ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - நங்கநல்லூர் J K SIVAN
ஸ்லோகங்கள்: 91-92 நாமங்கள் 424 - 435
तत्त्वासना तत्त्वमयी पञ्च-कोशान्तर-स्थिता ।
निःसीम-महिमा नित्य-यौवना मदशालिनी ॥ 91॥
அருணாசுரன் என்கிற ராக்ஷஸன் பிரம்மாவிடம் வாங்கிய வரத்தின் படி அவனை நாலு கால், ரெண்டு கால் கொண்ட எதாலும் கொல்ல முடியாது. ரொம்ப யோசித்து வரம் கேட்டிருக்கிறான் ராக்ஷஸன். அந்த தைரியத்தில் தேவர்களை கொடுமை செய்தான். அம்பாள் தவமிருக்கிறாள். தேவர்கள் தொல்லை தீர அருணாசுரனை வதைக்க அவள் தன்னுடலிலிருந்து ஆயிரக்கணக்கான ஆறுகால் வண்டுகளை வெளியேற்றுகிறாள். அவை ஒரு சேர பறந்து அருணாசுரனை தாக்கி அவன் அழிகின்றான். ப்ரமரம் என்றால் தேனீ போன்ற கொட்டுகிற வண்டு. ப்ரம்மராம்பா --- தேன் வண்டுகளின் தாய் என்று அம்பாள் பெயர் . மல்லிகார்ஜுன சுவாமி என்கிற இந்த சிவன் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒன்று என்பதால் சிறந்த சிவாலயம். சதியின் உடலை தூக்கிக்கொண்டு சிவன் ஆடியபோது அவள் உடல் துண்டுகளாகி கழுத்து விழுந்த இடம் ஸ்ரீ சைலம்.
तत्त्वासना तत्त्वमयी पञ्च-कोशान्तर-स्थिता ।
निःसीम-महिमा नित्य-यौवना मदशालिनी ॥ 91॥
Tatwasana Tat Twam Ayee Pancha kosandara sthitha
Nissema mahima Nithya youawana Madha shalini
Nissema mahima Nithya youawana Madha shalini
தத்வாஸநா தத்வமயீ பஞ்சகோசாந்தர ஸ்திதா |
நிஸ்ஸீம மஹிமா நித்யயௌவநா மதசாலிநீ || 91
मदघूर्णित-रक्ताक्षी मदपाटल-गण्डभूः ।
मदघूर्णित-रक्ताक्षी मदपाटल-गण्डभूः ।
चन्दन-द्रव-दिग्धाङ्गी चाम्पेय-कुसुम-प्रिया ॥ ९२॥
Madha goornitha rakthakshi Madha patala khandaboo
Chandana drava dhigdhangi Champeya kusuma priya
மதகூர்ணித ரக்தாக்ஷீ மதபாடல கண்டபூ: |
சந்தந த்ரவ திக்தாங்கீ சாம்பேய குஸுமப்ரியா || 92
லலிதா ஸஹஸ்ரநாமம் - (424-435) அர்த்தம்
*424* तत्त्वासना -தத்வாஸநா --

ஸ்ரீ அம்பாளின் இந்த நாமம் அவளது பீடம், அவள் அமரும் ஆசனம் தத்துவங்கள் தான் என்கிறது. 24 மற்றும் 36 தத்துவங்கள் உள்ளன. அவை அனைத்தும் அம்பாளின் பீடங்கள். தத்துவங்களின் செயல் பாடுகள் மனிதன் உள்ளேயும் வெளியிலுமாகத் தான். புத்தி, மனம், பிரஞை, அகம்பாவம் இவை உள்ளே அந்தகரண தத்துவங்கள். புலன்கள், பூதங்கள், ஞானேந்த்ரிய கர்மேந்திரியங்கள் வெளியே பஹிர்முக தத்துவங்களாக செயல்படுகிறது. அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவள் அம்பாள் ஸ்ரீ லலிதை.
*425* तत् -தத் --
*425* तत् -தத் --
பிரம்மத்தை மூன்று குணங்களாக பிரித்து அறிகிறோம். ஓம் தத் ஸத் -- என்பன தான் அவை. தத் என்பதை பிரம்மமாக உபாசிப்பது உணர்வது ஞானம்.
*426* त्वं -த்வம் --
*426* त्वं -த்வம் --
அம்பாள் யார், நீ தான் என்று அவளையே உணர்த்துவது. த்வம் இங்கே ப்ரம்மம். கேனோபநிஷத் (I.4) சொல்வது போல் பிரம்மம் என்பது எல்லா தெரிந்த தெரியாத வஸ்துக்களின் ஒட்டு மொத்தத்தி லிருந்து வேறு பட்டது. ''நான்'' '' அது'' என்ற உண்மையின் ஐக்கியம் தான் ஆத்மாவை உணர்தல். நீ தான் அது ''தத் த்வம் அஸி '' நீ அதுவாகவே இருக்கிறாய் என்பது உயர்ந்த தத்வ வேதாந்த மஹா வாக்கியம்.
*427* अयी - அயீ --
*427* अयी - அயீ --
தாயாக இருப்பவள். ஆயி என்று தமிழில் அம்மாவை சகோதரியை கூப்பிடும் வழக்கம் சில குடும்பங்களில் உண்டு. மரியாதையை காட்டிலும் அன்பு அதிகமாக பரிமளிக்கும் வார்த்தை ஆயி. புனிதமானது.
* 428 * पञ्चकोशान्तरस्थिता - பஞ்சகோசாந்தர ஸ்திதா --
பஞ்ச கோசம் எனும் ஐந்து உறைகளில் உள்ளே இருப்பவள் ஸ்ரீ அம்பாள். இந்த ஐந்து உறைகள் நமது உடலைச் சூழ்ந்த பிண்ட சரீரம். உள்ளே ஆன்மாவை மூன்று வித , ஒன்றுடன் ஒன்று இணைந்த உறைகளுள்ளன. அவை தானாகவேயும் சேர்ந்தும் ஆத்மாவுடன் பிணைந்தவை. அவற்றை நாம் ஸ்தூல சரீரம், காரண சரீரம் , சூக்ஷ்ம சரீரம் என்கிறோம். ஸ்தூல சரீரம் அதாவது நமது உடல், அழியக்கூடியது. சூக்ஷ்ம சரீரம் இடைப்பட்டது. வெகுகாலம் நிலைப்பது. காரண சரீரம் கடைசிவரை உடலோடு பிணைந்து ஜீவனின் ஆன்மா மோக்ஷம் அடையும்வரை நிலைப்பது. இந்த ஐந்து உறைகளை தான் பஞ்சகோசம் என்பது.
வெங்காயத்தின் தோலை உரிக்க ஒன்றின் உள்ளே ஒன்றாக மேலும் மேலும் தோல்கள் தெரிவது போல் ஒன்றின் உள்ளே ஒன்றாக இருப்பதும் அவற்றின் நடுவிலே இருப்பது தான் ஆனந்தமய கோசம், அதை சுற்றி மேலே படர்ந்தவை விஞ்ஞான மய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், அன்னமய கோசம் என்பன. அன்னமயகோசம் தான் நம் உடலை பசியிலிருந்து காக்க உணவைத்தேட வைத்து ருசியில் மாட்டிக்கொள்வது. நவாவரண போஜன செய்யும் போது ஒன்பதாவது ஆவரணத்திற்கு அப்பறம் பஞ்சபஞ்சிகா பூஜை என்று ஒன்றுபற்றி நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஸ்ரீ சக்ரத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக பஞ்சதேவிகளை உபாசிப்பார்கள்.
*429* निःसीममहिमा -நிஸ்ஸீம மஹிமா ---

எல்லையற்ற பெருமையை, புகழை உடையவள் அம்பாள் ஸ்ரீ லலிதை. திக்கெட்டும் வானிலும் பூமியிலும் நிறைந்து காண்பது ப்ரம்மம் ஆகிய அம்பாள். அளக்கமுடியாதவள், எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவள்.
*430* नित्ययौवना -நித்யயௌவநா --
*430* नित्ययौवना -நித்யயௌவநா --
அவ்வளவு இவ்வளவு என்று சொல்லமுடியாதபடி என்றும் இளமையோடு எவ்வளவோ அழகானவள் ஸ்ரீ லலிதாம்பிகை என்கிறார் ஹயக்ரீவர். ஆமாம் என்று நாம் அப்படியே ஒப்புக்கொள்கிறோம்.
*431* मदशालिनी -மதசாலிநீ -
*431* मदशालिनी -மதசாலிநீ -
அளவற்ற ஆனந்தமே ஒரு அழகு, ஒளியை தரும். என்னய்யா முகம் பளிச்சென்று டால் அடிக்குது என்ன சந்தோஷ விஷயம் என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்ளும்போது ஸ்ரீ அம்பாளின் முகம், அளவற்ற ஆனந்தத்தை, சதானந்தத்தை, ப்ரம்மானந்தை துய்த்துக் கொண்டிருக் கும்போது எப்படி ஒளிவீசும்.? எண்ணங்கள் ஒருமித்து மறைந்து ஆனந்தமாக உறையும் போது ஏற்படும் மகிழ்ச்சி தான் இந்த பிரபாவம். எண்ணமெல்லாம் சிவனே. சிவனே சிவை. எல்லாமே ஒருமித்த ப்ரம்மம்.
*432* मदघूर्णितरक्ताक्षी - மதகூர்ணித ரக்தாக்ஷீ --
*432* मदघूर्णितरक्ताक्षी - மதகூர்ணித ரக்தாக்ஷீ --
அம்பாளின் கருணைக்கண்கள் அங்குமிங்கும் அலை பாய்ந்து அவள் சிவந்த கண்களின் ஒளி பன்மடங்காகிறது. அம்பாள் என்றால் சிவப்பு என்று ஒரு பொருத்தம். எனவே அவள் கண்களும் சிவந்த நிறமுடையவை. ரத்தநிறமானவை என்கிறார் ஹயக்ரீவர். கருணை கடாக்ஷத்தால் சிவந்தவை. கொடுத்து சிவந்த கை என்று ஒரு மனித கர்ணனையே வர்ணிக்கிறோமே. கருணையை வாரி வழங்கும் அம்பாளின் கண்கள் சிவக்காதா?
*433* मदपाटलगण्डभूः - மதபாடல கண்டபூ:
*433* मदपाटलगण्डभूः - மதபாடல கண்டபூ:
சிவந்த கன்னங்கள் கொண்டவள் அம்பாள் ஸ்ரீ லலிதை. சந்தோஷத்தில் வருவது வெட்கம், நாணம், நாணத்தால் சிவப்பது கன்னம். இது சாதாரண பெண்களுக்கே என்றால், அம்பாளுக்கு?
பரிபூரணானந்தம் அல்லவா அவள். கன்னம் சிவக்காதா? தியானம் சதா பண்ணுபவன் பொன்னிற வர்ணம் பெறுவான். தியானமே உருவான அம்பாள் சிவப்பான கன்னம் கொண்டவளாக இருக்கமாட்டாளா? அது தான் ப்ரம்ம தேஜஸ்.
*434* चन्दनद्रवदिग्धाङ्गी - சந்தந த்ரவ திக்தாங்கீ-

உடல் முழுதும் சந்தனம் காப்பணிந்தவள் - நெருப்புக்கு சந்தன போர்வை! உஷ்ணத்துக்கு குளிர்ந்த மேல் பூச்சு.
*435* चाम्पेयकुसुमप्रिया -சாம்பேய குஸுமப்ரிய --
*435* चाम्पेयकुसुमप्रिया -சாம்பேய குஸுமப்ரிய --
சம்பக மலர்களை விரும்புபவன் ஸ்ரீ லலிதாம்பிகை.
சக்தி பீடம் ஸ்ரீ சைலம் : பிரம்மராம்பா தேவி
சக்தி பீடம் ஸ்ரீ சைலம் : பிரம்மராம்பா தேவி
இது பதினெட்டு சக்திபீடங்களில் ஒன்று. நல்லமலை என்று அஹோபிலம் செல்லும் வழியில் ஆந்திரப்ரதேசத்தில் இருப்பது ஸ்ரீ சைலம். நான் சென்று தரிசித்த பாக்யசாலி. அங்கே மல்லிகார்ஜுன சுவாமி என்கிற சிவன் ஆலயம். அதில் அம்பாள் பெயர் பிரம்மராம்பிகா தேவி. இங்கே அம்பாள் பிராம்மணி சக்திதேவி யாக வழிபடப் படுகிறாள். எட்டு கரங்கள். பட்டு புடவை சாத்தியிருக்கிறார்கள். கர்ப்ப க்ரஹத்தில் அகஸ்தியர் மனைவி லோபாமுத்திரை விக்ரஹம். கர்ப்ப க்ரஹம் முன்பு ஒரு ஸ்ரீ சக்ர யந்த்ரம்.
அருணாசுரன் என்கிற ராக்ஷஸன் பிரம்மாவிடம் வாங்கிய வரத்தின் படி அவனை நாலு கால், ரெண்டு கால் கொண்ட எதாலும் கொல்ல முடியாது. ரொம்ப யோசித்து வரம் கேட்டிருக்கிறான் ராக்ஷஸன். அந்த தைரியத்தில் தேவர்களை கொடுமை செய்தான். அம்பாள் தவமிருக்கிறாள். தேவர்கள் தொல்லை தீர அருணாசுரனை வதைக்க அவள் தன்னுடலிலிருந்து ஆயிரக்கணக்கான ஆறுகால் வண்டுகளை வெளியேற்றுகிறாள். அவை ஒரு சேர பறந்து அருணாசுரனை தாக்கி அவன் அழிகின்றான். ப்ரமரம் என்றால் தேனீ போன்ற கொட்டுகிற வண்டு. ப்ரம்மராம்பா --- தேன் வண்டுகளின் தாய் என்று அம்பாள் பெயர் . மல்லிகார்ஜுன சுவாமி என்கிற இந்த சிவன் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒன்று என்பதால் சிறந்த சிவாலயம். சதியின் உடலை தூக்கிக்கொண்டு சிவன் ஆடியபோது அவள் உடல் துண்டுகளாகி கழுத்து விழுந்த இடம் ஸ்ரீ சைலம்.
No comments:
Post a Comment