடி இதை கேட்கவேண்டும், மனப்பாடம் செய்ய வேண்டும் என்று ஒரு அதிர்வு ஏற்படும். அதே போல் கோவில்களில் சென்று பாட வேண்டும் என்றும் தோன்றும். அப்படியே செய்தேன். அப்புறம் தான் பசு மாடு நிழலில் அமர்ந்து விச்ராந்தியாக அசை போட்டது. இது வரை புரியாதது தெளிவாக புரிந்தது. ஆனந்தம் தந்தது.
அடேயப்பா, எத்தனை கைகள் இருந்தாலும் போதாது. ஆதி சங்கரரை வணங்க. 32 வயதில் இத்தனை பக்தி ஸ்லோகங்களா. கடவுளே மனிதனாக தோன்றினதால் தான் இது சாத்தியமோ? நம்மால் ''மனிதனென்பவன் தெய்வமாகலாம்'' பாட்டு மட்டும் தான் பாட முடிகிறது. அப்படி ஆவதற்கு பல ஜென்மங்கள் தேவை போல் தோன்றுகிறது.''
நமது தேகம் ஐந்து பூதங்களால் உண்டானது. இந்த பஞ்சாக்ஷர மந்திரத்தின் ஐந்து அக்ஷரங்களும் அதை நினைவு படுத்துவன . ந: மண் எனும் நிலம். ம: நீர். சி: அக்னி; வா: வாயு: ய: ஆகாசம். இந்த ஐந்தும் தான் மஹாதேவன்.
ஓம் நமசிவாய என்பது பஞ்சாக்ஷரம் எனும் ஐந்தெழுத்து மந்திரம். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு ஸ்லோகம் பாடுகிறார் சங்கரர்.

முதலில் ந:
नागेन्द्रहाराय त्रिलोचनाय
भस्माङ्गरागाय महेश्वराय ।
नित्याय शुद्धाय दिगम्बराय
तस्मै न_काराय नमः शिवाय ॥१॥
भस्माङ्गरागाय महेश्वराय ।
नित्याय शुद्धाय दिगम्बराय
तस्मै न_काराय नमः शिवाय ॥१॥
நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை நகாராய நமசிவாய
என்னப்பா பரமேஸ்வரா, உன்னுடைய விசித்திர ஆபரணங்களை, விஷம் கக்கும் நாகங்களை, எவனும் கொள்ளை அடிக்கமாட்டான் . அறுத்துக்கொண்டு ஓடமாட்டான். அருகில் வந்தால் நாலுபேருடன் தான் வரவேண்டும். அப்போது தான் அவனை தூக்கிச் செல்லமுடியும். விஷம் கக்கும் நாகங்களை ஆபரணமாக பூண்டவனே, கழுத்தில் மாலை, தலையில் ப்ரோச். கையில் வாகு வளையம், கங்கணம், பூணலாக கூட மெல்லிய பாம்பு. முக்கண்ணா , மூன்றாவதை நீ திறந்தால் அவ்வளவு தான். அதன் பார்வை பட்ட அனைத்தும் சாம்பல்.. உன் பவழம் போல் மேனியில் பால் வெண்ணீறு. ஆதி அந்தமில்லா அநாதி நாதா, பரிசுத்தத்தின் உருவமே , சாஸ்வதனே, நான்கு திசைகள் தான் உன் ஆடைகளா? சிவனே, பரமேஸ்வரனே, ந என்ற எழுத்தில் மிளிர்பவனே. உன்னை வணங்குகிறேன்.

மீதி அக்ஷரங்கள் ஒவ்வொன்றாக. ஐந்து நாள் ஐந்து பதிவாக.
No comments:
Post a Comment