Sunday, October 16, 2022

ORU ARPUDHA GNANI

 ஒரு அற்புத ஞானி-    #நங்கநல்லூர்_J_K_SIVAN


'ஒரு கப்பல் விஷயம்.'

அவர் இருந்தது கிட்டத்தட்ட  150 வருஷங்களுக்கு முன்னால்  திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு மஹான், ப்ரம்ம  ஞானி சேஷாத்ரி ஸ்வாமிகள்.    அவரைத் தெரியாதவர்கள் கிடையாது.  அவருக்கு சிஷ்யர்கள் கிடையாது. ஒரு இடம் கிடையாது. எங்கு எப்போது இருப்பார் என்று எவருக்கும் தெரியாது.  அருணாசலேஸ்வ ரர் ஆலயத்தில் அவ்வப்போது காணப்படுவார். அவருடைய பக்தர்கள் எங்கும் நிறைந்திருந்தார்கள். இன்றும் உள்ளனர்.
வேலூரில்  ஒரு பக்தை. சுந்தரம்மாள் என்று பெயர்.  திருவண்ணாமலை வந்தாள்.  ஒருநாள் அவள் ஸ்வாமிகளிடம் ''அஜபா'' என்றால் என்ன என்று கேட்டுவிட்டாள் . அவளுக்கு ஆயிரம் கோடி நன்றி.அவளால் நமக்கு ஒரு மிகப் பெரிய உபதேசம் எளிதாக கிட்டிவிட்டது. நீடூழி வாழ்க அந்த சுந்தரம்மாள் ஆத்மா.
சுவாமி இதற்கு பட்டென்று பதில் சொல்லிவிட்டார்:

''ஒரு பெரிய சமுத்திரம் இருக்கு. அதில் ஒரு பெரிய கப்பல் போகிறது. அந்த கப்பலில் ஐந்து பேர் சௌரியமாக உட்கார்ந்துண்டு போறா. இன்னொருத்தன் அதை ஓட்டறான். ரொம்ப ஜாக்கிரதையா ஓட்டணும்''

மேலே சொன்னதில் ஏதாவது உங்களுக்கு புரிந்தால் நீங்களும் ஒரு ப்ரம்ம ஞானி.   பக்தை கேட்ட கேள்விக்கும் மேலே சொன்ன பதிலும்  கேட்டவர்கள் ''இது என்ன சுத்த பேத்தல். அது ஒரு பைத்தியம்'' என்று தான் சொல்வார்கள். ஸ்வாமிகள் சொன்னது அஜபா காயத்ரி மந்த்ர தாத்பர்யம்.

அஜபா காயத்ரி எந்த வித ப்ரயத்தனத்துடனும் உச்சரிக்கப் படாமல் தானாகவே நடைபெறுகிற ஒரு காயத்ரி ஜபம். '' ஜபா'' என்றால் ஏதோ ஒரு ப்ரயத்தனத்துடன் முக்கியமான சில அக்ஷரங்களை உச்சரிப்பது அல்லவா?. ''அ--ஜபா'' என்றால் அப்படி ப்ரயத்தனத்துடன் உச்சரிக்கப் படாதது என்று அர்த்தம். எப்படி? என்று தலையை சொறியவேண்டாம்? கொஞ்சம் மெதுவாக யோசிப்போம்.

நமக்கும் தெரியாமலேயே நமது தேகத்துக்குள் ஏதோ ஒரு ஜபம் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதுதான் அஜபா காயத்ரி.

குறைந்தது ஒவ்வொருநாளும் நமது தேகத்தில் 21600 மூச்சு, ஸ்வாசம், நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதில் நமது முயற்சி ஒன்றுமே இல்லை. ''அஹம் ஸ: ஸோஹம்'' ( நானே அவன் : அவனே நான்) என்ற மந்திரம் ஒவ்வொரு உஸ்வாஸ, நிஸ்வாஸத்திலும், அதாவது  உள் மூச்சாகவும்  வெளிமூச்சாகவும்  விடாமல் போய்க்  கொண்டிருக்கிறது. இப்படி நடப்பது எல்லா  தேசத்திலும் உள்ள  எல்லார்  தேகத்திலும். இதில் ஆண் பெண், குழந்தை, பெரியவன் என்று வித்யாசமே இல்லை. தானாகவே ஓடும் சுவாச மந்திரம். இதெல்லாம் தெரியா மலே நிறைய பேருக்கு ஜனனம் மரணம் சம்பவித்து வாழ்க்கையே முடிந்து போகிறது.

ஒரு நிமிஷம். ஒரு சின்ன அப்பீல். அறிக்கை :

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்வாசத்திலும் இப்படி ஒரு காயத்ரி ஜபம் நடந்து கொண்டிருக்கிறது என்று அறிந்தால் போதும். முடியுமானால் கவனித்துக் கொண்டே வரலாம். அப்போது நாம் 21600 காயத்ரி ஜபம் பண்ணவர்களாக ஆகிவிடுவோம். அதனால் நமது தேகத்துள் அதி சூக்ஷ்மமாக இருந்து வரும் பரமாத்மாவை உணரமுடியும். இது தானய்யா ஆத்ம ஞானம் என்பது. ரொம்ப பெரிய பெரிய வார்த்தைகளால் இது புரி படா மல் மழுங்குணி மாங்கொட்டையாக நாம் இருக்கவேண்டாம்.

மேலே நான் சொன்னது ஹம்ஸ உபநிஷத்தில் வருகிறது.

அஜபா காயத்ரி ஜபம்  நமது தேகத்தில்  நடப்பதை எப்படி அறிவது? எப்படி கவனிப்பது? என்பதை தான் ஸ்வாமிகள் பூடகமாக அவருக்கே உரித்தான பாஷையில் சொல்லியிருக்கிறார்.

சமுத்திரம்: ஜனன மரண அலைகள் ஓயாது கொந்தளிக்கும் பிறப்பு-இறப்பு வாழ்க்கை.
கப்பல் : இந்த பவ சாகரத்தில் அவ்வப்போது நாம் எடுக்கும் தேகம். கப்பல் இல்லாமல் சமுத்திரத்தை  எப்படி கடப்பது?
ஸ்வாமிகள் சொன்ன  ஐந்து பேர்  யார்?சுரோத்திரம், த்வக், சக்ஷு, ஜிஹ்வா, க்ராணம் என்ற ஞானேந்திரியம் ஐந்திற்கும் உடைய அதிபதிகள் திக், வாயு, சூர்யன், வருணன், அஸ்வினி தேவர்கள்,

ஓட்டுபவன்: ஜீவன் - ஒவ்வொரு தேகத்திலும் உள்ளவன்.

ஜாக்கிரதையாக ஓட்டுவது: நானே அவன்: அவனே நான் என்ற எண்ணத்தால் மற்ற அனைத்தையும் விட்டொழித்து பரமாத்மா சிந்தனையில் ஸ்வரூப ஸ்திதியில் நிலைத்திருப்பது.

அஜாக்கிரதையாக, குடித்து விட்டு ஓட்டும் ட்ரைவர் வண்டியில் உட்கார்ந்தால் நம் கதி, வண்டியின் கதி ?இந்த ட்ரைவர் தேக கப்பலை பவ சாகரத்தில் மூழ்கடித்து விடுவான். அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்வாமிகள்.
சரீர கப்பலை ஜாக்கிரதையாக ஓட்டுவது புரிந்தால் நான் எழுதினதில் பிரயோஜனம் இருக்கிறது என்று ஆகும்.
விட்டொழித்து பரமாத்மா சிந்தனையில் ஸ்வரூப ஸ்திதியில் நிலைத்திருப்பது.

அஜாக்கிரதையாக, குடித்து விட்டு ஓட்டும் ட்ரைவர் வண்டியில் உட்கார்ந்தால் நம் கதி, வண்டியின் கதி ??இந்த ட்ரைவர் தேக கப்பலை பவ சாகரத்தில் மூழ்கடித்து விடுவான். அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்வாமிகள்.

சரீர கப்பலை ஜாக்கிரதையாக ஓட்டுவது புரிந்தால் நான் எழுதினதில் பிரயோஜனம் இருக்கிறது என்று ஆகும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...