Saturday, November 20, 2021

sri lalitha sahasranamam

 



ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - நங்கநல்லூர்   J K  SIVAN  
ஸ்லோகங்கள்:  89- 90   நாமங்கள்  409 - 423
 

शिवप्रिया शिवपरा शिष्टेष्टा शिष्टपूजिता ।
अप्रमेया स्वप्रकाशा  मनोवाचामगोचरा ॥ 89॥

Shiva priya Shivapara Shishteshta Shishta poojitha
Aprameya Swaprakasha Mano vachama gochara

சிவப்ரியா சிவபரா சிஷ்டேஷ்டா சிஷ்டபூஜிதா |
அப்ரமேயா ஸ்வப்ரகாசா மநோவாசாமகோசரா || 89

चिच्छक्तिश् चेतनारूपा जडशक्तिर् जडात्मिका ।
गायत्री व्याहृतिः सन्ध्या द्विजबृन्द-निषेविता ॥ ९०॥

Chitsakthi Chethana roopa Jada shakthi Jadathmikha
Gayathri Vyahruthi Sandhya Dwija brinda nishewitha

சிச்சக்திச் சேதநாரூபா ஜடசக்திர் ஜடாத்மிகா |
காயத்ரீ வ்யாஹ்ருதி: ஸந்த்யா த்விஜப்ருந்த நிஷேவிதா || 90

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (409 -423) அர்த்தம்

*409* 
 शिवप्रिया -சிவப்ரியா -
காமேஸ்வரனின் மனதை விட்டு நீங்காதவள் ஸ்ரீ அம்பாள். அம்பாளின் நினைவும் சிவனே. இருவருமே ஒரே நினைவு என்பதானவர்கள்.

*410* 
 शिवपरा -சிவபரா --
ஸ்ரீ லலிதாம்பிகை சிவனின் நினைவு மட்டுமா? சிவனே தான் ஆனவள் அல்லவா? என்கிறார் ஹயக்ரீவர்.

*411*
 शिष्टेष्टा - சிஷ்டேஷ்டா - 
வேத சாஸ்திரங்கள் கூறும் நற்பண்பு, ஒழுக்கம், சீலம், பக்தி கொண்டவர்களை அம்பாளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

*412*  
शिष्टपूजिता - சிஷ்டபூஜிதா - 
மேலே சொன்ன பக்தர்களால் பூஜிக்கப்படுபவள் ஸ்ரீ லலிதாம்பிகை. ஞானிகள் இதிலெல்லாம் ஈடுபடாமல் மனதை ஒருநிலைப்படுத்தி அவளை ப்ரம்மமாக அனுபவிப்பவர்கள்.

*413*  अप्रमेया - அப்ரமேயா -- 
எல்லையற்றவளை, அறிந்துகொள்ளவே முடியாத, அளவிடமுடியாதவளை அளப்பது எப்படி? எங்கும் நிறைந்த பிரம்மத்தை எந்த முனையைத் தேடி பிடித்து, எப்படி அளப்பது?? கேனோபநிஷத்தில் (1.6) ஒரு அருமையான வாக்கியம் : 
''எதை மனதால் அறியமுடியவில்லையோ, எது மனதையே இயக்குகிறதோ, அந்த இந்த ஐந்து புலன்களால், பூதங்களால் சம்பந்தப்படாத விளக்கமுடியாத பரம்பொருள் உள்ளது.  அதை ப்ரம்மம் என தொழுகிறோம்''.

* 414 * 
 स्वप्रकाशा -ஸ்வப்ரகாசா -- 
தானே சுடர் விட்டு ஒளி வீசுபவள் ஸ்ரீ லலிதாம்பிகை. சூரிய ஒளியில் சந்திரன் மினுமினுக்கிறான். அந்த ரெண்டு ஒளியில் நாம் பிரகாசிக்கிறோம். அக்னி மாதிரி என்ன,  அக்னியே தான் அம்பாள்.
கதோபநிஷத் என்ன சொல்கிறது தெரியுமா? (II.ii.15)
 “ பிரம்மத்தின் முன் சூரியன் சந்திரன் மின்னல், எதுவுமே ஒளிவீசாது. பிரம்மத்தின் ஒளி பிரகாசம் எனப்படும்''

* 415 *
 मनोवाचामगोचरा - மநோ வாசாம கோசரா -
 மனதாலும் உணரமுடியவில்லை, வாயாலும் எந்த வார்த்தாயாலும் சொல்ல இயல  முடியாதது ஸ்ரீ லலிதாம்பாளின் பிரபாவம். எண்ணத்திற்கும் மொழிக்கும் அப்பாற்பட்டவள் ஸ்ரீ லலிதை. பூரண ஞானம் ஒன்றே அவளை புரியவைக்கும்.

*416*  
 चिच्छक्तिः - சிச்சக்தி -
 தூய பக்தி பிரஞை பக்தி பூர்வ ஞானம் ஒன்றே அம்பாளை புரியவைக்கும். குணங்களுக்கு அப்பாற்பட்ட நிர்குண பிரம்மத்தை சத் சித் ஆனந்தம் என்கிறோம்.

* 417 *
चेतनारूपा -  சேதநாரூபா -- 
சைதன்யம் என்பது எல்லாம் மறந்தநிலை. ப்ரம்மத்திலேயே லயித்த ஸ்வரூபம். சைதன்யத்தி லிருந்து பிரபஞ்சம் உருவாகி ரெண்டு வித ரூபங்கள். ஒன்று ப்ரக்ரிதி. வெளியே ஐம்புலன்களால் ஐம்பூதங்களால் காணப்படுவது. ஸ்தூல உருவம். மற்றொன்று நுண்ணிய சூக்ஷ்மமான உள்ளே பிரகாசிக்கும் அந்த கரணம் என்பது. வெளியுலக அனுபவம் வேறு. உள்ளுணர்வு அனுபவம் வேறு.

*418* 
 जडशक्तिः -  ஜடசக்திர் -- 
அம்பாளுக்கு ஒரு தனி சக்தி உண்டு. ஜடங்களுக்கும், சக்தியற்றவைக்கும் சக்தி அளிப்பவள். அசையா சக்தியை அசைய வைப்பவள். மாயை மூலம் ப்ரம்ம சக்தி வெளிப்படுகிறது.

*419 * 
जडात्मिका -ஜடாத்மிகா --
 ஒன்று நன்றாக புரிந்து கொள்வோம். பிரம்மத்தை தவிர்த்து அனைத்தையும் மாயை என்று உணரவேண்டும். எந்த வேதமும் சாஸ்திரமும் பிரம்மத்தை இப்படித்தான் இருக்கும் என்று சொல்லவில்லை. அதனால் அதை இல்லை என்று சொல்வதும் அஞ்ஞானம். சொல்லினால், எழுத்தினால் விவரிக்கமுடியாததை, இப்படி உணர்த்தமுடியவில்லை என்பதால் அது இல்லாததாகி விடுமா?

* 420 * 
यत्री - காயத்ரீ -- 
அம்பாள் தான் காயத்ரி, அவள் தான் காயத்ரி மந்த்ரம். இதை தான் சாந்தோக்யோபநிஷத் சொல்கிறது: (III.12.1) 
“ இதோ பார், எதெல்லாம் இந்த பிரபஞ்சத்தில் நீ காண்கிறாயோ அதெல்லாம் தான் காயத்ரி, காயத்ரி எங்கிற வார்த்தையில் எல்லாமே அடங்கும். பயத்தை போக்கும் சொல்.. காயத்ரி மந்திரம் சிறந்த ரக்ஷை. பத்ம புராணத்தில் இருந்து  ஒரு கதை  ஒரு வரியில் சொல்லட்டுமா? 
ப்ரம்மா ஒரு அக்னி ஹோத்ர யாகம் செய்ய மனைவி சாவித்ரியை உடனே அழைக்க, அவள் நான்   லக்ஷ்மி மற்றும் இதர தேவதைகளோடு வருகிறேன் என்று டிலே பண்ண, ப்ரம்மா கோபத்தோடு கிருஷ்ணனின் யாதவ குல பெண் ஒருத்தியை சாவித்ரியாக்கி அவளுக்கு காயத்ரி என்று பேர் கொடுத்தபோது விஷ்ணு ''ப்ரம்மா, நீ அவளை காந்தர்வ விவாகம் செய்துகொள் '' என்று சொல்ல காயத்ரி ப்ரம்மாவின் மனைவி ஆனாள் .

* 421*  
 व्याहृतिः -வ்யாஹ்ருதி: - 
அம்பாள் தான் அக்ஷரங்களின் இலக்கணம் ,

* 422 * 
 सन्ध्या - ஸந்த்யா - 
ஒரு அற்புதமான பெயர் இது.  ஜீவ ஆத்மாக்களும் பரமாத்மாவும் சங்கமமாவதை பிரதிபலிக்கும் நாமம்.

* 423 *
 द्विजवृन्दनिषेविता - த்விஜப்ருந்த நிஷேவித --- 
சகல ஜீவராசிகளும் மகிழ்ந்து போற்றி வணங்கும் ஒரே தெய்வம் அம்பாள் ஸ்ரீ லலிதாம்பிகை மட்டுமே தான். அன்பான தாயல்லவா?

சக்தி பீடம் : பிரயாகை மாதவேஸ்வரி, அலோபி மாதா

130 கி.மீ. வாரணாசியிலிருந்து  சென்றால் . அலகாபாத் விமான நிலையத்திலிருந்து 17 கி.மீ. தூரத்தில்  ரயில்நிலையத்திலிருந்து 6 கி.மீ. தாண்டி  ஒரு அற்புத  ஆலயம் தென்படும். அம்பாள் ப்ரத்யக்ஷமாக அருள் பாலிக்கும் க்ஷேத்ரம். 
இது பதினெட்டு சக்திபீடங்களில் ஒன்று. அம்பாளுக்கு அலோபி மாதா , லலிதா என்றும் பெயர். 

madhaveshvari mangalye prayagasthalavasini / triveni sangame tire bhuktimukti pradayini //
மாதவேஸ்வரி மாங்கல்யே பிரயாகை ஸ்தல வாஸினி  த்ரிவேணி சங்கமே தீரே புக்திமுக்தி ப்ரதாயினி

மேற்கண்ட ஸ்லோகம்  என்ன சொல்கிறதென்றால், ஒரு அலோபி மாதா  மாதவ ஈஸ்வரி என்ற நாமத்தோடு  த்யான ரூபத்தில் பிரயாகையில் வாசம் செயகிறாள், திரிவேணி சங்கமத்தில் மோக்ஷம் தருகிறவள் என்பது.

ப்ரயாகைக்கு அர்த்தம்  ''ப்ரக்ரிஷ்ட யாக''   -- ப்ரம்மா ஒரு பெரிய உன்னதமான யாகம் பண்ணிய ஸ்தலம் . ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்று. தீர்த்தங்களில் ராஜா இது. அப்படி ஒரு பெயர். கங்கை யமுனை, சரஸ்வதி சங்கமம் ஆகும் இடம். பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒரு முறை கும்ப மேளா நடக்கும் இடம். இதற்கு மேல் சிறப்பு  வேறு இருக்க முடியுமா?

அலோபி என்றால் மறைந்து போனவள் என்று அர்த்தம். சிவன் எரிந்துபோன சதியின் உடலை சுமந்து தாண்டவமாடியபோது விஷ்ணு அவள் உடலை கூறாக்கி அவை எங்கெங்கோ பூமியில் விழுந்த  இடங்கள் தான் 51  சக்தி பீடங்கள். 

சதியின் உடலிலிருந்து அவளது கை விரல்கள் விழுந்த இடம் தான் பிரயாகை மாதவேஸ்வரி ஆலயம்.இது தான் கடைசியாக அவள் உடலின் பாகம் விழுந்து அவள் மறைந்த இடம். அலோபி.
இங்கு அவள் உருவம் கிடையாது. ஒரு ஊஞ்சல். அதில் அவள் அமர்ந்திருப்பதாக ஐதீகம். ராமகிருஷ்ண பரமஹம்சரின் முக்கிய சீடர், மதத்தின் முதல் தலைவர், ராகால் எனும் சுவாமி ப்ரம்மானந்தா இங்கே அலோபியை ஒரு சின்ன குழந்தையாக மூன்று ஜடைகளோடு பார்த்தார் என்பார்கள்.
 தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...