ஸ்ரீ ராமன் பெருமை - நங்கநல்லூர் J K சிவன்
இதில் ராமர் த்ரேதா யுகத்தில் அதாவது 7000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இக்ஷ்வாகு குல மன்னன். ஸ்ரீ கிருஷ்ணன் யாதவகுல திலகன். 5000 வருஷங்களுக்கு முன்பு இருந்தவன்.
ராமாயணத்தை ஆதி காவ்யமாக இயற்றியது ஸ்ரீ வால்மீகி ரிஷி. ஸ்ரீ கிருஷ்ணன் சரித்திரத்தை ஸ்ரீமத் பாகவதமாக இயற்றியது வேதவியாஸ மகரிஷி.
ராமன் கதை எத்தனை தரம் கேட்டாலும் அலுக்கவே அலுக்காது. எத்தனையோ பேர் அவரவர் வழியில் சொன்னபோதும், பாடியபோதும், எழுதியபோதும் புத்தம் புதிதாகவே மனதில் இதமாக பதிகிறது.
ஒரு தரம் நாரத ரிஷி வால்மீகி முனிவர் ஆஸ்ரமத்துக்கு செல்கிறார். அவரை வரவேற்று உபசரித்து வால்மீகி ஒரு கேள்வி கேட்கிறார்.
நாரத மகரிஷி, எங்காவது இந்த பிரபஞ்சத்தில் நான் சொல்லும் இந்த 16 கல்யாண குணங்களை கொண்ட ஒருவரை நீங்கள் கண்டதுண்டா, கேள்விப்பட்டதுண்டா? என்கிறார். அந்த 16 கல்யாண குணங்கள்:
1. சௌசீல்யம் எல்லோரையும் சமமாக பாவிக்கும் குணமுடையவன்..
2. வீர்யவான் - பலம் மிகுந்தவன்
3. தர்மஞன் - எப்போதும் தர்மத்தை விடாமல் பின்பற்றியவன்.
4. க்ரிதஞன் . மற்றவரை மதிப்பவன்
5.சத்யவாக்யன் - எப்போதும் சத்யத்தையே, உண்மையே பேசுபவன்..
6. த்ருட வ்ரதன் - உறுதியான மனம் கொண்டவன்.
7. சாரித்ரேனசா கோயுக்தன் - சிறந்த ஒழுக்கம் படைத்தவன்.உதாரண புருஷன்.
6. த்ருட வ்ரதன் - உறுதியான மனம் கொண்டவன்.
7. சாரித்ரேனசா கோயுக்தன் - சிறந்த ஒழுக்கம் படைத்தவன்.உதாரண புருஷன்.
8. ஸர்வ பூதேஷு ஹிதன் - எல்லா உயிர்க்கும் நண்பன், பாசமுள்ளவன்.
9. வித்வான் - சகலமும் அறிந்தவன்..
10.சமர்த்தன் - சாமர்த்தியசாலி. முடியாததொன்றில்லை.
11. ப்ரிய தர்ஸனன் - அழகன். கண்ணுக்கினியன். .
12. ஆத்மவான்- பரமாத்மா. .
13. ஜித க்ரோதன் - கோபம் ஆத்திரம் வென்றவன். மனதை கட்டுப்படுத்தியவன்.
14. த்யுதிமான் :- ஒளிபடைத்தவன். .
15. அனசூயகன் - எதன்மேலும் எவர் மேலும் அசூயை பொறாமை கொள்ளாதவன்.
9. வித்வான் - சகலமும் அறிந்தவன்..
10.சமர்த்தன் - சாமர்த்தியசாலி. முடியாததொன்றில்லை.
11. ப்ரிய தர்ஸனன் - அழகன். கண்ணுக்கினியன். .
12. ஆத்மவான்- பரமாத்மா. .
13. ஜித க்ரோதன் - கோபம் ஆத்திரம் வென்றவன். மனதை கட்டுப்படுத்தியவன்.
14. த்யுதிமான் :- ஒளிபடைத்தவன். .
15. அனசூயகன் - எதன்மேலும் எவர் மேலும் அசூயை பொறாமை கொள்ளாதவன்.
16. பீப்யதி தேவன்: பிறரை அரவணைத்து காப்பவன்.
வால்மீகி முனிவரே, நீங்கள் சொன்ன இந்த பதினாறு அற்புத குணங்களையும் கொண்ட ஒருவரை திரிலோகமும் சுற்றும் எனக்கு தெரியும். அவர் பெயர் ஸ்ரீ ராமன்.
வால்மீகி ராமனைபற்றி அறிந்து வணங்கி போற்றி இயற்றிய வரிகள் இவை:
श्री राघवम् दशरथात्मजम् अप्रमेयम् (ShrI rAghavam daSharathAtmajam aprameyam)
सीता पतिम् रघुकुलन्वया रत्ना दीपाम् (sItA patim raghukulAnvaya ratna dIpAm)
आजानु बाहुम् अरविन्द दलायताक्शम् (AjAnu bAhum aravinda dalAyatAksham)
रामम् निशाछर विनाशकरम् नमामि (rAmam nishAchara vinAshakaram namAmi)
ஸ்ரீ ராகவன் தசாரதாத்மஜம் அப்ரமேயம்,
சீதாபதிம் ரகுகுலன்வயா ரத்ன தீபாம்
ஆஜாநுபாஹும் அரவிந்த தளாயதாக்ஷம்
ராமம் நிஸாசர விநாசகரம் நமாமி.
விண்ணும் மண்ணும் போற்றும் ஸ்ரீ ராமனை, ரகுகுல திலகனை, ராகவனை, பதினாயிரம் யானை பலம் கொண்ட மஹா வீரம், பத்து ரதங்களை ஒரேசமயம் இயக்கக்கூடிய தசரத சக்ரவர்த்தியின் ஜேஷ்ட குமாரனை, மஹா லக்ஷ்மி பிராட்டியாரே சீதையாக அவதரித்து, ஜனகமஹாராஜா மகளாக ஸ்வயம்வரத்தில் சிவதனுசை வென்றதால் மாலையிட்டு மனைவியாக கொண்டவனை , சீதாபதியை , ஒளிவீசும் இணையற்ற தீபமாக ரகு குலத்துக்கு பெருமை சேர்த்தவனை, முழங்கால் வரை நீண்ட சக்தி வாய்ந்த கரங்களை உடையவனை, தாமரை இதழ் போன்ற மென்மையான, கருணைமிக்க கண்களை உடையவனை, இரவில் நடமாடும், பலம் பொருந்திய ராக்ஷஸர்களை அழிக்க அவதரித்தவனை, ஸ்ரீ ராமனை நமஸ்கரிக்கிறேன் ''
அற்புதமாக அமைந்துள்ள இந்த ஸ்லோகத்தை என் சிறுவயதில் என் தந்தை தினமும் ஒரு த்யான ஸ்லோகமாக உரக்க சொல்வதை கேட்டு மனதில் பதிந்துவிட்டது.
ராமாயணத்தில் லவனும் குசனும், தங்கள் தந்தை ராமனை அயோத்தியில் கண்டு பாடுவது போல் ஒரு காட்சி லவ குசா என்ற தெலுங்கு படத்தில் பல வருஷங்களுக்கு முன்பு பார்த்தேன். அற்புதமாக கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் இசையமைத்து பி.லீலா பி.சுசீலா இருவரும் சேர்ந்து பாடியது இன்னும் காதில் ஒலிக்கிறது.
https://youtu.be/v_8HWo0bPCk
No comments:
Post a Comment