Tuesday, October 4, 2022

MEDICARE

 


பாட்டி வைத்தியம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

எதற்கெடுத்தாலும்  ஒரு ஸ்கேன், ஒரு லேப் LAB  டெஸ்ட் எடுக்கும் காலம் இது.  சுண்டுவிரலை  கல்லில் இடித்துக்கொண்டாலும் அடுத்த நிமிடம் உச்சிமண்டைக்கு  ஒரு ஸ்கேன். கல்லீரல், முதுகெலும்பு  குதிகால்   காம்போ  டெஸ்ட் எடுத்தால்  ரெண்டு டெஸ்ட்  FREE . அதன்  மூலம் காது நாக்கு ரெண்டும் டெஸ்ட் எடுத்து விடலாம். ஆஹா  என்ன  வசதி!!  கடைசியில் ஏதாவது ஒன்றில் கோளாறு என்று சொல்லி பல ஆயிரம் குறைந்தது பிடுங்கி விடுவார்கள்.  உண்மையான  வியாதி நிவாரணத்துக்கு ஒரு விலை,  இன்சூரன்ஸ் இருந்தால் வேறு விலை  என்ற அநியாயம் தொடர்கிறது.

என்னடா உலகம்  இது, என்னடா அக்கிரமம் இதெல்லாம்.  

நாங்களும் தான் குழந்தையிலிருந்து வளர்ந்து வந்தோம். எங்களுக்கு  எக்ஸ்ரே கூட தெரியாதே.  கோபால மேனன் ஸ்டெதாஸ்கோப் வைத்து பார்ப்பார், கை நாடி பார்ப்பார். நாக்கை நீட்ட சொல்வார். கண்ணை மேலே பார்க்க சொல்லி கவனிப்பார். முதுகை தட்டிக்கொடுத்து உனக்கு ஒண்ணுமில்லை என்று ''கங்காதரா  என்று  கம்பௌண்டரை கூப்பிட்டு ஒரு காகிதத்தில் புரியாமல் ரெண்டு வரி எழுதுவார்.   கங்காதரன் அதைப் பார்த்துவிட்டு  ''என்னடா  அப்பா அம்மாவெல்லாம் சௌக்கியமா?  பள்ளிக்கூடம் போறியா? என்று கேட்டுக்கொண்டே  ஒரு பெரிய  நீல கலர் சீசா, ஒரு  ஆரஞ்ஜ் கலர் சீசாவிலிருந்து ஒரு அவுன்ஸ் க்ளாசில் ஏதோ அளவு பார்த்து ஒரு சின்ன சீசாவில் ஊற்றி குலுக்கி கொடுப்பான். ரெண்டு மூணு பௌடர்  ஜட்டியிலிருந்து  ஸ்பூன்மாதிரி நீளமாக ஒரு கரண்டி வைத்து அதிலிருந்து குட்டி குட்டி கலர் காகிதங்களில் பொட்டலம் கட்டிக்கொடுத்து இதை மூணு வேளை  சாப்பாட்டுக்கு அப்பறம்  மூணு நாள் சாப்பிடணும் என்று கொடுப்பான்.  ரெண்டு ரூபாய்  மருந்துக்கு டாக்டர் பீஸ் எல்லாம் சேர்த்து வாங்கி கொள்வான். காசு இருக்கா  என்று கேட்பான்.  இல்லை என்றால் அப்பா பேரில்   நோட் போக்கில் எழுதிக் கொள்வான்.

இப்படி  கோபால மேனன் போல டாக்டர்களிடம் கூட போகாமல் வீட்டிலேயே  தாத்தா பாட்டிகள், பெரியம்மா, அத்தைகள் எல்லா வியாதிகளுக்கும் பாட்டி வைத்தியம், மூலிகை  மருந்து வைத்திருந்தார்கள்.  உதாரணமாக  வசம்பு என்று கசப்பாக ஒரு   வேர்.  மருந்து. அதற்கு  பிள்ளை வளர்ப்பான் என்று பேர். அதை விளக்கெண்ணெய்  விளக்கில்  சுட்டு அந்த கரியை தொப்புளை சுற்றி விளக்கெண்ணையோடு தடவு வார்கள்.  வெற்றிலையை விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் வாட்டி வயிற்றின் மேல் தடவுவார்கள். 

இப்படி வயிற்று வலி போன இடம் தெரியாமல் எத்தனையோ குழந்தைகள் வளர்ந்திருக்கிறது. இன்று வரை   80-90ல்  இருக்கிறது.  
முழங்கால்,  கை  கால் எலும்பு அடிபட்டு வீக்கம் இருந்தால் மூசாம்பரம் என்று கருப்பாக ஒரு கட்டியைப்  பொடி செய்து  நல்லெண்ணையில் சுடவைத்து சுடச் சுட  முட்டி கால் கை  எல்லாம் தடவி விடுவார்கள்.  விறுவிறுவென்று இருக்கும்.  வீக்கத்தை எல்லாம் வடித்துவிடும். கரிப்பவளம்  என்று கூட அதற்குப்  பெயர்.  

ஒவ்வொரு வியாதிக்கும் ஒரு நாட்டு மருந்து அவர்களுக்குத் தெரியும். இதற்கு கை  வைத்தியம் என்று பெயர். இப்போது கூட சில இடங்களில் நாட்டு மருந்து கடைகள் இருக்கிறது. எனக்கு தெரிந்த சில மருந்துகளை இன்னும் நான் அங்கே வாங்கிக்கொண்டு தான் வருகிறேன் வீட்டில் சிரிப்பார்கள்.  மைலாப்பூரில் டப்பா செட்டி கடை  பிரபலமான நாட்டு மருந்து கடை. இன்னும் இருக்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...