Thursday, October 20, 2022

geetha govindham

 கீத கோவிந்தம் -  நங்கநல்லூர்  J K  SIVAN ஜெயதேவர்.


''ராதிகா...... கிருஷ்ணா.''


நாம்  கோபமாக, சோகமாக இருக்கும்போது பாடுவோமா,  ஆனால்  சினிமாவில் பாடுவார்கள்.   தூணைக் கட்டிக்கொள்வார்கள். காடு வனாந்தரம் எல்லாம்  மேட்டிலும்  பள்ளத்தில் கிழிந்த துணியோடு நடப்பார்கள்.  அதெல்லாம் கருப்பு வெளுப்பு கலர் பட காலத்தில்.  நம்மால் அப்படி பாட முடியாது.  இந்த மாதிரி நேரங்களில் யாருக்கும் பாட்டு வராது.  பாட்டு பாடினாலும் எவரும் கேட்கும்  மூடில்  MOOD  இருக்கமாட்டார்கள்.   பாட்டு என்பது  சந்தோஷத்தின் அறிகுறி. பாடத்தெரியாதவனையும் பாடச்  செய்வது. 


 உடல் மேல்  குளிர்ச்சியாக  ஜலம்  விழும்போது    ''கோடையில் இளைப்பாற்றிக் கொள்ளும்.''   பாட்டு  தப்பு தப்பாக  அபஸ்வரமாக குளியலறையிலிருந்து   மூடிய  கதவைப் பிளந்துகொண்டு வெளியேறுகிறது .  உள்ளே இருக்கும் சந்தோஷம் அது.   சங்கீத  ஞானம் இல்லை.   ஒரு முக்கிய விஷயம்.   கர்நாடக சங்கீதம் தான் சந்தோஷம் என்பது இல்லை.  'நான் ஒரு முட்டாளுங்க...'' பாட்டு கூட  ரசித்து பாடியிருக்கிறேன்.  தெருவெல்லாம்  ''நான் முட்டாளாக''  இருப்பதை அறிவித்துக்கொண்டு  சைக்கிளில் சென்றிருக்கிறேன்.


ஜெயதேவர் அஷ்டபதியில்  ஒரு பாட்டு. ஒவ்வொருவர் ஒவ்வொரு வித ராகத்தில் பாடினாலும்  சுவை குன்றவில்லை.  பாலமுரளி கிருஷ்ணாவின்   ''ராதிகா  கிருஷ்ணா''  என்ற அடிகள் மனதை வருடுகிறது.


Äväso, vipinäyate priya-sakhi maläpi. Jäläyate…

Täpo’pi nish-vasitena, däva-dahana-jväla kaläpäyate |

säpi tvad-virahena, hanta harini-rüpäyate, hä katham

kandarpo’pi yamäyate, viracayan, shärdüla-vikreditam ||


பிருந்தாவனத்தில்  ராதாவுக்கும்  கிருஷ்ணனுக்கும் அடிக்கடி  பிணக்கு வரும் . அவர்கள் சண்டை சச்சரவு  குழந்தைகளின் சண்டை.  காரணம் காரியம்   இல்லாமல்  உருவாகுபவை. க்ஷண நேரத்தில் மறந்து போகும் தன்மையுடையவை.   அன்பின் வெளிப்பாடைக்  காட்ட  நாம்  பேரக்குழந்தைகளை  “நாய்க்குட்டி, திருட்டு குட்டி'' என்று கொஞ்சும்போது அவமரியாதையோ கேவலமோ அதில் இல்லை.  அளவு கடந்த வாத்சல்யம். ராதை கிருஷ்ணன்  சண்டையும் அப்படித்தான். இருவருக்குமிடையே ஒரு தோழி கண்டிப்பாக  ஜெயதேவர் பாடல்களில் வருவாள்.   ''ஸகி '' என்று பாடுவார்.

ரெண்டு நாளாக கிருஷ்ணன் ராதை சந்திப்பு இல்லை. 

அந்த ஸகி  ராதைக்காக பரிந்து பேசிக்கொண்டு கிருஷ்ணனிடம் தூது போகிறாள். இந்த காட்சியைத்  தான் ஜெயதேவர் இந்த அஷ்டபதியில் அற்புதமாக வர்ணிக்கிறார்.


''கிருஷ்ணா,  என் தோழி  ராதா  ஒரு மான் மாதிரி.   அவள் தேஹம்  தான் காடு. அவளை சுற்றி எத்தனை வேடர்கள்... வலை வைத்து  ஆயுதங்களுடன்  அந்த மானைப்பிடிக்க முயற்சிக்கிறார்கள்.   அந்த காடு , அது தான், அவள் தேகம், பற்றிக்கொண்டு எரிகிறது.   நெருப்பு  என்ன தெரியுமா?  உன்னைக் காணாத ஏக்கம்.  அவளை வாட்டுகிறது. புலி  மானைக்  குறி வைத்து பாய்வது போல...அதற்கு இன்று மான் தான்  பசிக்கு காலை உணவு. 


stana-vinihitam api hara mudaram |

sa manute krusha-tanurati bharam |

radhika krishna radhika | radhika virahe tava kesava (radhika krishna radhika)| |1||


“கேசவா, இதைக் கேள்.  ராதையின்  உடம்பு ஒல்லிக்குச்சியாக மெலிந்து விட்டது  உன்னைக் காணாமல். உனக்கு தெரியுமா இது?    அவள் உடல் சூட்டைத் தணிக்க நான் நிறைய குளிர்ந்த மலர்மாலைகளை தொடுத்து கழுத்தில் அணிவித்தேன்.  அடக் கடவுளே,   அவளைக் குளிர்விப்பதற்கு பதில்  அந்த மாலைகள்  நெருப்பாக கொதிக்கிறது.  பெரும் சுமையாக இருக்கிறது அந்த  மாலை  அவள் மெலிந்த உடலில்.  


அந்த காலத்தில்  ஒன்பது வயது குழந்தைக்கு கல்யாணம். அதற்கு 18 முழம் தடியான, கனமான  புடைவை கட்டி விடுவார்கள்.  எங்க அம்மாவுக்கு அந்த அனுபவம் உண்டு.


sarasama sruna mapi malayaja-pankam |

pasyati vishamiva vapushi sashankam |

radhika krishna radhika – tava virahe kesava (radhika krishna radhika)||2||


கேசவா,  இன்னும் இருக்கிறது கேள் சொல்கிறேன்.  சில்லென்று  கெட்டியாக  சந்தனக்  குழம்பு பூசினேன். ஐயோ ,  இந்த விஷம் வேண்டாம் என்று கத்துகிறாள். எல்லாம் உன்னைக் காணாததால் வந்த வினை.  ”


svasita-pavanam anupama-parinaham |

madana-dahana miva vahati sadaham |

radhika krishna radhika – tava virahe kesava  (radhika krishna radhika)||3||


அவள் விடும் மூச்சு இருக்கிறதே, கொல்லன் உலைக்களம் . போதுமா? ”


disi disi kirati sajala-kaa-jalam |

nayana-nalinam iva vigalita-nalam |

radhika krishna radhika – tava virahe kesava (radhika krishna radhika) ||4||


அவள்  தாமரைக்  கண்கள்  ஓயாமல்   நாலா  பக்கமும் மழைத் தூற்றல் போல் கண்ணீர் வடிய  உன்னைத் தேடுகிறது.  தாமரை மலர் மேல் நீர்த்துளிகள் போல்  கன்னத்தில் வழிகிறது கிருஷ்ணா.


nayana-vishaya mapi kisalaya-talpam |

kalayati vihita-hutasa-vikalpam |

radhika krishna radhika – tava virahe kesava (radhika krishna radhika)||5||


நிறைய  தாமரை இதழ்களை அவள் படுக்கை மேல் போட்டால் என்ன சொல்கிறாள் தெரியுமா.  ஐயையோ , இந்த நெருப்பு துண்டங்களை வீசி எறியேன்.  சுடுகிறதே'' என்கிறாள். 


tyajati na pani-talena kapolam |

bala-shashinam iva, sayam alolam |

radhika krishna radhika – tava virahe kesava (radhika krishna radhika) ||6||

 

சிவந்த குழந்தைக் கரங்கள் அவளுக்கு.  கன்னத்தில் கை யூன்றி தனியே  வானத்தை பார்த்து உட்கார்ந்து கொள்கிறாள்.  வானத்தில்  அந்தி மயங்கும் நேரத்தில்  பளிச்சென்று பூரண சந்திரன் வட்ட நிலாவாக காண்பது போல் இருக்கிறாள்.


haririti haririti japati sakamam |

viraha-vihita-maraneva nikamam |

radhika krishna radhika – tava virahe kesava (radhika krishna radhika)||7||


கிருஷ்ணா  கடைசியாக ஒரு வார்த்தை.  ராதிகா இனிமேல் அவ்வளவு தான்.  முடியப்போகிறாள்.  நீ தான் காரணம்.  உன்னைக்  காணாதது தான்  முக்கிய காரணம்.  அவளது வாய் ஜெபிக்கிறது   என்ன தெரியுமா:   ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி.உன்னைச் சரணடையவேண்டும்.


sri-jayadeva-bhanitam iti gitam |

sukhayatu kesava-padam upanitam |

radhika krishna radhika – tava virahe kesava (radhika krishna radhika)||8||


இந்த பாட்டை இயற்றிய  ஜெயதேவர்  கடைசியில்  என்ன சொல்கிறார்?  இந்த ஜெயதேவன் பாட்டு கிருஷ்ணனின் பக்தர்களுக்கு  பரம சந்தோஷத்தை எந்த கண்டிஷனும் இல்லாமல்  குளுகுளு வென்று  ஆனந்தமாக  அளிக்கட்டும்.


இந்த முழுப்பாட்டும்  பாலமுரளி கிருஷ்ணா பாடவில்லை,  ஒரு பல்லவி ஒரு சரணம் மட்டும் தான். அதில் நான் ரொம்ப ரசித்தது  கிருஷ்ணா என்று அவர் அழைக்கும்  சுகம்.   வானத்தைத் தொட்டு  மெல்லிதாக  கீழே இறங்கி பக்தி ரசத்தின் மென்மை யோடு இதயத்தில் புகுகிறது.  நானும் பாடிப்பார்த்தேன். . நான்  BATHROOM  சிங்கர்.  மேலே முதல் பாராவை மீண்டும் படிக்கவும் 


https://youtu.be/bMtR_bakjV4

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...