உள்ளது நாற்பது - நங்கநல்லூர் J K SIVAN பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி
30. '' நானே'' நானா, தானா?
நானா ரெனமனமுண் ணாடியுள நண்ணவே
நானா மவன்றலை நாணமநானானாத்
தோன்றுமொன்று தானாகத் தோன்றினுநா னன்றுபொருள்
பூன்றமது தானாம் பொருள்பதோன்றவே 30
ரெண்டு மனிதர்கள். ஒருவன் உண்மையான ஆசாமி. அவன் இருக்குமிடம் தெரியாமல் அமைதியாக உள்ளே இருப்பவன். மற்றவன் தன்னை அவனாக காட்டிக்கொண்டு நம்மை நம்பவைத்து சிக்கலில் ஆழ்த்துபவன். போலி. எப்போதுமே நிழல் நிஜமாக தோன்றும். போலி அசலாக காட்சி தரும். அதை நம்பும் மனித மனம் அதிகமாக எல்லோரிடமும் இருப்பதால் தான் இத்தனை துயரமும் துன்பமும் கஷ்டமும். போலி என்று உணர்ந்து, உண்மையான ''நான் '' யார் என்று தேடி அது இருக்கும் ஹ்ருதய ஸ்தானத்தை அடையும்போது போலியான ''நான்'' எனும் அஹங்காரம் அப்படியே இருக்குமிடத்தில் அடங்கிவிடும். அப்போது , மற்றது, அதாவது, உண்மையான ''நான்'' தானாக வெளிப்படும். அது போலியைப் போல தேஹ அபிமானத்தோடு கூடிய அஹங்காரம் இல்லை. பூரணமான ஸத்ய வஸ்து. ஆத்ம ஸாக்ஷாத் காரம்.
ஹ்ருதயத்திற்கு அர்த்தம் என்ன தெரியுமா? ஹ்ருத் என்றால் மையம். அயம் என்றால் இவன் என்று அர்த்தம். ஆத்மா தான் ஹ்ருதயத்தை மையமாக கொண்டது.
ஒரு குடத்தில் நீர் நிரம்பி இருக்கிறது. வெளியே இருக்கும் அந்த குடத்தைப் பார்த்தால் மேலே ஆகாயத்தின் நிறம் நீலமாக குடத்தில் நீராக காண்கிறது. அது ஆகாயம் இல்லை, அதன் பிரதிபலிப்பு. அது போல் நமது தேகத்தில் ஒரு வரம்புக்கு உட்பட்டு, ''நான்'' என நாம் அபிமானிக் கும் ''சித்'' தின் பிரதிபலிப்பு உண்மையான ஆத்மா இல்லை. குடத்தின் நீரை முழுதும் காலி செய்தால் அதில் தெரிந்த ஆகாயத்தின் பிரதிபலிப்பு, பிம்பம் மறைந்து விடும். அதனால் குடத்தில் ஆகாசம் இல்லை என்று சொல்லலாமா? ஆகாசத்தில் தான் குடம், அதனுள் இருந்த நீர், அதில் காணப்பட்ட ஆகாச பிம்பம் எல்லாமே இருந்தது. இப்போது குடம் உடைந்து விட்டது. அப்போதும் அங்கே ஆகாசம் இருக்கிறது. ஆகாசம் எங்கும் எப்போதும் இருக்கிறது அல்லவா?
ஆகாசத்தை அறிந்தவனுக்கு, அது தான் குடம், நீர், பிம்பம் என்று தெரியும். இப்படித்தான் அஹங்காரத்தை அறிந்து அதை புறக்கணிக் கவேண்டும். இது தான் தான் கடாகாஸ தத்வம்.
ஆத்மாவில் அடங்கியது தான் அஹங்காரம். ஆத்மா தான் சிதாகாசம். அதில் நமது சரீரம் ஒரு பொய்த் தோற்றம். அந்த பொய் தோற்றத்தை நாம் ''நான்'' என்கிறோம்.
No comments:
Post a Comment