வைணவ விண்ணொளி: நங்கநல்லூர் J K SIVAN
அபி வந்தனம்
இந்த தொடரில் சில கட்டுரைகள் இனி வரிசையாக வரப்போகிறது. இது எனக்கு ஒரு ஆனந்த அனுபவமாக இருந்தது. இதை எழுத சில புத்தகங்கள், பாசுரங்கள், வரலாறுகள், தேடி அவற்றை ரசிக்கும்போது இதுவரை ஏன் இதை அனுபவிக்காமல் விட்டோம் என்று கொஞ்சம் வருத்தமும் கூட. மனதில் உறுத்தியது வாஸ்தவம்.
இதை நீங்கள் படிக்கும்போதும் சில புது விஷயங்கள் இதுவரை தெரியாதது இருந்தால் சந்தோஷப் படுவீர்கள். தெரிந்ததேயாக இருந்தால் ''அதனால் என்ன, நல்ல விஷயத்தை ஒரு தரத்திற்கு மேல் இந்தப்பயல் மூலம் படித்தால் தப்பா என்ன? என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். இவன் என்ன புதுசாக சொல்லிவிடப் போகிறான் என்று எண்ணினால் ரொம்ப கரெக்ட். பரவாயில்லையே இவன் இதையும் கூட கொஞ்சம் தெரிந்து கொண்டிருகிறானே என்று மனதில் பட்டாலே அதுவும் ரொம்ப சந்தோஷமே.
'' வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து
நாடினேன் நாடி, நான் கண்டுகொண்டேன் நாராயணா எனும் நாமம் -- (பெரிய திருமொழி, திருமங்கை ஆழ்வார்)
மேலே கண்ட பாசுரத்துக்கு யாரேனும் அர்த்தம் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளதா? ஒரு பக்தரின் உள்ளக் குமுறல் காதில் விழவில்லையா.? எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யவில்லையே? நான் செய்வதை உணர்ந்து ஒரு நாள் திருந்தினேன். உனைத் தேடி ஓடி நாடி வந்தேன். கெட்டியாகப் பிடிபட்டாய் நீ. இனி எனக்கு உற்றதுணை உன் நாமம் ஒன்றே நாராயணா. வேறென்ன வேண்டும்?

ஆழி சூழ் உலகைக் காக்கும் அனந்த சயனன் ஆதி நாராயணனை ஆழ்ந்த பக்தியோடு அழகு சொட்டும் தமிழில் அமுதமாக பாடியவர்கள் அனேக ஆழ்வார்கள். நெஞ்சுருகும் பக்தியை கொஞ்சும் தமிழிசையில் என்றும் படித்தும் கேட்டும் மகிழவைத்தவர்கள். ஆச்சார்யர்கள் (வழிகாட்டிகள்). மகோன்னதமான வாழ்வு நமக்காக வாழ்ந்து காட்டி நாம் பின் பற்ற வேண்டியதை எடுத்துரைத்த உத்தமர்கள்.
எல்லோரையும் பற்றி சொல்ல என்னால் இயலாது என்பதை உணர்ந்து தெரிந்த விஷயங்களை, அறிந்த சில அருமையான சம்பவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்தத்தொடர் பயன்படும். அது அவ்வாறு பயன்பட்டாலே நான் தன்யனாவேன்.
இதில் வரும் உன்னத புருஷர்கள், அவதாரங்கள் ஒரு வரிசைக் கிரமாக, கால அட்டவணைக்குட்பட்டு க்யூவில் வரப்போவதில்லை. வரிசை எதுவும் கிடையாது. ஒவ்வொருவரைப் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பது தான் இதில் மேற்கொண்ட முயற்சி.

No comments:
Post a Comment